Health and computer

penguin animated gifs

Wednesday, 3 November 2010

விசுவல் டிக்ஷ்னரி

 விசுவல் டிக்ஷ்னரி

 
 
 
 
15 தலைப்புகளில் ஏறத்தாழ 6000  படங்களுடன் இந்த டிக்ஷனரி உள்ளது.
 இதுவரை வேறு எந்த டிக்ஷனரியும்
 இவ்வாறு பொருள் கூறியதில்லை.

டிக்ஷனரிக்குப் பெயர் பெற்ற மெரியம்
 வெப்ஸ்டர் (MerriamWebster) அண்மையில்
 ஒருவிசுவல் டிக்ஷனரியை இணையத்தில்
 வெளியிட்டுள்ளது. அதனை
 http://visual.merriamwebster.com/  என்ற
 முகவரியில் காணலாம். அது என்ன விசுவல்
 டிக்ஷனரி என்கிறீர்களா? சொற்களுக்கு
 பொருள் தருவது மட்டுமின்றி அது குறித்த
 படங்கள் காட்டப்படும்.
இந்த படங்களை வைத்தும் பொருளைத்தேடிக்
 கண்டறியலாம். இந்த தளத்தின் மெயின்
 பக்கத்தில் படப் பட்டியல் ஒரு புத்தகத்தின்
 பொருளடக்கம் போலக் காட்டப்படும். இதில்
 உள்ள தலைப்பிலிருந்தும் இந்த டிக்ஷனரியைப்
 பயன்படுத்தலாம். அல்லது இந்த தளத்தின்
 ஒரு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மெனு
 வழியாகவும் டிக்ஷனரியைப் பயன்படுத்தலாம்.
 15 தலைப்புகளில் ஏறத்தாழ 6000 படங்களுடன்
 இந்த டிக்ஷனரி உள்ளது. இதுவரை வேறு எந்த
 டிக்ஷனரியும் இவ்வாறு பொருள்
 கூறியதில்லை. வானியியல், பூமி, செடிகளும்
 தோட்டமும், விலங்குகள் உலகம்,மனிதர்கள்,
 உணவும் சமையலறையும், வீடு, ஆடைகளும்
 பொருட்களும், கலையும் கட்டடக் கலையும்,
 தொலை தொடர்பு, வாகனங்களும்
 இயந்திரங்களும், மின் சக்தி, அறிவியியல்,
 சமுதாயம் மற்றும் விளையாட்டுக்கள் எனப்
 பல தலைப்புகள் உள்ளன.

மெயின் பக்கத்தில் எப்படி ஒரு சொல்லுக்கு அல்லது படத்திற்கு பொருள் கொள்வது
 என்று எடுத்துக் காட்டு தரப்பட்டுள்ளது.
 எடுத்துக் காட்டாக ஒரு ஸ்ட்ரா பெரி பழம்
 தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்தால்
 எத்தனை வகை ஸ்ட்ரா பெரி உள்ளது. அதன்
 பாகங்கள் என்ன என்ன? என்று
 காட்டப்படுகிறது. இதைத் தேர்ந்தெடுத்தபடியே
 சமையலறை சென்றால் சமையலில் எந்த
 உணவிற்கு இது இணையாக இருக்கும் என்று
 காட்டப்படுகிறது.

இப்படிக் காட்டப்படுகையில் ராஸ்ப் பெரி

 போன்ற மற்ற பழங்களின் படங்களும்
 காட்டப்படுகின்றன. அவற்றையும் கிளிக்
 செய்து தகவல்களைப் பெறலாம். இந்தப்
 பக்கத்தின் மேலாக இந்த வார விளையாட்டு
 (Game of the Week) என்று ஒரு பகுதி உள்ளது.
 எந்த அளவிற்கு உங்களுக்கு சில சொற்கள்
 குறித்துத் தெரியும் என்பதனை இந்த பகுதியில்
 அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக நான்
 ட்ரம்பட் என்பது குறித்து பார்த்தேன்.
அதன் பல்வேறு பகுதிகளின் பெயர்கள் என்ன
 என்பது குறித்து சொற்களைத் தெரியப்படுத்த
 வேண்டியதிருந்தது. தவறாக ஏதாவது
 சொல்லைத் தந்தால் டிங் என்று ஒரு ஓசை
 கேட்கிறது. உங்களுக்கு அதன் பகுதிகளுக்கான
 பெயர்கள் தெரிய வேண்டியதில்லை என்றால்
 டிக்ஷனரியே ஒரு பட்டியல் தரும். நீங்கள் சரி
 என்று நினைக்கும் சொல்லை எடுத்து
 இழுத்துப் போட வேண்டும். அது சரியான சொல்
 என்றால் ஏற்றுக் கொள்ளும். இல்லை என்றால்
 ஒலி எழுப்பும்.



அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கருணாகரன்.

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்