Health and computer

penguin animated gifs

Saturday, 11 September 2010

பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?

பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?



















கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு
 கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள்
ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர்
 பணிகளை மேற் கொள்கிறீர்களா?


அவை எல்லாம் உங்கள் வீட்டில்
 உள்ள கம்ப்யூட்டரைப் போல்
 பாதுகாப்பானவையாக இருக்காது.
எனவே கவனமாகத்தான் இவற்றைப்
பயன்படுத்த வேண்டும். குறிப்பான
ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.


1.
என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில்

 உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக்
 கையாளும் வேலையை வைத்துக்
கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில்
ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற
வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம்.
 இவை திருட்டுத்தனமாக உங்கள்
அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப்
பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம்.
 இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து
 பணம் பறிபோகும் வாய்ப்புண்டு.


2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள்

 அல்லது வருமான வரி சம்பந்தமான
பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில்
விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர் கள்
அல்லவா? அதுபோல பொதுக்
கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம்
 அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார்
செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது
 சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில்
இருந்து அழித்துவிடவும். ரீசைக்கிள்
பின்னில் கூட இருக்கக் கூடாது.


3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம்

எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது.
 இதனாலும் உங்கள் பெர்சனல்
தகவல்கள் போக வாய்ப்புண்டு.


4. பொதுக் கம்ப்யூட்டர்களில்

 இன்டர்நெட் பிரவுசிங் செய்து
முடித்தவுடன் இன்டர்நெட்
 எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி
போல்டரில் உள்ள பைல்களை
அழித்துவிடுங்கள். இன்டர்நெட்
எக்ஸ்புளோரரில் Tools, Internet Options
 சென்று Delete பட்டனைத் தட்டி
அழித்துவிடுங்கள். அல்லது
 Delete All பட்டனைத் தட்டுங்கள்.


5. இன்னொரு சின்ன வேலையும்

பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை
ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம்
சொச்சம் மெமரியில் இருக்கும்
பைல்களை அழித்துவிடும்

kPz;Lk; re;jpg;Nghk;
gphpaKld; fUzhfud;.



 

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive