1. http://www.downloadsquad.com/ : இந்த தளம்
சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில்
அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து
இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட்
செய்யப்படும். மிகவும் பயனுள்ள
தகவல்களைத் தருகிறது.
2. http://www.gmailtips.com/ : கூகுள்
மெயில்பயன்படுத்துபவர்களுக்கான
தகவல் களஞ்சியம். அதிகமான
எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ்
மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.
3. http://www.thegreenbutton.com/ :
விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன்
குறித்த அனைத்து தகவல்களுக்கும்
இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும்.
லேட்டஸ் அப்டேட் பைல்களைத்
தருவதோடு டவுண்லோட் செய்திட
சில புரோகிராம்களையும் தருகிறது.
4. http://www.stopbadware.org/ : இது
பக்கத்துவீட்டு காவல்காரன் போல
செயல்படுகிறது. ஏதேனும் மோசமான
விளைவுகளைத் தருவதற்கென்றே
உருவாக்கப்படும் தளங்கள் குறித்த
தகவல்களைத் தருகிறது. இது போன்ற
தளங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து
வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின்
அடிப்படையில் மோசமான தளங்கள்
மற்றும் புரோகிராம்களின் பட்டியலை
அளிக்கிறது.
வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது.
6. http://www.techdirt.com/ தொழில் நுட்ப
உலகின் தில்லுமுல்லுகள் மற்றும்
முக்கிய செய்திகள், ஆய்வு முடிவுகள்
ஆகியவை குறித்து சுருக்கமான
தகவல்களைத் தருகிறது. |
7. http://www.tweakguides.com/ உங்கள்
சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை
அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான்
நீங்கள் செல்ல வேண்டிய தளம்.
விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள்
என அனைத்தையும் இந்த தளம் மூலம்
மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை
புதுப்பிக்கலாம்.
9.http://www.goaskalice.com/ அமெரிக்க
கொலம்பியா பல்கலைக் கழகம்
நடத்தும் மெடிக்கல் இணைய தளம்.
சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத்
தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல்
இங்கு கேள்விகளை இடலாம். சரியான
முறையான பதில் கிடைக்கும்.
10. http://www.thefreedictionary.com/ ஆன்
லைனில் உள்ள அருமையான டிக்ஷனரி.
ஒரு சொல்லுக்குப் பொதுவான பொருள்
மட்டுமின்றி, மருத்துவம், சட்டம்,
கம்ப்யூட்டர், நிதிச் சந்தை தொடர்பான
பொருளும் தரப்படும். இவற்றுடன் ஒத்த
பொருள் தரும் சொற்கள். எதிர்ப்பதங்கள்,
பழமொழிகள், வழக்குச் சொற்களும்
இந்த தளத்தில் கிடைக்கின்றன.
11. http://www.webmath.com/ ஒரு
பெயிண்டர் ஒரு அறையை எட்டு மணி
நேரத்திலும் இன்னொருவர் 10 மணி
நேரத்திலும் வெள்ளை அடித்தால் இருவரும்
சேர்ந்து எவ்வளவு நேரத்தில் வெள்ளை
அடிப்பார்கள்? என்ன
– இதெல்லாம் ஸ்கூலில்
முடித்து வந்தாச்சே ! இப்போ எதுக்கு
என்கிறீர்களா? இதைப் போன்ற கணக்குகள்
மற்றும் அல்ஜிப்ரா, கால்குலஸ் எனப்
பல பாடப்பிரிவுகளுக்குத் தீர்வுகளை
இந்த தளம் தருகிறது.
12.http://www.worldwidewords.org/ ஆங்கிலச்
சொற்கள் குறித்து தெரிந்து கொள்ள
அருமையான ஓர் தளம். ஒரு சொல்லை
எடுத்துக் கொண்டு அதன் பல பரிமாணங்களை
இந்த தளம் எடுத்துச் சொல்கிறது.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கருணாகரன்.