கம்ப்யூட்டர் ஒரு நல்ல பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. பாடல்களையும்
வீடியோ காட்சிகளையும் நம் வசத்தில்
வைத்துக் கொண்டு பார்ப்பதற்கு
கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் பல
உண்டு. இருப்பினும் வெகுகாலமாக முதலில்
பாடல் கேட்பதற்கு மட்டும் பயன்பட்டு
தற்போது வீடியோ காட்சிகளையும்
பார்ப்பதற்கு உதவிடும் எளிய இனிய
சாதனமாக இருப்பது விண் ஆம்ப் என்னும்
புரோகிராம் தான். இலவசமாகக் கிடைக்கும்
இந்த புரோகிராம் இல்லாத கம்ப்யூட்டரே
இல்லை எனலாம்.
விண் ஆம்ப் புரோகிராமை மீடியா பிளேயர்
என வகைப்படுத்துகிறோம். இங்கு மீடியா
என்பது ஆடியோ மற்றும் வீடியோவினைக்
குறிக்கிறது. இது இலவசமாகக் கிடைக்கும்
புரோகிராம் என்பது இதன் சிறப்பு. இதனை
http://www.winamp.com/ என்ற இணைய
தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக்
கொள்ளலாம். மேலும் சில தளங்களும் இந்த
புரோகிராமை இறக்கிக் கொள்ள
உதவுகின்றன. எடுத்துக் காட்டாக
http://www.download.com/ என்ற தளத்தைக்
கூறலாம்.