கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் டாஸ்க் பாரினைக் கீழாக வைத்திருக்க எண்ண மாட்டார்கள். ஒரு சிலர் அதனை வலது அல்லது இடது புறமாக நெட்டுவாக்கில் வைத்திருக்க விரும்பலாம். இதனை எப்படி அமைக்கலாம்? முதலில் டாஸ்க் பார் Lock ஆகியிருக்கிறதா என்று பார்க்கவும். செய்யப்பட்டிருந்தால் அதனை Unlock செய்திட வேண்டும். இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Lock the Taskbar என்னுமிடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மவுஸின் இடது பட்டனைக் கொண்டு டாஸ்க் பாரின் ஏதாவது ஒரு இடத்தில் கிளிக் செய்தபடி பட்டனை விடாமல் இழுக்கவும். டாஸ்க் பார் உயர்ந்து வரும். விரும்பும் இடத்தில் அதனை அமைத்து பட்டனை விட்டுவிடவும். பின் டாஸ்க் பாரின் அகலத்தை அட்ஜஸ்ட் செய்திடலாம். நீங்கள் விரும்பும் இடத்தில் விரும்பும் வகையில் அமைந்துவிட்ட பின் மீண்டும் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து டாஸ்க் பாரினை லாக் செய்திடவும்.
எனது வலைபூவிற்கு வருகை
தந்ததிக்கு நன்றி
பிரியமுடன்
கருணாகரன்