குழந்தை வளர்ப்பிற்கு ஒரு வெப்சைட் நம் வாழ்வில் நாம் மகிழ்ச்சியாகக் கழிக்கும் தினங் கள் நம் குழந்தை வளர் வதைப் பார்த்து சந்தோஷப்படும் நாட்களே. குழந்தைக்கு உடல் நலத்திற்கு ஏதேனும் பாதிப்பு வந்தால் துடித்துப் போகிறோம். உடனே எத்தனை வழிகளில் மருத்துவம் உள்ளதோ அனைத் தையும் பார்க்கிறோம். உடல் நலம் சரியாகும் வரை சரியாக நாம் சாப்பிடாமல் தூங்காமல் நம் உடல் நலத்தைப் பாழாக்கு கிறோம். இதனை உணர்ந்தே பெற்றோர்களுக்கு குழந்தையின் உடல் நலம் குறித்துச் சொல்லும் இணைய தளங்கள் பல உள்ளன. அவற்றில் சிறந்த ஒன்றை காண நேர்ந்தது. இதன் முகவரி http://kidshealth. org/ இந்த தளம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. பெற்றோர், குழந்தை மற்றும் இளம் வயது. |
முதல் பிரிவில் குழந்தை பிறப்பு
மற்றும் வளர்ப்பு குறித்து பல
பிரிவுகள் உள்ளன. பொதுவான
உடல்நலம், நோய் பற்றுதல்,
உணர்ச்சிகளும் செயல்பாடுகளும்,
வளர்ச்சியும் முன்னேற்றமும்,
சத்தான உணவு மற்றும் பொருந்திய நலம்,
கர்ப்ப காலம் மற்றும் புதிய பிறப்பு,
மருத்துவ பிரச்னைகள், நல்ல பெற்றோர்கள்,
முதல் உதவி மற்றும் பாதுகாப்பு, மருத்து
வர்களும் மருத்துவ மனைகளும், செய்தி
மற்றும் தகவல்கள். இதில் தினந்தோறும்
கேள்வி பதில் பிரிவுகளும் உள்ளன.
அடுத்ததாக சிறு குழந்தைகள் பிரிவில்
அவர்கள் வளரும் ஒவ்வொரு
சூழ்நிலைக்கேற்ப பல பிரிவுகள்
தரப்பட்டுள்ளன. உடல்நலத்தைப்
பேணுவது, உணவு வகை, ஒவ்வொரு
நாளும் வரக்கூடிய உடல் நலப்
பிரச் னைகள், மருத்துவ துறைக்கான
சொற்கள், வளரும் நிலையில் வரக்கூடிய
நோய்கள் என்ற பிரிவுகளில் நிறைய
தகவல்கள் தரப்பட்டுள்ளன. இளம்
வயது என்ற பிரிவில் எண்ணங்கள்,
உடல் போக்கு, நலமான பாலியியல்,
சரியான உணவு, மருந்து மற்றும்
, நோய்கள், தொற்று நோய்கள் மற்றும்
சரியான பள்ளிகள் எனப் பல பிரிவுகளில்
தகவல்கள் கிடைக்கின்றன. பல தலைப்பு
களில் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
குழந்தை வளர்ப்பு பற்றி அறிய விரும்பு
வோருக்கான அருமையான தளம் இது.
http://kidshealth.org/
kPz;Lk; re;jpg;Nghk;
gphpaKld; fUzhfud;.