மவுஸ் திடீரென்று கன்னா
பின்னா எனச் செயல்படும்.
மவுஸின் வீல் திடீரென
ஆரம் ஒடிந்த சக்கரம் மாதிரி அங்கங்கே
முட்டி மோதி நிற்கும். நமக்கோ
கம்ப்யூட்டரில் வேலை பார்க்க
முடியவில்லையே என எரிச்சலும்
சிரமமும் அடைவோம்.
மவுஸில் உள்ள வீல் என்ன சாகாவரம்
வாங்கி வந்த பொருளா? எல்லா
பொருளையும் போல அதுவும் ஒரு
நாள் தன் பலம் இழந்து செயல்படாமல்
நிற்கத்தான் செய்திடும். வீல் எந்த நிலையில்
இருந்தாலும் அதனை ஓரளவிற்குச் சரி
செய்து சுழலும் வீலாக மாற்றலாம்.
இது Mouse Properties விண்டோவில் கிடைக்கும். இந்த விண்டோவைப் பெற்றுக் காண Start, Control Panel செல்லுங்கள். அங்கே உள்ள Mouse என்னும் லிங்க்கில் அடுத்ததாகக் கிளிக்கிடவும். இப்போது Mouse Properties பாக்ஸ் கிடைக்கும். இதில் உள்ள டேப்களில் Wheel டேபில் கிளிக் செய்திடவும். இங்கே ஒரு நேரத்தில் மவுஸ் எத்தனை வரிகளைக் கடக்கும் என செட் செய்யப்பட்டிருக்கும். வழக்கமாக இது மூன்று வரிகளைக் கடக்கும் என்பதற்கேற்ப செட் செய்யப்பட்டிருக்கும்.
இதில் எண்களை மாற்றி வீலை உருட்டிப்பார்க்கவும். வீல் சரியாக உருண்டு திரையில் நன்றாக செயல்படுகிறது என்றால் செட் செய்தபடி விட்டுவிடலாம். ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். அப்படியும் செட் ஆகவில்லை என்றால் மறுபடியும் வீல் டேபில் கிளிக் செய்து அதில் “One screen at a time” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து ஓகே செய்திடவும். விண்டோஸ் பழைய பதிப்புகளில் “One page at a time” என்று இருக்கும். இதனைத் தேர்ந் தெடுத்தால் மவுஸ் கொஞ்சம் மெதுவாக வேலை செய்யக் கட்டளை கொடுக்கப்படுகிறது. எனவே மவுஸின் வீல் நன்றாக வேலை செய்திடத் தொடங்கலாம்.
உங்களிடம் மைக்ரோசாப்ட் மவுஸ் இல்லாமல், எடுத்துக் காட்டாக லாஜிடெக், இருந்து இதைப் போல வீல் பிரச்னை செய் தால் மவுஸுடன் இன்ஸ்டாலிங்க் புரோகிராம் ஒன்று சிடியில் தந்திருப்பார்கள்; அதன் குறிப்பு புத்தகத்தை வைத்துக் கொண்டு அந்த புரோகிராமினைப் பயன்படுத்தி சரி செய்திடப் பார்க்கவும். அல்லது மவுஸுடன் வந்த இன்ஸ்டாலிங் புரோ கிராமின் மூலம் மீண்டும் இன்ஸ்டால் செய்து பார்க்கவும்.
இந்த புரோகிராமிற்கு அப்டேட் இருந்தால் அதனையும் டவுண் லோட் செய்து வீலைச் சரி செய்திடவும்.
இவ்வளவு செய்தபின்னும் மவுஸ் வேலை செய்திடவில்லை என்றால் உங்கள் மவுஸ் திருத்தப்பட முடியாத அளவில் கெட்டுப் போய்விட்டது என்று பொருள். எனவே புதிய மவுஸ் வாங்கிப் பயன்படுத்தவும். இப் போதெல்லாம் மவுஸின் விலை குறைவாகத்தானே உள்ளது.