Health and computer

penguin animated gifs

Monday, 25 October 2010

சந்தோஷத்திற்கு ஒரு வெப்சைட்

சந்தோஷத்திற்கு ஒரு வெப்சைட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  


நாம் அனைவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க
 வேண்டும் என்று விரும்புகிறோம். பல கோடி ரூபாய்
 கிடைத்துவிட்டால் மட்டும் சந்தோஷமாக இருக்க
 முடியாது. எது சந்தோஷம்? எப்படி சந்தோஷமாக
 இருக்கலாம்? சந்தோஷத்தை எப்படி அளக்கலாம்?
 அதற்கான டெஸ்ட் என்ன? சந்தோஷமாய் இருக்க பல
டிப்ஸ் என முழுக்க மகிழ்ச்சியாய் இருப்பது குறித்த
 தகவல்களுடன் ஓர் இணைய தளம் உள்ளது. இந்த
 தளத்தை
 http://news.bbc.co.uk/1/hi/programmes/happiness_formula/ 
  என்ற முகவரியில் பார்க்கலாம்.
நீங்கள் ஒரு நிறுவன அதிகாரி. வயது 49. பூங்கா
 ஒன்றிற்குப் போகிறீர்கள். அங்கு சிறுவர்கள் ஆடும்
 ஊஞ்சல் ஒன்று இருக்கிறது. சுற்றும் முற்றும்
 பார்க்கிறீர்கள்; ஒருவரும் இல்லை. உடனே அதில்
 அமர்ந்து ஆசை தீர ஐந்து நிமிடம் ஆடுகிறீர்கள்.
 சந்தோஷம் தாங்கவில்லை. இதை மிச்சம் இருக்கும்
 வாழ்நாள் பூரா நினைப்பீர்களா இல்லையா? இப்படி
 பல நிகழ்வுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.


நம் முன்னால் நம்மை வழி நடத்தும் நாய்க்குட்டி,
 வீட்டில் பொக்கை வாய் காட்டிச் சிரிக்கும் குழந்தை,
 நண்பன் சந்தோஷமாய்ச் சிரிக்கும் சிரிப்பு, பொன்
 வறுவலில் சிக்கன் பீஸ், கும்மாளமாய் சிரித்து
 மகிழும் இளம் நண்பர்கள் என எத்தனையோ
 விஷயங்கள் உள்ளன. மீண்டும் எண்ணிப் பாருங்கள்
. இவை அனைத்தும் மகிழ்ச்சி தர உங்கள் மனது
 தான் காரணம். இதற்கு மனதை எப்படி
 வயப்படுத்துவது என்பதனையும் இந்த தளத்தில்
 காணலாம். சந்தோஷமாய் இந்த தளத்திற்கு ஒரு
 விசிட் அடியுங்கள். 
எனது வலைபூவிற்கு வருகைதந்ததிக்கு நன்றி

பிரியமுடன்


 கருணாகரன் 


 

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive