ஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால்
டிவைஸ் மேனேஜர் சென்று அந்த
குறிப்பிட்ட சாதனம் எப்படி கான்பிகர்
செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்து
பிரச்னைகளைத் தீர்க்கலாம். தற்காலிகமாக
அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால்
செய்திடலாம். ஆனால் இவை எல்லாம்
நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில்
கை வைக்க வேண்டும். என்ன என்று
தெரிந்து கொள்வதில் தவறில்லை.
டிவைஸ் மேனேஜரைக் காண
My Computer
ஐகானை ரைட் கிளிக் செய்து
Properties
தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில்
Hardware என்ற டேபைக் கிளிக் செய்தால்
கிடைக்கும் விண்டோவில்
Device Managerஎன்ற
பட்டனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப்
பெறலாம். இங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து
ஹார்ட்வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும்.
ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்கநிலையை அறிய
வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து
அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும்.
அந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரியவரும்.
அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து
கிடைக்கும் மெனுவில்
Properties தேர்ந்தெடுக்கவும்.
இப்போது கிடைக்கும் டேப்களில்
General என்ற
டேபைக் கிளிக் செய்தால்
Device status பாக்ஸ்
கிடைக்கும். இங்கு அந்த சாதனம் சரியாகச்
செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக்கும்.
உங்களைப் பொறுத்தவரை அதில் பிரச்னை
இருப்பதாகத் தெரிந்தால்
Troubleshoot பட்டனை
அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம்.
kPz;Lk; re;jpg;Nghk;
gphpaKld; fUzhfud;.
www.virakesari.lk