Health and computer

penguin animated gifs

Wednesday, 29 September 2010

தகவல் பரிமாற்றமும் இமெயில் அக்கவுண்டும்.



தகவல் பரிமாற்றமும்  இமெயில் அக்கவுண்டும்.   



















 தகவல் பரிமாற்றத்திற்கும் இமெயில்
அக்கவுண்ட் கட்டாயம் நமக்குத்
தேவயாய் உள்ளது. ஆனால் இதில் 
பலரும் தவறு இழைக்கின்றனர். திருத்திக் கொள்ள
வேண்டிய தவறுகளை இங்கு காண்போம்.


1. முதலாவதாக ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட்

 வைத்துக் கொண்டு இன்றைய இணையச் சிக்கலில்
மாட்டிக் கொள்ளாதீர்கள். வர்த்தக ரீதியான இமெயில்
 தரும் நிறுவனத்தின் இமெயில் அக்கவுண்ட்டை
பணம் செலுத்திப் பெற் றுள்ளீர்கள் என்று வைத்துக்
கொள்வோம். இதனை உங்கள் வர்த்தகத்திற்
 குப்பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். உங்கள் அக்கவுண்ட்
 உள்ள சர்வர் பிரச் னையில் மாட்டிக் கொண்டால்
 உங்களுக்கான இமெயில் சேவை கிடைக்காது. ஆனால்
உங்களின் இமெயில் தெரிந்தவர்கள் அதற்கு மட்டுமே
மெயிலை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். எனவே
 ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை
வெவ்வேறு நிறுவன சர்வர்கள் மூலம் வைத்திருந்தால்
 அவை உங்களுக்கு இது போன்ற சிக்கலான நேரத்தில்
உதவும் அல்லவா? பொதுவாக வர்த்தக பயன்பாட்டிற்கு
 ஒன்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான
பரிமாற்றத்திற்கென ஒன்றும் மற்ற இøணைய
தேடல்களுக்கு ஒன்றுமாக வைத்துக் கொள்வது நல்லது.


2. நீங்கள் வெகு நாட்களாக ஒரு இமெயில் அக்கவுண்ட்

 வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக அதனையே வைத்துக்
 கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால்
 வெகுநாட்கள் பயன்படுத்திய இமெயில் அக்கவுண்ட்கள்
 ஸ்பாம் மெயில் அனுப்புபவர்கள் வசம் நிச்சயம்
 சிக்கியிருக்கும். எனவே சில ஆண்டுகள் சென்ற பின்னர்
அதனை விடுத்து புதிய அக்கவுண்ட் திறப்பது தான் நல்லது.


3. இமெயில் பயன்பாட்டிலும் சில நடைமுறைகளைப்

 பின்பற்ற வேண்டும். உங்கள் இல்லம் இல்லாமல்
 வெளியே உங்கள் அலுவலகத்திலோ அல்லது
இன்டர்நெட் மையங்களிலோ உங்கள் இமெயில்
அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துபவராக இருந்தால்
 பயன்பாட்டிற்குப் பின் இமெயில் அக்கவுண்ட் தரும்
சர்வரில் அக்கவுண்ட்டை முறையாக மூடிவிட வேண்டும்.
இல்லையேல் அடுத்து அந்த கம்ப்யூட்டரைப்
பயன்படுத்துபவர்கள் உங்கள் இமெயிலைத் தவறாகப்
 பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படலாம். அப்படிப்பட்ட
 சூழ்நிலைகளில் மூடுவது மட்டுமின்றி அந்தக்
 கம்ப்யூட்டரின் கேஷ் மெமரியைக் காலி
 செய்துவிடுவதும் நல்லது.


அத்துடன் ஹிஸ்டரி, பாஸ்வேர்ட் இவை

 எதுவும் இருந்தால் அவற்றையும் கிளியர்
 செய்திட வேண்டும். கேஷ் மெமரியை எப்படி
 கிளியர் செய்வது என்று கேட்கலாம்? இன்டர்நெட்
 எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று
அங்கு இருக்கும் “Clear History,” “Delete Cookies”
and “Delete Files” என்ற மூன்று பட்டன்களிலும்
கிளிக் செய்து ஓகே கொடுங்கள். பயர் பாக்ஸ்
 தொகுப்பு பயன்படுத்துபவர்கள் என்ற
 Ctrl + Shift + Del மூன்று கீகளையும் ஒரு
 முறை அழுத்தினால் போதும்.


4. எப்போதும் உங்கள் அலுவலகக் கம்ப்யூட்டரில்

உங்கள் இமெயில் செக் செய்திட வேண்டாம். இது
 முறையற்றது மட்டுமின்றி உங்களின் ரகசிய
தகவல்கள் மற்றவருக்கு தெரிந்து போகும்
 வாய்ப்புகள் உண்டு. அத்துடன் தெரிந்து போனால்
வேலை போய்விடும் அல்லவா?


5. எல்லாவற்றிற்கும் இமெயில் என அலைய

வேண்டாம். ஏனென்றால் இமெயில் என்பது
 உங்கள் நடவடிக்கைகளைப் பதிவு செய்திடும்
ஓர் சாதனமாகும். பின்னர் நான் இதனை
அனுப்பவே இல்லை என்று சாதிக்க முடியாது.


6. தேவையற்ற போது மற்றவர்களின்

 இமெயில் முகவரியை அடுத்தவர் அறியும்
 வகையில் அனுப்ப வேண்டாம். பலர்
தேவையின்றி தங்களின் பிரதாபங்களை
வெளிப்படுத்த தாங்கள் எழுதும் இமெயில்
 கடிதங்களை மற்றவருக்கும் காப்பி(CC மூலம்)
அனுப்பு வார்கள். இதனால் அந்த இன்னொரு
 நபரின் இமெயில் முகவரி மற்றவருக்கும்
 தெரிகிறது. இது தேவயற்ற வகையில்
அனைவருக்கும் தெரியநேர்கையில்
இதனை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள்
ஏற்படுகின்றன.


7. உங்களுக்கு வந்த இமெயில் கடிதங்களுக்குப்

பதில் அளிக்க விரும்புகையில் இமெயில்
கிளையண்ட் புரோகிராமில் Reply / Reply All
 என இரண்டு வசதிகள் உண்டு. இதில் எதனைப்
 பயன்படுத்துவது எனச் சிலருக்கு சந்தேகம் உண்டு.
ரிப்ளை ஆல் பட்டனை அழுத்தினால் அந்த
கடிதத்தில் உள்ள அனைத்து இமெயில்
முகவரிகளுக்கும் பதில் போய்ச் சேரும்.
 மெயில் அனுப்பிய வருக்கு மட்டுமே பதில்
 அனுப்ப வேண்டும் எனில் ரிப்ளை பட்டனை
அழுத்தி பதில் கடிதம் எழுதி அனுப்பவும்.


8. ஒரு சிலர் தங்களுக்கு வந்த கடிதங்களை

அவை மற்றவர்களுக்குப் பயன்படுமா என்று
 சரியாக முடிவு செய்திடாமல் தேவையற்ற
வகையில் மற்றவர்களுக்கு பார்வேர்ட்
செய்வார்கள். இந்தப் போக்கு தேவையற்ற ஒன்று.
இதில் பெரும்பாலும் ஸ்பாம் மெயில்களே அதிகம்
பார்வேர்ட் செய்யப்படும். இவ்வாறு தேவையற்ற
பார்வேர்டிங் செய்வது கூடாது. இந்தப் பழக்கமும்
உங்கள் நண்பர்களுடைய இமெயில் முகவரிகளை
 மற்றவர்களிடம் அவசியம் இன்றி கொண்டு சேர்க்கும்.


9. இமெயில்களை, குறிப்பாக முக்கிய இமெயில்களை

 பேக்கப் செய்து வைத்துக் கொள்வது நல்லது. இவையும்
 சில டாகுமெண்ட்களைப் போல முக்கியமானவையே.


10. குறுக்கு வழியில் பணம் கிடைக்கும் என்று

வருகிற இமெயில்களை நம்புவதும், இந்த
இமெயில்களை 45 பேருக்கு அனுப்புவதால்
உங்களுக்குப் புண்ணியம் வந்து சேரும் என்று
கூறும் இமெயில்களை உடனே அழித்துவிடுவதுதான்
நல்லது. எதற்கும் பதில் அனுப்பித்தான் பார்ப்போமே
 என்று அனுப்பினால் அவ்வளவுதான் தொலைந்தீர்கள்.
உங்களுடைய கடைசி பைசா வரை அவர்களின்
பைசாவாகிவிடும்.


11. தேவையற்ற மின் இதழ்களுக்கு சப்ஸ்கிரைப்

செய்திட வேண்டாம். ஒரு சில நிறுவனங்கள் உங்கள்
 விருப்பங்கள், நாடு, மொழி என்று கண்டறிந்து உங்கள்
இமெயில் முகவரியை மற்றவர்களுக்கு
விற்றுவிடுவார்கள். எனவே தேவை என்று உணரும்
 இதழ்களுக்கு மட்டுமே சப்ஸ்கிரைப் செய்திடவும்.
அவற்றிற்கும் கூடுமானவரை இலவச இமெயில்
முகவரிகளைக் கொடுங்கள். பதிவு செய்கையில்
உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களைத் தூண்டி
தூண்டி கேட்கும் தளங்களைச் சந்தேகப்பட்டால்
கற்பனையான தகவல்களைத் தரவும்.


12. பல வேளைகளில் உங்கள் நண்பரின்

 இமெயிலிலிருந்து சில பிஷ்ஷிங் இமெயில்கள்
 வரும். நண்பர் தானே என்று திறந்து அந்த செய்தியில்
கூறியபடி செய்திட வேண்டாம். சில வைரஸ்கள்
 இது போல உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில்
 அமர்ந்து கொண்டு அட்ரஸ் புக்கில் முகவரிகளைத்
திருடி உங்கள் நண்பரின் இமெயில் முகவரியிலிருந்து
வருவது போலவே பிஷ்ஷிங் மெயில்களை அனுப்பும்.


13. மிக அதிகமாகக் கவனம் எடுக்க வேண்டியது

 இமெயில் அட்டாச்மெண்ட்கள்தான். முறையாக
ஸ்கேன் செய்திடமால் எந்த அட்டாச்டு பைல்களையும்
திறக்க வேண்டாம்.


14. கூடுமானவரை மற்றவர்களின் கம்ப்யூட்டர்கள்

 வழியாக இமெயில் செக் செய்வதனைத் தவிர்த்திடுங்கள்.
 ஏனென்றால் அந்தக் கம்ப்யூட்டர் பாதுகாப்பானதா
 என்று தெரியாது. அதில் உள்ள பிஷ்ஷிங் புரோகிராம்
வழியாக உங்கள் இமெயில் முகவரியும் மாட்டிக்
கொள்ளும் வேளையும் உண்டு.


15. இமெயிலுக்கான பாஸ்வேர்ட் களை அடுத்தவர்

 அறிந்து கொள்ளாதவண்ணம் அமைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பிறந்த நாள், உங்கள் பட்டப் பெயர், குழந்தைகளின்
 பெயர்கள், அவர்களின் பிறந்த நாள்கள் ஆகியவற்றைத்
தவிர்க்கவும். 


எனது வலைபூவிற்கு வருகை தந்ததிக்கு நன்றி

 பிரியமுடன்
  கருணாகரன் 

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive