Health and computer

penguin animated gifs

Sunday, 10 October 2010

இமெயில் குரூப் உருவாக்கலாமா!

இமெயில் குரூப் உருவாக்கலாமா!





 

நாம் அடிக்கடி சில இமெயில்களை
குறிப்பிட்ட குழு நண்பர்களுக்கு அனுப்ப
 வேண்டியதிருக்கும். இந்த குழுக்கள் பல
 அடிப்படையில் அமையும். தனிப்பட்ட
முறையில் நண்பர்கள் குழு, அலுவலகப்
 பணியாளர்கள் குழு, குறிப்பிட்ட
 செயல்பாட்டிற்கு என தற்காலிகமாக
அமைக்கப்படும் குழு, வெளிநாடு மற்றும்
 உள்நாட்டில் இணையம் வழி இணைந்த
குழு என பலவகைகளில் நாம்
நண்பர்களைக் கொண்டிருப்போம்.

இவர்களின் இமெயில் முகவரிகள்
எல்லாம் நம் இமெயில் கிளையண்ட்
 புரோகிராமில் இருக்கும். இவர்களுக்கு
 குறிப்பிட்ட தகவல் கொண்ட இமெயில்
கடிதங்களை அனுப்ப ஒவ்வொரு
முகவரியாகத் தேடித் தேடி அமைக்க
 வேண்டியதில்லை. குழுவாக ஒரு பெயரில்
அமைத்து அந்த குழுவின் பெயரை மட்டும்
 ஒரே ஒரு மெயில் முகவரியில் அமைத்தால்
 போதும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில்
இதனை எப்படி அமைப்பது எனப் பார்ப்போம்.
 பெரும்பாலும் அனைத்து இமெயில் கிளையண்ட்
புரோகிராம்களும் இமெயில் வசதி தரும்
இணைய தளங்களும் இந்த குழு அமைக்கும்
வழிகளை ஒரே மாதிரியாகத்தான்
கொண்டிருக்கின்றன. பெயர்களில்
 வேண்டுமானால் சிறிய அளவில்
மாற்றங்கள் இருக்கலாம்.


அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் அதனைத்
 திறந்து Tools என்பதனைக் கிளிக்
செய்திடவும். பின்னர் உங்கள் Address Book
ஐத் திறக்கவும். அதில் New என்னும் ஐகானில்
 கிளிக் செய்திடவும். பின் New Group என்பதைத்
 தேர்ந்தெடுக்கவும். இந்த குரூப்பிற்கு அதன்
 அமைப்பின் தன்மைக்கேற்ப ஒரு பெயர்
கொடுக்கவும். அதன் பின்னர் உறுப்பினர்களின்
 இமெயில் முகவரிகளை இந்த குரூப்பில்
அமைக்க வேண்டும் அல்லவா? இதற்கு
Select Members என்ற பட்டனில் கிளிக்
 செய்திடவும். இப்போது உங்கள் அட்ரஸ்
புக்கில் உள்ள அனைத்து பெயர்களும்
 முகவரிகளும் கிடைக்கும். எந்த
முகவரிகளெல்லாம் அதில் இருக்க
 வேண்டுமோ அதனை எல்லாம்
ஹை லைட் செய்திடவும். ஒவ்வொன்றையும்
 ஹைலைட் செய்தவுடன் Select  பட்டனைத்
 தட்டவும். அனைத்தையும் மொத்தமாகத்
தேர்ந்தெடுக்க ஷிப்ட் பட்டனையும் மவுஸ்
 கிளிக்கையும் பயன்படுத்தலாம். இவ்வாறு
பிரித்து குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தவுடன்
அனைத்து பெயர்களும் Members பேனலில் இடம்
 பெறும். அடுத்து OK ஐ இரு முறை கிளிக் செய்திடவும்.
 

இப்போது குரூப் தயாராகிவிட்டதா? இனி
 இதற்கு எப்படி மெயில்களை இந்த குரூப்
பெயரைப் பயன்படுத்தி இமெயில் அனுப்புவது
என்று பார்ப்போம். புதிய மெசேஜ் அனுப்ப
வழக்கம்போல புதிய மெசேஜ்க்கான மெனுவினைக்
 கிளிக் செய்து பின் Tools, Select Recipients
 ஆகியவற்றைக் கிளிக் செய்திடவும். இப்போது
 அனைத்து முகவரிகளும் மற்றும்
நீங்கள் ஏற்படுத்திய குரூப் முகவரியும்
 காட்டப்படும். இதில் எந்த குரூப்பிற்கு
அனுப்ப போகிறோமோ அந்த குரூப்பின்
பெயரை ஹைலைட் செய்திடவும். இனி To:
பட்டனைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே
கிளிக் செய்திட்டால் மெயில் மெசேஜ்
எடுக்கத் தயாராகும் விண்டோவில்
 பெறுநர் முகவரியில் இந்த குரூப்பின்
 பெயர் காணப்படும்.


வழக்கம்போல் காணப்படும் இமெயில்
 முகவரி இருக்காது. அல்லது அந்த
குரூப்பில் இணைக்கப்பட்ட அனைத்து
முகவரிகளும் காட்டப்பட மாட்டாது.
அந்த குழுவின் பெயரிலேயே அவை
பதியப்பட்டு இருக்கும். இதன் பின்
மெசேஜுக்கான செய்தியை டைப் செய்து
 வழக்கம்போல அனுப்பும் வகையில்
 அனுப்பலாம். அனைத்து உறுப்பினர்களுக்கும்
அந்த மெயில் செல்லும். எந்த உறுப்பினராவது
 ரிப்ளை பட்டனைத் தட்டி பதில் கடிதம்
அனுப்பினாலும் அந்த பதில் குழு
உறுப்பினர்கள் அனைவருக்கும்
அனுப்பப்படும். இன்றே முதலில் உங்கள்
குடும்ப நண்பர்கள் அல்லது குடும்ப
உறுப்பினர்களுக்கான குழுவினை
அமைத்து அனுப்பி பாருங்களேன்!

எனது வலைபூவிற்கு வருகை தந்ததிக்கு நன்றி

 பிரியமுடன்
  கருணாகரன் 




Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive