Health and computer

penguin animated gifs

Tuesday, 10 August 2010

computer vires

தானாக வரும் வைரஸை எப்படி தடுப்பது




நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. வேலியில் ஓடும் ஓணானை எடுத்து காதிலே விட்டுக் கொண்டு பின் குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்? என்று பலரால் சொல்லப்படும். பாட்டு, படம் ஏன் முக்கிய பைல் உள்ளது என்று அதனை மாற்ற வேண்டி ஏதாவது ஒரு சிடியை அதன் டிரைவில் போட்டு விடுவோம்.

பொதுவாக ஒரு சிடியை டிரைவில் போட்டவுடன் அது தானாக இயங்கி பைல்களின் போல்டர்களைக் காட்டி திறக்கவா எனக் கேட்கும். பாடல்களுக்கான பைல்கள் இருந்தால் அதனை இயக்கும். அல்லது அதிலேயே உடன் இயக்கும் வகையில் Auto Play / Auto Run என்ற வசதி தரப்பட்டிருந்தால் இயங்க தொடங்கும். இந்த வசதி எதனையும் உடனே இன்ஸ்டால் செய்திடத் தொடங்கும். இங்குதான் வினையே உள்ளது. இவ்வாறு நல்ல பைல்களின் இயக்கம் தொடங்குகையில் உடனே வைரஸ் உள்ள சிறிய பைல்களும் கம்ப்யூட்டருக்கு மாறி அதன் நாச வேலையைத் தொடங்கிவிடும். ஏன், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமினை இயக்கி சிடியில் வைரஸ் உள்ளதா என்று சோதனை செய்திருக்கலாமே என்று எண்ணுகிறீர்களா. இங்கு தான் நம்மை செயல்படவிடாமல் Auto Play  வைரஸை அனுப்புவது தெரியாமல், அதற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இதற்கு என்ன செய்திடலாம்? செயல்பாட்டினை நிறுத்திவிட வேண்டியதுதான். எப்படி? நிறுத்த முடியுமா? என்று தானே கேட்கிறீர்கள். கீழ்க்கண்டவாறு செட் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் உங்கள் சிடி டிரைவிற்கான ஐகானில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதில் Auto Play  என்ற டேபினைத் தேர்ந்தெடுங்கள். இங்கே நீங்கள் பயன்படுத்தக் கூடிய பல்வேறு மீடியாக்களுக்கான செட்டிங்ஸ் அமைக்கலாம். இதில் இயக்கத்தை நிறுத்திவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் மீடியா தானாக இயங்காது. ஆனால் இது 100 சதவிகிதம் பாதுகாப்பானதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் வைரஸ் அனுப்பும் ஹேக்கர்கள் இதனையும் மாற்றிவிடும் அல்லது ஏமாற்றிவிடும் வல்லமை படைத்தவர்களாக இருக்கின்றனர். மேலும் ஆட்டோ பிளே இயக்க முடியாமல் செய்திருந்தாலும், பொதுவாக அந்த டிரைவில் டபுள் கிளிக் செய்தால் ஆட்டோ ரன் பைலில் இயக்குவதற்கான கட்டளை இருந்தால் அது தானாக இயக்கப்படும். எனவே எந்த சிடி அல்லது பிளாஷ் டிரைவ் போட்டாலும் அதனை உடனே இயக்காமல் வைரஸ் செக் செய்த பின்னரே இயக்க வேண்டும்.
 gphpaKld; fUzhfud;.

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்