Health and computer

penguin animated gifs

Tuesday, 2 November 2010

சிறப்பாக செயற்படும் சர்ச் இஞ்சின்கள்


 சிறப்பாக  செயற்படும் சர்ச் இஞ்சின்கள்




 
 
நமக்கு வேண்டிய தகவல்களை இன்டர் நெட்டில் தேட பெரும்பாலானோர்
 பயன்படுத்துவது கூகுள் சர்ச் இஞ்சின்
 தான். இவ்வகையில் கூகுள் மட்டுமே
 இந்த கம்ப்யூட்டர் உலகின் ஒரே ஒரு சர்ச்
 இஞ்சின் போலத் தோற்றத்தை
 உருவாக்கி உள்ளது. தேடல் பிரிவில்
 ஏறத்தாழ 50% பேர் கூகுள் தளத்தையே
 பயன்படுத்துகின்றனர்.
இத்துடன் யாஹூ மற்றும் எம்.எஸ்.என்.
 ஆகியவற்றையும் சேர்த்தால் 90%
 வந்துவிடுகிறது. அப்படியானால் வேறு
 சர்ச் இஞ்சின்கள் உள்ளனவா? என்று
 உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள்
 தெரிகின்றன.
 ஆம், இன்னும் பல சர்ச் இஞ்சின்கள்
 சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு தான்
 இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு
 காணலாம். அவை எப்படி
 செயல்படுகின்றன என்பதற்காக
 ஓரிருமுறை இவற்றைப் பயன்படுத்திப்
 பாருங்களேன்.
1.http://www.chacha.com/ : சிறப்பாகச்
செயல் படும் சர்ச் இஞ்சின். இதில்
 டெக்ஸ்ட் டைப் செய்தால் கூகுள்
தளத்தில் கிடைப்பது போலவே
தகவல்கள் கிடைக்கின்றன.


2. http://www.stumple.upon.com/ : இந்த தளம் நாம் கொடுக்கும் தேடல் சொற்களை
 வைத்து நம்முடைய விருப்பங்களை
 அறிந்து அதற்கேற்ற வகையில்
 தளங்களைப் பிரித்து அடுக்கித் தருகிறது.
 தொடக்கத்திலிருந்து நம் தேடல்களைக்
 கவனித்து இந்த சேவையைத் தருகிறது.
 ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இது
 செயல்படுகிறது.

 
3. http://www.ask.com/ : இந்த தளத்தினை நம்
 நாட்டில் பலர் பயன்படுத்துகின்றனர்.
 இதன் சிறப்பு இது நம்மை வழி நடத்தும்
 விதம் தான். நம் தேடல் தன்மையைப்
 புரிந்து கொண்டு தேடல் வழிகளை
 இன்னும் சுருக்கி தேடும் தளங்களைப்
 பட்டியலிடும். எடுத்துக் காட்டாக computer
 tips எனத் தேடப் போகையில் computer
 tips and tricks எனத் தேடலாமே? என்று
 வழி காட்டும்.

computer tips and tricks எனத்
 தேடப்போனால் windows xp tricks அல்லது
 word tips எனத் தேடலாமா? என்று
 கேட்கும். மிக மிகப் பயனுள்ள தேடு தளம்.

4.http://www.kosmix.com/ : இந்த தளம்
 தொடக்கத்திலேயே தகவல் துறைகளைப்
 பிரித்து அதிலிருந்து தேடலை
 மேற்கொள்ள வழி காட்டுகிறது. மெடிகல்
 மற்றும் உடல் நலம் சார்ந்த
 தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம்
 அளிக்கிறது. மற்றவற்றையும் தேடித்
 தருகிறது.

5.http://www.technocrati.com/ இந்த தளம்

 செய்திகளுடன் கூடிய ஒரு தளம். யாஹூ
 போல செயல்படுகிறது. இதில் தேடல்
 முடிவுகள் சிறிய பாராக்களாக சில
 வேளைகளில் சிறிய படங்களுடன்
 தரப்படுகின்றன. நாம் தேடிய சொற்கள்
 அதில் எங்கெங்கு உள்ளன என்று ஹை
 லைட் செய்யப்படுகிறது.


6.http://www.draze.com/ : கூகுள் அளவிற்கு

 தகவல்களை இந்த தளம் அளிக்கிறது.
 மேலும் மற்ற தளங்களோடு எங்கள்
 தேடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று
 சவால் விட்டு மற்றதில் தேடுகையில்
 என்ன என்ன இல்லை என்று
 பட்டியலிடுகிறது. திறன் கொண்ட சற்று
 சவாலான தளம் இது.

7.
http://searchwithkevin.com/ : இந்த தளம்
 இன்னொரு வகையில் வித்தியாசமானது.
 எங்கள் தளத்தில் தேடுங்கள்; அவ்வப்போது
 பரிசுகள் உண்டு என்று அழைக்கிறது. தள
 முகப்பில் தீயுடன் தேடுங்கள் என்று
 விளம்பரப் படுத்தப்படுகிறது. தேடலுக்கான
 முடிவுகள் குகூள் தளத்தில் கிடைப்பது
 போலவே கிடைக்கிறது. மற்றபடி
 வேறுபாடு எதுவும் இல்லை.


.
8. http://www.rollyo.com/ : இந்த தளம்
 தகவல்களைக் காட்டும் விதம்
 வித்தியாசமாக உள்ளது. மேலும்
 ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற
 வகையில் தேடலை அமைக்கலாம். எந்த
 தகவல் பிரிவில் உங்கள் தேடல்
இருக் குமோ அதனை மட்டும் தேடும்
 வகையில் செயல் படலாம். எப்போதும்
 ஒரே மாதிரியாக கூகுள், யாஹூ மற்றும்
 மைக்ரோசாப்ட் தேடல் தளங்களையே
 பயன்படுத்திக் கொண் டிராமல்
 மற்றவற்றையும் பார்த்து
 பயனடையலாமே.



அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கருணாகரன்.

 

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive