டாஸ்க்பாரிலிருந்தே மை கம்ப்யூட்டர்ஸ்:
பல புரோகிராம்களை இயக்கும் போது
புரோகிராம்களின் டேப்கள் டாஸ்க் பாரில்
அமர்ந்திருக்கும். அதனைக் கிளிக் செய்து
நாம் புரோகிராம்களை இயக்கி பைல்களைக்
கையாளலாம். அதே போல மை கம்ப்யூட்டர்
போல்டரில் உள்ள அனைத்து துணை
போல்டர்களையும் அவற்றின் பைல்களையும்
டாஸ்க் பாரில் இருந்தவாறே கையாளலாம்.
அதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம்
அல்லது மை கம்ப்யூட்டர் ஐகானை அழுத்துவது
மூலம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை.
இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள
இடத்தில் மவுஸின் கர்சரை வைத்து ரைட்
கிளிக் செய்திடவும். மெனு ஒன்று விரிந்து
மேலே வரும்.
அதில் டூல் பார் என்பதனைத் தேர்ந்தெடுத்தால்
வரும் பிரிவுகளில் நியூ டூல் பார் என ஒன்று
தென்படும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது சிறிய நியூ டூல்பார் என்னும்
விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில்
மை டாகுமெண்ட்ஸ் போல்டருக்குச் சென்று
அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக்
செய்திடவும். இனி டாஸ்க் பாரில் வலது
ஓரத்தில் மை டாகுமெண்ட்ஸ் போல்டர்
சதுரம் இருக்கும். அதில் உள்ள பைல்களைக்
கையாள நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர்
செல்ல வேண்டியதில்லை. இதனைக் கிளிக்
செய்தாலே போதும். மொத்த பைல் மெனுவும்
கிடைக்கும். இந்த வழியினை விண்டோஸ்
விஸ்டா சிஸ்டத்திலும் மேற் கொள்ளலாம்.
விஸ்டாவில் மை டாகுமெண்ட்ஸ் என்பது
டாகுமெண்ட்ஸ் என இருக்கும்.
எனது வலைபூவிற்கு வருகை
தந்ததிக்கு நன்றி
பிரியமுடன்
கருணாகரன்