Health and computer

penguin animated gifs

Saturday, 25 December 2010

முத்தான மூன்று பிளெயர்கள்

முத்தான மூன்று பிளெயர்கள்



















நாம் எமது கணணியில் வெவ்வேறு
வகையான பயில்களை play பண்னுவதற்கு
ஒவ்வொரு வகையான பிளெயர்களை
பயன்படுத்துகிறோம். இதற்காக பல
பிளெயர்களை எமது கணணியில்
நிறுவவேண்டி உள்ளது. இந்நிலையில்
பல   வகையான பயில்களை play பண்னுவதற்கு
ஒரு வகையான பிளெயரை பயன்படுத்தினால்
எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த வகையில்
மூன்று பிளெயர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
இவை படங்களை மிக தெளிவாகவும்
தரம்குறையாமலும் பார்ப்பதற்கு உதவுகின்றன.
இது வரை நீங்கள் இந்த பிளெயர்களை 
பயன்படுத்தியிருக்காவிட்டால் பயன்படுத்திபாருங்கள்
வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள். அத்துடன்
பல சிறப்பம்சங்களையும்  இது தன்னகத்தே கொண்டது.
பயன்படுத்தும்போது இதன் சிறப்பம்சங்கள் உங்களுக்கு
தெரியவரும்.




நன்றி 

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Wednesday, 22 December 2010

கிறிஸ்மஸ் ஸ்கிறீன்சேவர்

கிறிஸ்மஸ் ஸ்கிறீன்சேவர்































அனைத்து கிறிஸ்தவ உள்ளங்களுக்கும்
முன்கூட்டியே  கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன் இன்று கிறிஸ்மஸ்
சம்மந்தமான சில ஸ்கிறீன்சேவர் பதிவிடுகிறேன்
பயன்படுத்திபாருங்கள்.

http://www.fullscreensavers.com/christmas-evening-freesaver/

http://www.qualitysavers.to/bouncy_snowmen.htm

http://www.fullscreensavers.com/christmas-plots-freesaver/

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Saturday, 18 December 2010

மோட்டார் சைக்கில் சாகசம்

மோட்டார் சைக்கில் சாகசம்

















கணணி விளையாட்டுக்கள் பல விதமாக
வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
அந்தவகையில் இந்த விளையாட்டும் ஒன்று.
Keyboard இல் உள்ள Arrowkey யை பயன்படுத்தி
விளையாடிப்பாருங்கள். எவ்வளவு பொயின்ஸ்
உங்களால் பெறமுடிகிறது எனவும் எந்த லெவல்
வரை உங்களால் செல்ல முடிகிறது என்பதை
நீங்களே கண்டறியுங்கள்.
இங்கே தறவிறக்குக. 

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Wednesday, 15 December 2010

புதிய ஆண்டுக்கான நாட்காட்டி தயாரிக்க

புதிய ஆண்டுக்கான நாட்காட்டி தயாரிக்க


















இன்னும் சில நாட்களில் 2011 ஆம் ஆண்டு
உதயமாக இருக்கின்றது. இந்நிலையில் புதிய
ஆண்டுக்கான நாட்காட்டிகள் தயாரிக்கப்பட்டு
வினையோகிக்கப்படுகின்றன. இவ்வாறு
 வெளியிடப்படும் நாட்காட்டிகளில் பிரபல்யமான
நபர்கள் மற்றும் காட்சிகள் இடம்பெறும்.
 இவ் நாட்காட்டிகளில் நமது அல்லது
 நாம் விரும்புவவரது புகைப்படம் இடம்பெற்றால்
எவ்வளவு நன்றாக இருக்கும்.இதைத்தான்
இந்த மென்பொருள் செய்கிறது முதலில்
இவ்மென்பொருள்ளை இங்கே தறவிறக்குக
இவ் மென்பொருளை நிறுவியபின் File சென்று
Open மூலம் விரும்பிய படத்தினை திறந்து
கொள்ளவும்.
















பின் Transformation சென்று
Special effects சென்று Calendarயை தெரிவு
 செய்யவும்.  பின் தோன்றும் மநுவில்
பின் வருமாறுதெரிவு செய்க.  Start at -jan-2011,
Duration-1 month, Text color-பொருத்தமானது,
Font size -பொருத்தமானது, Apply-Ok.
கொடுக்கவும். இதன்பொது Preview
மூலம் நீங்கள் பொருத்தமான மாற்றத்தை
 செய்துகொள்ளலாம். 















Duration மாற்றுவதன் மூலம்
இரண்டு மாதங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
உருவாகும் நாட்காட்டியை Print எடுத்து
வினையோகியுங்கள்.

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Tuesday, 14 December 2010

கணணியில் டெக்ஸ்டொப் Theme மாற்ற

கணணியில் டெக்ஸ்டொப் Theme மாற்ற  















 
 நீங்கள் இதுவரை Windows XP,Windows Classic, Themesகளை
பயன்படுத்தியிருந்தால் சற்று மாறுதலுக்காக
 Zune  டெக்ஸ்டொப் Themeயை பயன்படுத்தி பாருங்கள்
உங்கள்  கணணியில் உள்ள  Theme யை
மாற்றுவதன் மூலம் வித்தியாசத்தை உணருங்கள்.
Zune  டெக்ஸ்டொப் Themeயைதரவிறக்க
http://download.cnet.com/Microsoft-Zune-Theme/3000-2319_4-10818187.htmlஇங்கே அழுத்துக

மீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.

Monday, 13 December 2010

கணணி விளையாட்டு

கணணி விளையாட்டு 






























இன்று விண்வெளியில் நடைபெறும் ஒர்
விளையாட்டினை பார்ப்போம். இது 3D வகை
விளையாட்டு உங்கள் கணணியின்
 ஸ்பிக்கரின் சத்தத்தை அதிகபடுத்திக்கொண்டு
விளையாடிப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்
என நினைக்கிறேன்.
http://download.cnet.com/Arcadrome-Space-Stalker/3000-2099_4-10248538.html?tag=mncol;1

மீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.

Saturday, 11 December 2010

போட்டோக்களை வீடியோவாக மாற்ற

போட்டோக்களை வீடியோவாக மாற்ற



















நம்மிடம் உள்ள  முக்கியமான  எமது
போட்டோக்களை வீடியோவாக  மாற்றினால்
எவ்வளவு நலமாக இருக்கும்.  இதனைத்தான்
இந்த மென்பொருள் செய்கிறது. இதனை இங்கு
தறவிறக்குக
.http://download.cnet.com/VideoPad-Pro-Video-Editor/3000-13631_4-10906278.html
முதலில் மென்பொருளை திறந்து கொள்ளவும்
அதன்பின் Add Media யாவை தெரிவுசெய்து தேவையான
படங்களை சேர்துகொள்ளவும் பின்பு Media List இல்
உள்ள படங்களை தெரிவு செய்யவும். இதன் பின்
Apply தெரிவு செய்யவும். அதன் பின்
Down அம்புக்குறியை தெரிவுசெய்யவும்.
 இவ்வாறு ஒன்றன்பின்ஒன்றாக படங்களை
 தெரிவு செய்ததின் பின் உருவான வீடியோவினை
அருகில் உள்ள  பகுதியில் Playயை தெரிவு செய்வதன்
மூலம் பார்வையிட முடியும். பின்பு உருவான  Videoவை
Save Movieயை தெரிவு செய்வதன் மூலம் Save பண்ண முடியும்
இவ் Videoவை Disc, Computer portable Device,Image sequence,Youtube,
போன்ற இடங்களில் avi,wmv,asf,mpg,3gp,mp4,mov,flv,swf போன்ற
வடிவில் சேவ்பண்னி பார்க்க முடியும். இவ் மென்பொருள்
இன்னும் பல வசதிகளை கொண்டுள்ளது
பயன்படுத்திபாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.

Friday, 10 December 2010

அவுஸ்டெலிய ஸ்கிறின் செவர்

அவுஸ்டெலிய ஸ்கிறின் செவர்


















நாம் நமது கணணியில் பல ஸ்கிறின் செவர்
பயன்படுத்தி இருப்பபோம். தொடர்சியாக  சில
ஸ்கிறின் செவர் பயன்படுதி உங்களுக்கு சலிப்பு
அடைந்தும் இருப்பிர்கள். ஒரு மாறுதலுக்காக
இதையும் பயன்படுத்தி பாருங்களேன்.
மீண்டும் சந்திப்போம்
கருணாகரன்.

Tuesday, 7 December 2010

நீங்கள் விரும்பும் அடையாளக்குறியிடு(LOGO) உருவாக்க...

நீங்கள் விரும்பும் அடையாளக்குறியிடு(LOGO) உருவாக்க...




நாளாந்த பாவனையின்போது பல வகையான
பொருட்களை கையாழுகிறோம் அவற்றில்
ஒவ்வொரு விதமான தயாரிப்பு அடையாளக்
குறியீடு காணப்படுகின்றது. இவ்வாறான
அடையாளக்குறியிட்டை நாமும் தயாரிதால்
என்ன என என்ன தோன்றுகிறதா அப்படியானால்
முதலில் இந்த  மென்பொருளை 
தரவிறக்கிகொள்ளுங்கள்.
இதனை திறந்து கொண்டதும் Templates என்பதை
திறந்ததும் அங்குபல பிரிவுகளில் உங்களுக்கு
LOGO தயாரிப்புக்கான  மொடல்கள் தயாராகி
இருக்கும்.அல்லது Symbols, Shapes என்பவற்றில்
பல சிறிய  படங்கள் தரப்பட்டு இருக்கும்.
இவற்றில் ஒன்றை தெரிவுசெய்து கொள்ளுங்கள்
அல்லது OPEN என்பதை திறந்து உங்கள்
கணனியில் உள்ள படத்தை சேர்த்து கொள்ளுங்கள்
பின்பு T என்ற குறியிட்டை அழுத்துவதன் மூலம்
நீங்கள் எழுதவேண்டிய  வாக்கியத்தை எழுதுங்கள்
நீங்கள் எழுதுவதற்காக  இடம், இடப்பக்கத்தின்
கீழ்பகுதியில் தரப்பட்டுள்ளது. இன்னும் பல
வசதிகளை இது தன்னகத்தே கொண்டுள்ளது.
பயன்படுத்தி பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.  

Sunday, 5 December 2010

பிடித்த நாட்டின் தேசியகொடியை பறக்கவிட

பிடித்த நாட்டின் தேசியகொடியை பறக்கவிட

















உங்களது கணணியில் நீங்கள் வசிக்கும் நாடு
அல்லது உங்களுக்கு பிடித்தநாட்டின் கொடியை
பறக்கவிடமுடியும். இதற்காக  உருவாக்கப்பட்ட
Screen Saver தான் இது. இதில் Speed என்பதை மாற்றி
அமைப்பதன் மூலம் கொடியின் அசைவை மாற்ற
முடியும்.அத்துடன் Direction, Back ground   என்பவற்றை
மாற்றியமைக்க முடியும்.அத்துடன் பலவசதிகளையும்
கொண்டுள்ளது. பயன்படுத்திபாருங்கள்.


மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive