Health and computer

காலை வணக்கம் , இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
penguin animated gifs

Sunday, 12 September 2010

நாம் விரும்பியபடி ஷார்ட் கட் கீ

நாம் விரும்பியபடி ஷார்ட் கட் கீ

























கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ்
 கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத்
 தந்தது. பல செயல்பாடுகளை விரைவாக
 மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால்
 மவுஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று
 நோக்கி தேவையான இடத்தில் அமைத்து
 கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம்தான்.
 இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்க
 அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட்
 கட்கள் தான். ஷார்ட் கட் என்பது இரண்டு
 கீகள் இணைந்த ஒரு கட்டளை ஆகும்.


கீ போர்டு ஷார்ட் கட் என்பதில் குறைந்தது

 இரண்டு கீகள் இருக்கும். முதல் கீ
 மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு
  (Modifier Key) இருக்கும் செயல்பாட்டினை
 மாற்றி அமைக்கும் கீ. ஆல்ட், ஷிப்ட்,
 கண்ட்ரோல் Alt, Shift, Ctrl)  கீகள் இத்தகைய
 கீகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்துடன்
 எழுத்து அல்லது எண்களுக்கான கீகள்
 இணைந்து செயல்பட்டு ஷார்ட் கட் கீ
 தொகுப்பினைத் தருகின்றன. இந்த
 தொகுப்பினைப் பயன்படுத்துகையில்
 கம்ப்யூட்டரில் சில செயல்பாடுகள்
 மேற்கொள்ளப்படுகின்றன.


பல ஷார்ட் கட் கீகள் உலகெங்கும் கம்ப்யூட்டர்

 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பொதுவானதாக
 இயங்குகின்றன. எடுத்துக் காட்டாக
 கண்ட்ரோல் + சி (Ctrl + C) காப்பி செய்வதற்கும்,
 கண்ட்ரோல் + வி (Ctrl+V)  பேஸ்ட்
 செய்வதற்கும் கண்ட்ரோல் + எஸ் (Ctrl+S)
  சேவ் செய்வதற்கும் அனைத்து நாடுகளிலும்
 கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ளன. சில
 புரோகிராம்களில் இவை வேறுபடலாம்.


இந்த ஷார்ட் கட் கீகள் அனைத்தையும் ஒருவர்

 நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.
 ஆனால் நாம் அடிக்கடி மேற்கொள்ளும்
 செயல்பாடுகளுக்கான ஷார்ட் கட் கீகள் நாம்
 முயற்சி எடுக்காமலேயே நம் நினைவில்
 அமைந்து விடுகின்றன.


 


 ஷார்ட் கட் கீ அமைப்பது குறித்து பார்ப்போம்.

 விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ்
 தொகுப்பில் பல ஷார்ட் கட் கீகள் அளிக்கப்
 பட்டிருக்கின்றன. இருந்தாலும் நாம் நம்
 விருப்பப் படியும் ஷார்ட் கட் கீகளை
 அமைக்கலாம். ஏனென்றால் நாம் சிஸ்டம்
 தரும் ஷார்ட் கட் கீகளை அமைக்கையில் இது
 இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று
 எண்ணுகிறோம், இல்லையா? நம் விருப்பப்படி
 அமைப்பதற்கும் வழிகள் உள்ளன. குறிப்பாக
 வேர்ட் தொகுப்பில் இது போல
 விருப்பப்படியான கீகளை ஷார்ட் கட் கீகளாக
 அமைக்கலாம். ஆனால் ஓர் எச்சரிக்கை. இந்த
 கீகள் ஏற்கனவே உள்ள ஷார்ட் கட் கீகளின்
 தொகுப்பாக இருக்கக் கூடாது. சிஸ்டம்
 அமைத்துள்ள கீகள் செட் அப்பை மாற்றுவது
 பிற புரோகிராம்களில் பிரச்னைக்கு வழி
 வகுக்கும். எனவே இங்கு வேர்ட் தொகுப்பில்
 ஒரு ஷார்ட் கட் கீயினை ஏற்கனவே
 உள்ளதற்குப் பதிலாக அமைக்கும் விதம்
 குறித்துப் பார்க்கலாம். வேர்ட் டாகுமெண்ட்டில்
 உள்ள சொற்களை எண்ணிச் சொல்ல
 தரப்பட்டுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்பு Alt+T+W.
   இதனை மிக எளிமையாக மாற்றவும் எப்படி
 ஷார்ட் கட் கீ தொகுப்பு உருவாக்கலாம்
 என்பதற்கும் கீழே குறிப்புகள் தரப்படுகின்றன.
 இதனை Alt+U   ஆக மாற்றும் வழிகளைக்
 காணலாம்.


  டூல்ஸ் மெனுவில் கஸ்டமைஸ் டயலாக்
 பாக்ஸ் திறந்தவுடன் கிடைக்கும்
 விண்டோவில் கமாண்ட்ஸ் (Commands)
 என்னும் டேபிள் கிளிக் செய்திடவும். இந்த
 பாக்ஸின் அடிப்பாகத்தில் கீ போர்டு (Keyboard)
   என்னும் பட்டன் கீழாகக் காணப்படும்.
 அதனைக் கிளிக் செய்திடவும். இதில் இடது
 பக்கம் கிடைக்கும் பெட்டியில் டூல்ஸ்
   என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது பக்கம்
 கமாண்ட்ஸ்  (Commands)   கட்டத்தில்
 ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால் டூல்ஸ்
 வேர்ட் கவுண்ட் (Tools Word Count)  என்று ஒரு
 கட்டளை இருக்கும். கீழாக பிரஸ்நியூ ஷார்ட்
 கட் கீ (Press New Shortcut key)  என்பதில் கிளிக்
 செய்து பின் Alt கீயையும் U கீயையும் டைப்
 செய்திடவும். அருகே இருக்கும் அசைன்
 (Assign)  பட்டனில் கிளிக் செய்து பின் ஓகே
 யில் என்டர் தட்டி அனைத்து பாக்ஸ்களையும்
 மூடுங்கள்

இனி சொற்கள் எண்ணுவதற்கு Alt + U  ஷார்ட்
 கட் கீகளாக அமையும். இது போல ஏற்கனவே
 இருக்கும் செயல்பாடு களுக்கு ஷார்ட் கட்
 கீகளை நமக்கு எளிதாகவும் நாம் விரும்பும்
 வகையிலும் அமைக்க முடியும். பொதுவாக
 இத்தகைய ஷார்ட் கட் கீகளை அந்த பைலுக்கு
 மட்டும் பொருந்தும்படி அமைக்கலாம். இந்த
 புதிய முறை ஷார்ட் கட் கீகளெல்லாம் அந்த
 புரோகிராம் களில் மட்டுமே செயல்படும். வேர்ட்
 புரோகிராமில் உருவாக்கப்படும் ஷார்ட் கட் கீகள்
 வேறு ஆபீஸ் புரோகிராம்களில் செயல் படாது.
 மேலும் அனைத்து ஆபீஸ் புரோகிராம்களும்
 ஷார்ட் கட் கீயினை நாமே அமைத்திடும்
 வசதியைக் கொண்டிருக்கவில்லை என்பதுவும்
 இங்கு குறிப்பிடத் தக்கது.


அடோப் போட்டோ ஷாப் புரோகிராமில் இது

 போன்ற ஷார்ட் கட் கீகளை நம் விருப்பப்படி
 அமைக்கலாம். இதற்கு போட்டோ ஷாப் சென்று
 விண்டோவைத் தேர்ந்தெடுத்து பின்
 ஒர்க்ஸ்பேஸ் (Workspace)  சென்று அதில் கீ
 போர்டு ஷார்ட் கட்ஸ் அன்ட் மெனுஸ் (Keyboard
 shortcuts and Menus) என்ற பிரிவின் கீழ் ஷார்ட்
 கட் கீகளை அமைக்கலாம். இந்த பிரிவில்
 ஏற்கனவே உள்ள ஷார்ட் கட் கீகளும்
 அவற்றிற்கான செயல்பாடுகளும் தரப்பட்டுள்ளன.
 இவற்றை இன்னொரு ஷார்ட் கட் கீ
 இணைப்பிற்கு மாற்றலாம். ஆனால் போட் டோ
 ஷாப் நிறைய ஷார்ட் கட் கீகளை ஏற்கனவே
 அமைத்திருப்பதால் எந்த கீ தொகுப்பு இதுவரை
 பயன்பாட்டில் இல்லை என்பதைக் கண்டு
 கொள்வது சிரமம்.


பொதுவாகக் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் இந்த

 ஷார்ட் கட் கீகளை அறிந்து வைத்திருப்பது
 நல்லது. இவற்றைத் தெரிந்து
 கொள்ளும்போதுதான் நாம் வீணாக எவ்வளவு
 நேரத்தைச் செலவு செய்திருக்கிறோம்
 என்பதனை உணர்வோம். 

ஷார்ட் கட் கீகள் நம் வழக்கமான பணியை
 விரைவாக முடிக்க உதவும் திறவுகோல்களாகும்.
 எப்போது மெனு கட்டளைகளைச்
 செயல்படுத்தினாலும் அதனைச் சற்று உற்று
 நோக்குங்கள். நீங்கள் இந்த கட்டளைகளுக்காக
 கர்சரைக் கொண்டு சென்றாலே அதன் ஷார்ட்
 கட் கீ என்ன? என்று காட்டப்படும். அடிக்கடி
 பயன்படுத்தும் மெனு கட்டளைகளுக்கான ஷார்ட்
 கட் கீகளை நினைவில் வைத்து எளிதாகப்
 பயன்படுத்தி விரைவாகச் செயல்பாட்டினை
 மேற்கொள்ளலாம்.

kPz;Lk; re;jpg;Nghk;
gphpaKld; fUzhfud;.


1 comment:

  1. Superb Post... Thanx for the Needful Posting

    Regards,
    Arun Kumar N
    http://www.maduraispb.blogspot.com/

    ReplyDelete

Followers

எனது வலைத்தளம் வந்ததற்கு நன்றி.

பார்வையாளர்கள்.

twitter

Popular Posts

Blog Archive