Health and computer

penguin animated gifs

Sunday 15 August 2010

டிவைஸ் மேனேஜர் என்ன செய்கிறது?

டிவைஸ் மேனேஜர் என்ன செய்கிறது?
 

 
கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர்
 சாதனங்கள் குறித்தும் தகவல்களைக்
 கொண்டுள்ள இடம் தான் டிவைஸ்
மேனேஜர். மவுஸ், கீ போர்டு, மோடம்,
மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து
 ஹார்ட்வேர்களும் எப்படி ஒவ்வொன்றுடனும்
 இணைக்கப்படுகின்றன என்று இதில்
தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு
ஹார்ட்வேர் சாதனமும் எப்படி
இயங்க வேண்டும் என்பதனையும் இதன்
 மூலம் சென்று கான்பிகர் செய்திடலாம்.
இதன் மூலம் டிரைவர்களை அப்டேட்
 செய்திடலாம்; ஹார்ட்வேர் செட்டிங்குகளை
 மாற்றிடலாம்; பிரச்னைகளை எளிதாக தீர்த்துவிடலாம்.
ஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால்
டிவைஸ் மேனேஜர் சென்று அந்த
குறிப்பிட்ட சாதனம் எப்படி கான்பிகர்
செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்து
 பிரச்னைகளைத் தீர்க்கலாம். தற்காலிகமாக
அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால்
 செய்திடலாம். ஆனால் இவை எல்லாம்
நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில்
கை வைக்க வேண்டும். என்ன என்று
 தெரிந்து கொள்வதில் தவறில்லை.
டிவைஸ் மேனேஜரைக் காண My Computer
 ஐகானை ரைட் கிளிக் செய்து Properties
 தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில்
 Hardware  என்ற டேபைக் கிளிக் செய்தால்
கிடைக்கும் விண்டோவில் Device Managerஎன்ற
பட்டனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப்
பெறலாம். இங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து
ஹார்ட்வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும்.
ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்கநிலையை அறிய
வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து
அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும்.
அந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரியவரும்.
 அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து
கிடைக்கும் மெனுவில் Properties  தேர்ந்தெடுக்கவும்.
இப்போது கிடைக்கும் டேப்களில் General என்ற
 டேபைக் கிளிக் செய்தால் Device status பாக்ஸ்
 கிடைக்கும். இங்கு அந்த சாதனம் சரியாகச்
செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக்கும்.
உங்களைப் பொறுத்தவரை அதில் பிரச்னை
 இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot பட்டனை
அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம்.
kPz;Lk; re;jpg;Nghk;  
gphpaKld; fUzhfud;.
www.virakesari.lk

No comments:

Post a Comment

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive