Health and computer

penguin animated gifs

Saturday 23 October 2010

சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்

சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்




நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கின்ற இணையத்தில் குழந்தைகளுக்கான,
 அறிவுபூர்வமாகவும் கல்வி சார்ந்ததாகவும்
 இயங்குகின்ற தளங்கள்  சிறுவர்களை
 அவர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில்
 இழுத்துப் பிடித்து வேடிக்கை காட்டி அதே
 நேரத்தில் மூளைக்கும் வேலை தரும் பல
 தளங்கள் இணையத்தில் உள்ளன.
 அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1) Starfall: இத்தளம் இளம் சிறுவர்களுக்கானது. ஆங்கிலத்தை
 இரண்டரை வயதிலிருந்தே திணிக்க
 முயற்சிக்கும் நமக்கு இது ஒரு பயனுள்ள
 தளம். ஆங்கில எழுத்துக்களில் தொடங்கி
 அவற்றை எப்படி உச்சரிப்பது
சொற்கள் புதிர், சொல் விளையாட்டு என அத்தனையும் இலவசமாகக்
 கிடைக்கின்றன. இதனைப் பயன்படுத்திக்
 கற்றுக் கொடுக்க நினைக்கும்
 பெற்றோருக்கும் தாத்தா பாட்டிகளுக்கும்
 கற்றுக் கொடுப்பது பற்றியும் குறிப்புகள்
 இருக்கின்றன.  http://www.starfall.com/ என்ற
 முகவரியில் இதனைக் காணலாம்.
2) Kids.gov சிறுவர்களை மனதில் கொண்டு
 அவர்களுக்குத் தகவல்களைத் தரும்
 வகையில் இந்த தளம்
 வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வயது
 சிறுவனுக்கும் இது உகந்தது. இதில்
 பெரும்பாலும் அமெரிக்க அரசின் தளங்கள்
 குறித்த தகவல்கள் இருந்தாலும் இது
 தரும் 1200 தளங்களின் தகவல்கள் எந்த
 சிறுவனின் அறிவுப் பசிக்கும் தீனி
 போடுகிறது. டெக்னாலஜி, உடல் நலம்
 மற்றும் நலம் காத்தல், அறிவியல் எனப்
 பல பிரிவுகளில் தகவல்கள் உள்ளன.
 பள்ளிகளில் குழந்தைகளை புராஜக்ட்
 செய்திட வற்புறுத்தினால் இத்தளத்தில்
 தகவல்களைப் பெற்று திட்டங்களை
 வடிவமைக்கலாம். இதன் முகவரி
 http://www.kids.gov/


3) Homework Spot இந்த தளம் பள்ளிமாணவர்களின் ஹோம் ஒர்க்
 வேலைகளுக்கும் உதவுகிறது. அனைத்து
 வயது சிறுவர்களுக்கும் உகந்தது.
 ஆங்கிலம், மேத்ஸ், சயின்ஸ், ஆர்ட்ஸ்,
 மியூசிக், ஹெல்த், லைப் ஸ்கில்ஸ்,
 எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகள் என
 இன்னும் எவ்வளவோ பிரிவுகளில்
 உதவிடுகிறது.
எனவே ஹோம் ஒர்க் செய்வதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இந்த
 தளத்தை அணுகுமாறு குழந்தைகளை
 வழி நடத்தலாம். முகவரி
 http://www.homeworkspot.com/


4) Family Fun குழந்தைகள் என்றாலே அங்கு
 வேடிக்கையும் விளையாட்டும் கட்டாயம்
 வேண்டும் அல்லவா! இந்த தளம்
 வேடிக்கை காட்டுவதோடு பள்ளிக்கூடப்
 பாடங்கள் சாராத சில விஷயங்களிலும்
 சிறுவர்களை ஈடுபடுத்துகிறது.
எடுத்துக் காட்டாக சமைப்பதற்கு, சிறிய
 சுற்றுலா செல்ல எப்படி திட்டமிடுவது
 என்றெல்லாம் கேட்டு வழி நடத்துகிறது.
 சில விஷயங்களை மேற்கொள்வது எப்படி
 என்பதற்கு சிறு சிறு வீடியோ
 காட்சிகளுடன் வழி நடத்துகிறது. இத்தள
 முகவரி http://familyfun.go.com/recipes/kids/


5) SciVee: உங்களுடைய குழந்தைகள்

 அல்லது பேரக் குழந்தைகள் சயின்ஸ்
 குறித்து அறிய ஆவலுடையவர்களாக
 இருக்கிறார்களா! அந்தப் பசிக்கு சரியான
 தீனி போடும் தளம் இது. அமெரிக்காவில்
 இயங்கும் நேஷனல் சயின்ஸ்
 பவுண்டேஷன் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர்
 சென்டர் ஆகியவற்றின் துணையுடன்
 இந்த தளம் படு பிரமாதமாக
 வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள்
 தாங்கள் தயாரிக்கும் அறிவியல் சார்ந்த
 கட்டுரைகள், பவர் பாயிண்ட்
 பிரசன்டேஷன் மற்றும் இதில் பதிந்து
 வைக்கவும் வசதி தரப்பட்டு
 ஊக்குவிக்கப்படுகிறார்கள். தள முகவரி
 http://www.scivee.tv/


6) Creating Music மியூசிக்கை விரும்பாத

 குழந்தைகள் உண்டோ! இந்த தளம்
 குழந்தைகளை மியூசிக் டைரக்டர்களாக
 உருவாக்குகிறது. ஆம், மியூசிக்கைத்
 தாங்களே கம்போஸ் செய்திடும் வழி
 தருகிறது. வெவ்வேறு மியூசிக்
 இன்ஸ்ட்ருமென்ட்களை இயக்கும் வாய்ப்பு
 தரப்படுகிறது. சிறுவர்கள் தங்களுக்குப்
 பிடித்த இன்ஸ்ட்ருமெண்ட்டைத்
 தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். இத்தளத்தின்
 முகவரி: http://www.creatingmusic.com/

எனது வலைபூவிற்கு வருகைதந்ததிக்கு
 நன்றி


பிரியமுடன்


 கருணாகரன்

 

 

2 comments:

  1. a fine and informative blog from u.... especially im happy with http://www.homeworkspot.com/ and http://familyfun.go.com/recipes/kids/ .... Both of them aare great sites... Hats off...

    ReplyDelete
  2. philosophy prabhakaran
    Thanks for your comment.

    ReplyDelete

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive