Health and computer

penguin animated gifs

Thursday 12 August 2010

mouse

. மவுஸ் மற்றும் மவுஸ் பேட் கொஞ்சம் கவனியுங்கள்
நாம் கம்ப்யூட்டர், கீ போர்ட் மற்றும் மவுஸ் கிளீன் செய்கிறோம்.
ஆனால் முக்கியமான மவுஸ் அமரும் மவுஸ் பேடினைச்
சுத்தப்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மிகப் பழைய மவுஸ்
பேடினையே பலரும் பயன்படுத்துகின்றனர். பழசாகிப் போனால்
புதியது வாங்குவது இல்லை. கம்ப்யூட்டர், சிபியு, கீ போர்டு மற்றும்
மவுஸ் ஆகியவற்றிற்கு கவர் போடுகிறோம். ஆனால் மவுஸ் பேடிற்கு
போடுவதில்லை. அதனால் அதிக தூசி, ஆயில் சேர்ந்து மவுஸைக்
கெடுக்கும் பேடாக மவுஸ் பேட் மாறுகிறது.
 
1. உங்கள் மவுஸ் பேட் எதனால் ஆனது என்று பார்க்கவும். துணி
உள்ளாக இருந்து மேலாக பிளாஸ்டிக் அல்லது வேறு ஒரு துணியினால் மூடப்பட்டிருந்தால் சிறிய அளவில் ஷாம்பு மற்றும் ஈரத்துணி
கொண்டு சுத்தப் படுத்தலாம்.

2. மவுஸ் பேடில் பிளாஸ்டிக் டாப் போடப்பட்டிருந்தால் ஏதேனும்
கிளீனிங் லிக்விட் போட்டு சுத்தப்படுத்தலாம். டிஷ் சோப் மற்றும்
ஷாம்பு இதற்கும் பயன்படுத்தலாம்.
 
3. எந்த வழியைப் பயன்படுத்தினாலும் சேர்ந்த அழுக்கு போகும்
வரை சுத்தப்படுத்தவும். பயன்படுத்திய சோப், ஷாம்பு மற்றும்
கிளீனிங் லிக்விட் மொத்தமாகப் போய்விட்டதை உறுதி செய்து
கொள்ளவும். பின் உலர்ந்த டவல் ஒன்று எடுத்து அழுத்தி
துடைக்கவும். இதில் ஏதேனும் நீர் உள்ளே சேர்ந்திருந்தால்
வெளியேறி வர வேண்டும். அனைத்து நீரும் வெளியேறியதை
உறுதி செய்தபின் மவுஸ் பேட் முற்றிலுமாக உலர்ந்த நிலையில்
மீண்டும் பயன்படுத்தலாம். உங்கள் மேஜை மர மேஜையாக
இருந்தால் ஒரு சொட்டு நீர் கூட இல்லாத வகையில் பார்த்துக்
கொள்ள வேண்டும்.

4. எதுவுமே செய்ய முடியாத நிலையில் அழுக்கேறிப் போய்
வளைந்த நிலையில் அல்லது ஓரங்களில் மேல் கவர் பிரிந்து
உள்ளே இருக்கும் துணி அல்லது பிளாஸ்டிக் உரிந்து போகும்
நிலையில் இருந்தால் தயவு செய்து புதிய மவுஸ் பேட் ஒன்று
வாங்கிப் பயன்படுத்தவும்.

5. மேலே கூறிய சுத்தப்படுத்தும் வழிகளை மேற்கொள்ளும்
முன் உங்கள் மவுஸ் பேடின் கலர் நீர் பட்டு சாயம் போகிறதா
என்று பார்த்துக் கொள்ளவும். அப்படிப் போகும் பட்சத்தில்
தண்ணீர் விட்டுச் சுத்தப்படுத்தாமல் வேறு வழிகளைக்
கையாள வேண்டும்.

சரி இந்த மவுஸ் பேட் உலரும் நேரத்தில் மவுஸ்
பயன்படுத்தாமல் இருக்கிறோமே? என்ன செய்யலாம்?
என்று யோசிக்கிறீர்களா? மவுஸைச் சுத்தப்படுத்துங்கள்.
உங்களுடைய மவுஸ் கீழாக பழைய பந்துருண்டை
கொண்ட மவுஸ் என்றால் அதனைச் சுற்றி இருக்கும்
வளையத்தை நேர் மாறாகச் சுழற்றினால் வளையம்
விலக பந்து கைக்கு வரும். நிச்சயமாய் அந்த பந்துருண்டையில்
கருப்பு தூசு அழுக்கு சேர்ந்திருக்கும். இதனை சிறிது தண்ணீர்
அல்லது பிளாஸ்டிக் கெடுக்காத கிளீனர் கொண்டு நன்றாகச்
சுத்தப்படுத்தவும். சுத்தப்படுத்திய பின்னர் அதனை உருளாத
இடத்தில் வைத்து உலர வைக்கவும். அந்த நேரத்தில்
உருண்டை இருந்த இடத்தை நோக்கினால் இரு சிறிய கம்பி
ஒன்றுக்கொன்று மாறான திசையில் வைக்கப்பட்டிருக்கும்.
இதிலும் தூசு, தலைமுடி, நார் போன்றவை ஒட்டியிருக்கலாம்.
அதனை மெதுவாக முழுவதுமாக எடுத்துவிட்டு அந்த கம்பியைச்
சாதாரண துணி கொண்டு சுத்தப்படுத்தவும். பின் உலர்ந்த
பந்துருண்டையைப் போட்டு வளையத்தை மேலாக வைத்து
மூடி மவுஸைப் பயன்படுத்த தொடங்கலாம். ஆனால்
இப்போது மற்ற இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டதால் கிளிக்
செய்திடும் இடம் உங்களுக்கு அசிங்கமாக அழுக்காக
தோற்றமளிக்கும். இதனையும் சற்று ஈரத்துணி கொண்டு
ஈரம் உள்ளே போகாமல் சுத்தப்படுத்தலாம். நன்றாக
அனைத்தும் உணர்ந்த பின்னர் பயன்படுத்தலாம். இவை
அனைத்தையும் செய்த பின்னர் நீங்கள் பயன்படுத்தும்
மவுஸ் பேட் அல்லது மேஜை மேல்புறம் சுத்தமாக
இருப்பதையும் உறுதி செய்து கொண்டு பயன்படுத்துங்கள்.
இல்லையேல் மவுஸை மட்டும் சுத்தம் செய்து
புண்ணியம் இல்லீங்க.
நீங்கள் ஆப்டிகல் மவுஸ் பயன்படுத்துபவரா?
அப்படியானால் உங்கள் மவுஸைத் முதலில்
தலைகீழாகப் புரட்டிப் போடவும். இதன் கால்கள்
போன்று நான்கு சிறிய பேட் நான்கு முனைகளிலும்
இருக்கும். இதில் ஏதேனும் சிறிய துகள் ஒட்டியிருந்தால்
எடுத்துவிடவும். மேலே கூறியது போல இந்த
முனைகளையும் நன்கு சுத்தம் செய்து உலர விட்டுப்
பின் பயன்படுத்தவும்.
மவுஸ் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மிக
முக்கியமானது. மவுஸ் இயக்கம் சரியாக
இயங்கவில்லை என்றால் கம்ப்யூட்டரை
வேகமாக இயக்க முடியாது. எனவே
அதனையும் அவ்வப்போது கண்டு கொள்வது நல்லது.


  gphpaKld; fUzhfud;.

No comments:

Post a Comment

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்