Health and computer

penguin animated gifs

Saturday, 14 August 2010

WORDல் வாட்டர் மார்க் அமைப்போமா


WORDல் வாட்டர் மார்க் அமைப்போமா


உங்கள் சிறிய நிறுவனத்திற்கென பல கடிதங்கள் தயாரிக்கிறீர்கள். அந்தக் கடிதங்களின் பின்னணியில் நிறுவனத்தின் பெயர்
அல்லது இலச்சினை இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.

வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள்.

அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும்.
 என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு
போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில்
 எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட
் அருகே உள்ள Numbering  என்ற ஐகானை அழுத்தவும்.

வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட்
அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.  
டாகுமெண்ட்டில் வாட்டர் மார்க் அமைப்போமா! வாட்டர்
மார்க்கா? டாகுமெண்ட்டில் அமைந்தால் சிறப்பாகத்தான் இருக்கும்
 இல்லையா? நீங்கள் வேர்டில் பெர்சனல் கடிதம் உங்கள் மனம்
 விரும்பிய காதலிக்கு எழுதுகிறீர்கள். அதன் பின்னணியில் அவர்
 உங்களுக்கு அளித்த படம் டெக்ஸ்ட்டைக் கெடுக்காத வகையில்
வாட்டர் மார்க்காக இருந்தால் நன்றாகத்தானே இருக்கும். அல்லது
 உங்கள் சிறிய நிறுவனத்திற்கென பல கடிதங்கள் தயாரிக்கிறீர்கள்.
அந்தக் கடிதங்களின் பின்னணியில் நிறுவனத்தின் பெயர் அல்லது இலச்சினை இருந்தால் எவ்வளவு
சிறப்பாக இருக்கும். வேர்ட் தொகுப்பில் இந்த வாட்டர்
மார்க்கினை அமைத்திட வழி உள்ளது.
முதலில் எந்த டாகுமெண்ட்டிற்கு வாட்டர் மார்க்
 அமைத்திட வேண்டுமோ அதனைத் திறந்திடுங்கள்.
 பின் டூல் பாரில் Formatகிளிக் செய்து வரும் மெனுவில்
 Background  என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
 அதில் கிடைக்கும் சிறிய விண்டோவில் Printed Watermark 
என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் காட்டப்படும்
விண்டோவில் Nணி ஙிச்tஞுணூட்ச்ணூடு, கடிஞிtதணூஞு
ஙிச்tஞுணூட்ச்ணூடு மற்றும் கூஞுதுt ஙிச்tஞுணூட்ச்ணூடு
என மூன்று பிரிவுகள் இருக்கும். இதில் நீங்கள் அமைக்க
 விரும்பும் பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதில் கேட்கும்
பைல் அல்லது டெக்ஸ்ட்டினைத் தரவும். பின் அனைத்து
 விண்டோக்களுக்கும் ஓகே கொடுத்து வெளியே வந்தால்
உங்கள் டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்து வைத்த படம்
அல்லது டெக்ஸ்ட் மெல்லிய கிரே கலரில் டெக்ஸ்ட்டுக்குப்
 பின்புறம் இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் மனதிற்கும்
 சந்தோஷமாக இருப்பதனை உணர்வீர்கள்.

டேபிள் எழுத்துக்களின் அகலத்தைக் குறைக்க:

வேர்டில் டேபிள் அமைக்கிறீர்கள். செல் ஒன்றில் டெக்ஸ்ட
அடிக்கும் போது அகலத்திற்குச் சற்று அதிகமானால் அது என்ன
 செய்கிறது. சொல்லை அப்படியே சுழற்றி அடுத்த வரிக்குக்
கொண்டு செல்கிறது.

இதனால் நீங்கள் எதிர்பார்த்து அமைத்த நீளத்திற்கும் சற்று
 அதிகமான உயரத்தினை செல் அமைத்துக் கொள்கிறது.
 மற்ற செல்களோடு ஒப்பிடுகையில் இது சற்று
வித்தியாசமாகத் தெரிவதால் உங்களுக்கு மனது ஒப்பவில்லை.
உடனே எழுத்துக்களைச் சற்று சிறியதாக்கி அடுத்த வரி
சொல்லை மேலே இருக்கும் வரிக்கே கொண்டு செல்கிறீர்கள்.
 ஆனாலும் மற்ற செல்களில் உள்ளதைக் காட்டிலும் எழுத்துக்கள்
சிறியதாக இருப்பது உங்களை அதிருப்தியாக்குகிறது.

எழுத்தும் சிறியதாகக் கூடாது; ஆனால் வரிகளும் அதிகமாகக்
 கூடாது என்று விரும்புபவர்களுக்கு என்றே வேர்ட் ஒரு வழி
தருகிறது. எழுத்தின் அளவை மாற்றாமல் அதன் உயரத்தை
 மாற்றாமல் அகலத்தை மட்டும் குறைக்கிறது. இதனால் எந்த
 வித்தியாசமும் தெரியாது. அதே நேரத்தில் வரிகளின்
எண்ணிக்கையும் கூடுதலாவதில்லை. இதற்கு கூணிணிடூண்
 பாரில்  Table கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்
Table Properties   தேர்ந்தெடுங்கள். இதில் Cell என்னும் டேபில்
 கிளிக் செய்தால் Cell Options என்ற பிரிவு கிடைக்கும்.

இந்த விண்டோவில் கீழாக  Options  என்பதன் கீழ் Wrap text
மற்றும் Fit text என்ற இரு பிரிவுகள் இருக்கும். இதில்
 Fit text என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே
கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி நீங்கள் டேபிள்
செல்களில் டெக்ஸ்ட் அமைக்கையில் கூடுமானவரை
எழுத்துக்களின் அகலத்தைக் குறைத்து டெக்ஸ்ட்டை
 அமைக்க வேர்ட் டேபிள் முயற்சி செய்திடும்.

தேவையற்ற கோடு வராமல் தடுக்கலாம்: வேர்ட்
தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான
 பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி
சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது
ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு
கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே
வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக
மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை
 நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய
 பார்டர் லைனாகும்.

தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில்
இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை
 அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக்
கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று
 Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில்
உள்ள  None  பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த
பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும்
 என்றால் Tools   மெனுவிற்குச் செல்லுங்கள். அதில்
Auto Correct Optionsஎன்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.
 பின் அதில் AutoFormat As You Type  என்ற டேபிற்குச்
 செல்லுங்கள். Apply as you type  என்ற இடத்தைத்
தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines  என்ற
இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை
எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.

gphpaKld; fUzhfud;.

No comments:

Post a Comment

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive