Health and computer

penguin animated gifs

Saturday 30 October 2010

பி.டி.எப். பைல்களை படிக்க பாக்ஸ் இட் ரீடர்

பி.டி.எப். பைல்களை படிக்க பாக்ஸ் இட் ரீடர்





















பி.டி.எப். பைல்களைப் படிப்பதற்கு
அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்பினை
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தினாலும்
இன்டர்நெட் பிரவுசர்கள் போல பல
பி.டி.எப். ரீடர் தொகுப்புகள் வந்துள்ளன.


. பாக்ஸ் இட் ரீடர் பதிப்பு  முற்றிலும்
புதிய பல வசதிகளுடன் கூடிய
வடிவமைப்பில் வந்துள்ளது. புதிய
அம்சங்களைப் பட்டியலிட்டால்
அது நீளமாக அமைந்திடும். எனவே
சில முக்கிய வசதிள் குறித்து அறியலாம்.


* புக் மார்க் டிசைன்: ஒரு பிடிஎப்
பைலை புக் மார்க் செய்திடும் வசதி
தடை செய்யப்படவில்லை என்றால்
அதில் புக் மார்க் செய்திடலாம்.

* ஒன்றுக்கு மேற்பட்ட பி.டி.எப்
.பைல்களைத் திறந்து படிக்கலாம்.
அவை அனைத்தும் இன்டர்நெட்
பிரவுசரில் இணைய தளங்கள்
தெரிவது போல டேப்களாகத்
தெரியும். தேவைப்படும் பைலின்
டேப்பைக் கிளிக் செய்து படிக்கலாம்.


* ஆடியோ வீடியோ உட்பட பல
மல்ட்டி மீடியா வசதிகளைக்
கொண்டுள்ளது. பி.டி.எப்.பைலில்
இவை இருந்தால் அவற்றைக்
காணலாம்; கேட்கலாம்.

*கால் அவுட் டெக்ஸ்ட் பாக்ஸ்
டூல்: எடிட் செய்து குறிப்புகளை
எழுதி வைக்கலாம்.

* கமெண்ட்ஸ் டெக்ஸ்ட் டூல்:
டெக்ஸ்ட் செலக்ட் செய்து பின்
அதில் ரைட் கிளிக் செய்து அதில்
ஹைலைட், குறுக்குக் கோடு,
அடிக்கோடு என எதனையும் இடலாம்.



* ரூலர்ஸ்: மேலாகவும் நெட்டு
வாக்கிலும் ரூலர் கோடுகள்
தரப்படுகின்றன். இதன் மூலம்
பக்கங்களில் ஆப்ஜெக்ட்களை
சரியான முறையில் வைத்திட
முடிகிறது. இந்த ரூலர்களில் ரைட்
கிளிக் செய்து அளவு முறையை மாற்றலாம்.


* மேக்னிபையர்: பி.டி.எப். டெக்ஸ்ட்டின்
குறிப்பிட்ட பகுதியினைப் பெரிதாக்கிப்
பார்க்கலாம்.


* ஆட்டோமேடிக் ஸ்குரோலிங்: மவுஸ்
அல்லது கீகள் இல்லாமல் டெக்ஸ்ட்டை
ஸ்குரோலிங் செய்து பார்வையிடலாம்.


இவற்றுடன் இன்னும் பல புதிய
வசதிகளுடன் புதிய பரிமாணங்களுடன்
பாக்ஸ் இட் ரீடர் தொகுப்பு இலவசமாகக்
கிடைக்கிறது.இதனைப் பெறுவதற்குச்
செல்ல வேண்டிய தள முகவரி:

 http://www.foxitsoftware.com/pdf/reader_2/down
_reader.htm

 

நீங்களும் பயன்படுத்தி பாருங்களேன்.
  மீண்டும் சந்திப்போம்
   கருணாகரன்.

No comments:

Post a Comment

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive