Health and computer

penguin animated gifs

Tuesday 21 September 2010

கம்ப்யூட்டரில வேலை பார்த்துக் கொண்டிருக் கையில் முதல் தேவை பொறுமை

கம்ப்யூட்டரில வேலை பார்த்துக் கொண்டிருக் கையில் முதல் தேவை பொறுமை
















 


கம்ப்யூட்டரில் மிகவும் பிஸியாக வேலை
பார்த்துக் கொண்டிருக் கையில்
 திடீரென அது சண்டித்தனம் செய்திடும்.
 நகராத குதிரை மாதிரி அப்படியே திரையில்
ஒரே விஷயத்தைக் காட்டிக் கொண்டு
உயிரற்று இருக்கும். மவுஸ் வேலை செய்யாது.
 கீ போர்டை என்ன தட்டு தட்டினாலும் ஒன்றும்
 நடக்காது. ஆனால் நமக்கு பொறுமை போய்
 எரிச்சல் வரும். ஒரு சிலருக்கு பிளட் பிரஷர்
 ஏறும். ஐயோ இன்று இந்த வேலையை
முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டேனே.

இப்படி காலை வாருகிறதே என்று

கத்த தோன்றும். சரி எப்படி பிரச்னையைத்
தீர்க்கலாம். பிரச்னைகளை வெற்றிகரமாகத்
தீர்க்க முதலில் நமக்கு வேண்டியது சரியான
அமைதியான மனநிலை. மனது இருக்கும்
 நிலைதான் நமக்கு நிமிடங்களையும்
நாட்களையும் காட்டும். அது சரியாக
இருந்தால்தான் சிறிய பிரச்னை பெரிதாக
ஆகவிடாமல் தடுக்கும். எனவே கம்ப்யூட்டரில்
பிரச்னை ஏற்படும்போது நாம் மேற்கொள்ள
 வேண்டிய நிலை குறித்து கீழே சில
 வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

1. கம்ப்யூட்டரில் பிரச்னையா? உடனே

பதற்றம் கொள்ளாதீர்கள். உடனே கம்ப்யூட்டர்
 இயக்கத்தை நிறுத்தி விட்டு அமைதியாக
 அமர்ந்துவிட்டு பின் பிரச்னை குறித்து
 யோசியுங்கள். என்ன சார் இது? ஒரு
 வேலையை முடித்து அனுப்ப வேண்டும்.
 கையைக் கட்டிக் கொண்டு உட்காரச்
சொல்கிறீர்களே என்று புலம்பு கிறீர்களா?
 நீங்கள் சொல்லுவதும் சரி தான். ஆனால்
ஒரு சில நிமிடங்கள் அமைதியாய் இருப்பது
 நல்லது. முடிந்தால் அமைதியாக இருப்பது
மட்டுமின்றி ஆழமாக சில நிமிடங்கள்
 மூச்சுவிட்டு தேற்றிக் கொள்ளுங்கள்.

 


2. பிரச்னை ஒன்றும் அவ்வளவு பெரிதாக
 இருக்காது. சில வேளைகளில் ஹார்ட்
டிஸ்க் கிராஷ் ஆகி நம் டேட்டா அனைத்தும்
இழப்பது நடக்கத்தான் செய்கிறது. ஆனால்
அதுதான் எப்போதும் நடக்கும் என்று
எண்ணாதீர்கள். ஒரு பிரச்னை முதலில்
ஏற்படுகையில் அது எப்படிப்பட்டது என்று
தீர்மானிப்பது மிகவும் சிரமமான காரியமாகும்.
எனவே எந்த சூழ்நிலையில் அந்த பிரச்னை
ஏற்பட்டது என எண்ணிப் பார்ப்பது நமக்கு
தெளிவான முடிவைக் கொடுக்கும்.

3. பிரச்னை என்னவென்று உணராமல்
அது குறித்த முடிவுகளை எடுக்க வேண்டாம்.
 ஒவ்வொரு கோணத்திலும் பிரச்னை குறித்து
எண்ணிப் பார்க்கவும். ஏதாவது ஒரு செட்டிங்கை
 மாற்றி அமைப்பதன் மூலம் பிரச்னையைத்
தீர்த்து விடலாம். எனவே உடனே
ஹார்ட் டிஸ்க்கை ரீ பார்மட் செய்திட
 முடிவெடுக்க வேண்டாம்.


 

4. முதலில் அனைத்து வழிகள் குறித்தும்
எண்ணிப் பார்க்கவும். அண்மையில்
கம்ப்யூட்டரில் நீங்கள் ஏற்படுத்திய
மாற்றங்களை எண்ணிப் பார்க்கவும்.
 எந்த சாப்ட்வேர் தொகுப்பையாவது
வேண்டாம் என்று நீக்கினீர்களா? அல்லது
எதனையாவது புதியதாக கம்ப்யூட்டரில்
இணைத்தீர்களா? அல்லது ஏதாவது ஒரு
 ஹார்ட்வேர் சாதனத்தை இணைத்துள்ளீர்களா?
 பிரிண்டர், ஸ்கேனர், விடியோ கேமரா அல்லது
 வேறு ஏதாவது சேர்த்தீர்களா? அல்லது
உங்களுக்கு வந்துள்ள மின்னஞ் சலுடன்
இருந்த இணைப்பு கோப்பைத் திறந்து
 பார்த்தீர்களா? அல்லது இணையத்திலிருந்து
ஏதேனும் பைல் ஒன்றை இறக்கிப் பதிந்தீர்களா?
 இவற்றில் ஏதேனும் ஒரு செயல் உங்கள்
கம்ப்யூட்டர் இயக்கத்தில் ஒரு சாதாரண
பிரச்னையை ஏற்படுத்தியிருக்கலாம்.



5. உங்களுக்கு நேரம் கிடைக்கையில்
கம்ப்யூட்டர் பிரச்னை குறித்து செயல்படவும்.
 ஆனால் சாப்பிட 10 நிமிடம் இருக்கையில்
இந்த பிரச்னையெல்லாம் எடுத்துக்
கொள்ள வேண்டாம். அமைதியான மன நிலையில்
பிரச்னைக்கு செலவழிக்க நிறைய நேரம் இருக்கும்
 போது பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிக்கவும்.

 
6. உங்களுடைய கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர்
சரியில்லை என்று உடனே குற்றம் சாட்டாதீர்கள்.
 ஒரு சிலர் கீ போர்டையெல்லாம் எடுத்து
அறையில் எறிவார்கள். தேவையா? அல்லது
மானிட்டரை தட்டுவார்கள். இது பிரச்னையைப்
 பெருக்கத் தான் செய்திடும். அதே போல பிரிண்டர்
வேலை செய்யவில்லை என்றால் அதனைத்
தூக்கி தட்டாமாலை சுற்றுவோரும் உண்டு.
 பேப்பர் ஜாம் ஆனால் இருக்கிற ரோலரை
எல்லாம் பிய்த்து எறிபவர்களும் உண்டு.
 இதனையெல்லாம் செய்வதெல்லாம் எந்த
பயனும் உண்டாவதில்லை.

7. கம்ப்யூட்டர் பிரச்னையைத் தீர்க்க உட்கார்ந்து

 பல நிமிடங்கள் அல்லது மணி ஆன பின்னரும்
 பிரச்னை தீரவில்லையா? சிறிது ஓய்வெடுத்துக்
 கொள்ளுங்கள். மனதின் இறுக்கத்தைத் தளரச்
செய்திடும் வேலையில் ஈடுபட்ட பின்னர்
மீண்டும் கம்ப்யூட்டருக்கு வாருங்கள்.

8. கம்ப்யூட்டரைப் பொறுத்த மட்டில் எல்லாம்

 தெரிந்தவர் யாருமில்லை. எனவே உங்கள்
பிரச்னை குறித்து மற்றவர்களிடம் விவாதிக்கக்
கூச்சப்பட வேண்டாம். கம்ப்யூட்டர் பிரச்னை
குறித்து தெரிந்த உங்கள் நண்பரை அழையுங்கள்.


பிரச்னை ஏற்பட்ட விதம் குறித்து கலந்தாய்வு

 செய்திடுங்கள். கம்ப்யூட்டர் டிப்ஸ் தரும்
இணைய தளங்களுக்குச் சென்று அங்கு
பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் தகவல்களை
ஆழ்ந்து படியுங்கள். அல்லது மெசேஜ் போர்டு
மின்னஞ்சல் குழுக்களுக்கு பிரச்னை குறித்து
 தகவல்கள் அனுப்பி உதவி கேளுங்கள்.
 ஆனால் அனைத்திற்கும் உங்கள் மனநிலை
 சரியாக இருப்பது மிக மிக அவசியமான ஒன்று.
 அப்படி இருந்தால் நிச்சயமாய் பிரச்னையின்
காரணத்தைத் தெரிந்து கொண்டு அதனைத்
 தீர்த்துவிடலாம்.

எனது வலைபூவிற்கு வருகை
தந்ததிக்கு நன்றி
பிரியமுடன்
 கருணாகரன்


No comments:

Post a Comment

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive