உங்களுக்குப் பிடித்த இணைய தளங்களுக்கு ஷார்ட் கட் ஐகான் இருந்து அவற்றைக் கிளிக் செய் தால் நேரடியாக நீங்கள் அந்த தளத்திற்குச் சென் றால் எப்படி இருக்கும்? அப்படிச் செய்ய முடியுமா?
முடியும். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தொகுப் பில் உங்களுக்குப் பிடித்த இணைய தளத்தைப் பார்க்கையில் தளத்தின் முகவரிக்கு அருகே சிறிய ஆங்கில எழுத்தான “e” இருக்கும் அல்லவா? இப்போது உங்கள் பிரவுசர் விண்டோவைச் சிறிய தாக்கி அதன் பின் அந்த சிறிய “e” எழுத்து உள்ள கட்டத்தை இழுத்து வந்து டெஸ்க்டாப்பில் உள்ள காலியிடத்தில் விட்டு விட்டால் அதுதான் உங்களுக்குப் பிடித்த தளத்தின் ஷார்ட்கட். இந்த ஐகான்களின் மீது கிளிக் செய்தால் பிரவுசர் திறக்கப்பட்டு நீங்கள் தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். எனது வலைபூவிற்கு வருகை
தந்ததிக்கு நன்றி
பிரியமுடன்
கருணாகரன்
No comments:
Post a Comment