Health and computer

penguin animated gifs

Thursday, 23 September 2010

படங்களை மொத்தமாகச் சுழற்ற:

படங்களை மொத்தமாகச் சுழற்ற:

 

















டிஜிட்டல் கேமரா அல்லது மெமரி
கார்டுகளிலிருந்து போட்டோக்களை
 கம்ப்யூட்டருக்கு மாற்றுகையில் நெட்டு
 வாக்கில் எடுத்த படங்கள் படுக்கை
 வாக்கான நிலையில் தெரியும். இதனை
 நேராக அமைக்க வேண்டும் என்றால்
ஒவ்வொன்றாகத் திறந்து Rotate என்னும்
 வசதியைப் பயன்படுத்தி அமைக்க வேண்டும்.
 இதற்குப் பதிலாக சுழற்ற வேண்டிய படங்கள்
 அனைத்தையும் மொத்தமாக சுழற்றி
அமைத்திட முடியும். போட்டோக்களை
 கம்ப்யூட்டருக்கு காப்பி செய்தவுடன்
அவை உள்ள போல்டருக்குச் செல்லவும்.


போல்டரைத் திறந்து படங்களுக்கான

 Thumbnails எனப்படும் சிறிய படங்கள்
கிடைக்கும் படி திறந்து கொள்ளவும்.
 இந்த தம்ப் நெய்ல் படங்கள் கிடைக்க
 வேண்டும் எனில் மெனு பாரில் View
வில் கிளிக் செய்து கிடைக்கும் மெனு
 கட்டத்தில் கூட Thumbnails என்னும்
 பிரிவில் கிளிக் செய்தால் போட்டோக்களின்
 சிறிய உருவங்கள் பைல்களின்
பெயர்களுக்கு மேலாகத் தெரியும்.
 இப்போது Ctrl  கீயை அழுத்திக்
கொண்டு எந்த போட்டோக்களை
சுழற்ற வேண்டுமோ அதன் மீது
 ஒவ்வொன்றாக இடது மவுஸ்
பட்டனால் கிளிக் செய்திடவும்.
 இப்போது சுழற்ற வேண்டிய
போட்டோக்கள் அனைத்தும் செலக்ட்
 செய்யப்பட்டுவிடும். இனி ஏதாவது
ஒரு படத்தின் மீது ரைட் கிளிக்
 செய்யவும். கிடைக்கும் மெனுவில்
Rotate Clockwise என்பதில் கிளிக்
 செய்தால் விண்டோஸ் உங்களுக்காக
 இந்த படங்களைச் சுழற்றிக் கொடுக்கும்.
 இந்த வசதி விண்டோஸ்
எக்ஸ்பியில் உள்ளது.

 எனது வலைபூவிற்கு வருகை
தந்ததிக்கு நன்றி
பிரியமுடன்
 கருணாகரன்  
 

1 comment:

  1. Please start a separate blog for tech posts. I will give you good exposure in top ten.

    ReplyDelete

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive