1. மிகப் பெரிய பைல்களை அனுப்ப இதுவரை
YouSendIt என்னும் தளம்தான் அதிகமான
வசதிகளுடன் பயன்படுத்தப்பட்டு வந்த
பயனுள்ள தளம் என்று எண்ணி இருந்தோம்.
ஆனால்
www.mediafire.com என்னும் தளம்
அதனையும் தூக்கிச் சாப்பிடும் வகையில்
மிகப் பெரிய பைல்களைக் கையாள்கிறது.
அது மட்டுமின்றி இந்த தளத்தில் இயங்குவது
மிக எளிதாக உள்ளது.
2. இன்ஸ்டண்ட் மெசஞ்சர் மூலம் பிறருடன்
செய்திகளை உடனுடக்குடன் பேசி, டைப்
செய்து அனுப்ப முடிகிறது. அத்தகைய வசதிகள்
தரும் தளங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து
ஒரே தளத்தில் கிடைக்கும்படி
http://www.meebo.com/
என்ற தளம் இயங்குகிறது. .
AIM, Gchat, Yahoo!, MSN
என இன்னும் பல இன்ஸ்டண்ட் மெசஞ்சர்
தளங்கள் நிறைய இந்த தளத்தில் கிடைக்கின்றன.
3. ஆடியோ, வீடியோ, டாகுமெண்ட் வகைகள்
பல்வேறு பார்மட்டுகளில் கிடைக்கின்றன.
அனைவரும் அனைத்து வகைகளையும் கையாள
முடியாது. எனவே தங்களுக்குத் தேவயான
பார்மட்டுகளில் கிடைக்கும் பைலை மாற்ற வசதி
தேடுகின்றனர். இவர்களுக்கு உதவிடும் தளமாக,
எந்த பார்மட்டையும் மாற்றித் தரும் தளமாக
http://www.youconvertit.com/ என்ற முகவரியில்
உள்ள தளம் இயங்குகிறது.
4. கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் பழக்கத்திற்கு
நீங்கள் அடிமையா? அப்படியானால்
http://www.addictinggames.com/ என்ற முகவரியில்
உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். யு–ட்யூப் தளத்தில்
கிடைப்பது போன்ற பிளாஷ் அடிப்படையிலான பல
கேம்ஸ் தொகுப்புகள் இங்கு உள்ளன. நீங்களே
உங்கள் கேம்ஸ் ஒன்றை இங்கு பதிக்கலாம்.
உங்களுடைய தளத்திற்கு ஒரு கேம்ஸ் எடுத்துச்
சென்று பதித்துக் கொள்ளலாம்.
5. யாருக்கும் அறிமுகம் தேவைப்படாத ஒரு தளம்
யு–ட்யூப் தளமாகும். ஆன்லைன் வீடியோ என்றால்
அது யு–ட்யூப் தான். 2005 ஆம் ஆண்டு பே பால்
தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சிலரின்
முயற்சியால் அறிமுகமான இந்த தளம் கூகுள்
உடன் இணைந்து இன்று உலக அளவில் எந்த
வீடியோவையும் யாரும் மற்றவருக்குக் காட்ட
பயன்படுத்தக் கூடிய தளமாகச் சிறப்பாகச்
செயல்பட்டு வருகிறது. இதன் முகவரி
அனைவருக்கும் தெரியும் என்றாலும் இதோ
இங்கும் தருகிறோம்.
http://www.youtube.com/
6. அறிவியல் தேடல்களின் உச்சகட்ட தளமாக
இயங்குகிறது. விண்ணில் என்ன நடக்கிறது
என மாணவர்களும், ஆசிரியர்களும் கற்று அறிய
அனைத்து தகவல்களையும் தருகிறது. விண்ணில்
இயங்கும் கோள்கள் குறித்த தகவல்கள், விண்ணில்
செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள் சார்ந்த திட்ட
தகவல்கள் இங்கு எளிதாக்கப்பட்ட வகையில்
வகைப்படுத்தப்பட்ட வழிகளில் கிடைக்கின்றன.
தளத்தின் ஆரம்பத்தில் முதல் ஐம்பது ஆண்டு களில்
நாசா மையம் வளர்ந்த வகையைக் காணலாம்.
அதன்பின் விண்ணில் வலம் வரும் கோள்கள்
குறித்து அறியலாம். இந்த தளத்தின்
முகவரி:
http://www.nasa.gov/
7. விண்வெளியிலிருந்து இன்றைய நானோ
தொழில் நுட்பம் வரை உங்களுக்கு எதில்
சந்தேகம் வந்தாலும் அதனைத் தீர்த்து வைக்கும்
வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த தளம். அறிவியலின் எந்த முனையையும்
விட்டுவைக்காமல் அனைத்தும்
குறித்த தகவல்கள் இங்குள்ளன.
நாம் தேடும் எதனையும் பெறலாம்
என்ற நம்பிக்கையுடன் இந்த தளத்திற்குச்
செல்லலாம். தள முகவரி:
http://www.sciencedaily.com/
8. நம் உடல் நலம் குறித்து நாம் தெளிவாக
அறிந்து கொள்ள உள்ள தளங்களில் முதல்
இடத்தை இந்த தளம் கொண்டுள்ளது.
WebMD
மற்றும்
Symptom Checker என்ற பிரிவுகளில்
உடல்நலம் குறித்து சரியாக அறிந்து
கொள்ளலாம். நீங்கள் நோயாளியா? உங்களை
எது உடலுக்குள் ளாக வருத்திக்
கொண்டிருக்கிறது என்பதை இந்த தளத்தின்
மூலம் அறியலாம். இதன்
முகவரி:
http://www.webmd.com/
9. உங்களிடம் இன்டர்நெட் கனெக்ஷன்
இருந்தால் ஆங்கில மொழியில் நீங்கள்
ஏற்படுத்தும் ஸ்பெல்லிங் தவறுகளுக்கு
சமாளிப்புகளைத் தர முடியாது. ஏனென்றால்
www. dictionary.com என்ற முகவரியில் உள்ள
தளம் பல வசதிகளுடன் கூடிய டிக்ஷனரியைத்
தருகிறது. சொற்களுக்குப் பொருள் கூறும்
டிக்ஷனரி மட்டுமின்றி ஒரே பொருள் கொண்ட
பிற சொற்கள் தரும் தெசாரஸ், கலைக்
களஞ்சியங்கள், மொழி பெயர்ப்பாளர்களுக்கு
உதவி என இன்னும் பல வசதிகளைக்
கொண்டுள்ளது. ஆங்கிலத்தில்
டாகுமெண்ட்களைத் தயாரிப்பவர்களுக்கு
கூடவே இருந்து உதவிடும் அருமையான
தளம் இது. இதன்
முகவரி :
http://www.dictionary.com/
10. தேடுதல் தளங்களில் ஏக போக
சக்கரவர்த்தியாக மாதந்தோறும் ஏதாவது
புதிய வசதிகளை இணைத்துக் கொண்டே
செல்லும் கூகுள் தேடும் தளம் குறித்து
இங்கு தனியாக எதுவும் சொல்ல
வேண்டியதில்லை. இருப்பினும்
அதன் முகவரி
http://www.google.com/
11. எந்த சாதனம் எப்படி இயங்குகிறது?
இந்த அறிவியல் கோட்பாடு என்ன
சொல்கிறது? என்ற பெரிய அளவிலான
சந்தேகம் மட்டுமின்றி அன்றாட நடைமுறை
வாழ்க்கையின் சாதாரண செயல்பாடுகளுக்கும்
கூட அறிவியல் விளக்கம் வேண்டுமா?
http://www.howstuffworks.com/ என்ற
முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.
ஜி.பி.எஸ். எப்படி நம் இடத்தைக் கண்டுபிடிக்கிறது
என்பதிலிருந்து வெங்காயம் உரித்தால்
ஏன் கண்ணில் நீர் வருகிறது என்பது வரை
அனைத்து வகையான தேடல்களுக்கும் பதில்
தரும் தளமாக இது இயங்குகிறது. இதன்
முகவரி :
http://www.howstuffworks.com/
12. எப்படி ஒன்றை நிறைவேற்றுவது?
மிளகு எப்படி பயிரிடுவது? என்பதிலிருந்து
உங்களுடைய எக்ஸ் பாக்ஸ் சாதனத்தினை
எப்படி செட் செய்யலாம் என்பது வரை
அனைத்து வினாக்களுக்கும் விடை
அளிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள
தளம்
http://www.instructables.com/ அது
மட் டுமின்றி உங்களிடமும் ஒரு பொருள்
குறித்த திட் டம் இருந்தால் இந்த தளத்தில்
ஏற்றி வைக்கலாம். காண வேண்டிய
முகவரி :
http://www.instructables.com/
14. யார் வேண்டுமானலும் இந்த தளம்
அனுமதிக்கும் மொழியில் எந்த பொருள்
குறித்த அல்லது ஆட்கள் குறித்த தகவல்களை
இங்கு கட்டுரையாக ஏற்றலாம். இதனால்
உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை என்றால்
இங்கு சென்று பெறலாம். தவறான தகவல்
என்று தெரிந்தால் நீங்களே திருத்தலாம்.
இதனைப் பயன்படுத்துபவர்களே எடிட்டர்களாக
இருப்பது அதிசயம் அல்லவா! இணையத்தில்
ஒரு கலைக் களஞ்சியமாக உருவாகி இன்று
அனைவரும் அடிக்கடி சென்று வரும் ஓர்
தளமாக பெயர் பெற்றுள்ளது விக்கிபீடியா.
இதன்முகவரி:
http://www.wikipedia.org/
எனது வலைபூவிற்கு வருகைதந்ததிக்கு நன்றி
பிரியமுடன்
கருணாகரன்