Health and computer

penguin animated gifs

Thursday 7 October 2010

ஸ்டார்ட் மெனுவில் கூடுதல் புரோகிராம்கள்:

  ஸ்டார்ட் மெனுவில் கூடுதல்
 புரோகிராம்கள்:




















 ஸ்டார்ட் மெனுவில்
புரோகிராம்களுக்கான ஷார்ட் கட்கள்
உள்ளன. இவற்றைக் கிளிக் செய்தால்
 அந்த புரோகிராம்கள் திறக்கப்பட்டு
செயல்பாட்டிற்குக் கிடைக்கும்.
இவற்றை எண்ணிப் பாருங்கள்.
ஆறுதான் இருக்கும். அப்படியானால்
 கூடுதலாக புரோகிராம்களுக்கான
சுருக்கு வழிகளை இந்தப் பட்டியலில்
அமைக்க வேண்டும் என்றால் என்ன
 செய்திட வேண் டும். ஸ்டார்ட் பட்டனில்
 ரைட் கிளிக் செய்திடுங் கள். கிடைக்கும்
மெனுவில் ப்ராபர்ட்டீஸ் கிளிக் செய்து
 இன் னொரு விண்டோவினைப்
பெறுங்கள். இந்த விண்டோவில்
கஸ்டமைஸ் பட்டனை அழுத்தவும்.
புதியதாகத் திறக்கப்படும் டயலாக்
பாக்ஸ் நடுவே உள்ள புரோகிராம்
செக்ஷனில் Number of Programs in the
 Start menu என்று இருப்பதனைக்
காணலாம்.இதில் அருகே 6 என்று
இருக்கும். இதன் மேல் கீழ் அம்புக்
 குறிகளை அழுத்தி புரோகிராம்களின்
எண்ணிக்கையினை அதிகப்படுத்தலாம்
அல்லது குறைக்கலாம். இந்த எண்ணை
 செட் செய்தபின் ஓகே கிளிக் செய்து
வெளியேறவும். இனி நீங்கள் செட்
செய்த எண்ணிக்கைக்கேற்ப ஸ்டார்ட்
மெனுவில் ஷார்ட் கட்கள் அமைக்கப்படும்.

டெஸ்க் டாப்பைப் பெற:
 பல புரோகிராம்களை இயக்கிக்
 கொண்டிருக்கையில் டெக்ஸ்க் டாப்பில்
 உள்ள இன்னொரு புரோகிராமினை இயக்க
 டெஸ்க் டாப் திறக்கப்பட வேண்டும் என
 விரும்புவோம். அதற்கு பல வழிகள் உள்ளன.
 டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து வரும்
 மெனுவில் ‘Show the Desktop’’ என்று இருப்பதைக்
 கிளிக் செய்திட வேண்டும். உடனே டெஸ்க் டாப்
 திரை கிடைக்கும். மீண்டும் இயங்கிக் கொண்டிருந்த
 புரோகிராம் வேண்டும் என்றால் அதே
போல கிளிக் செய்து Show Open Windows என்று
 இருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதே செயலை
 கண்ட்ரோல் +டி அழுத்தியும் கண்ட்ரோல்+எம்
அழுத்தியும் மேற்கொள்ளலாம்.

எனது வலைபூவிற்கு வருகை தந்ததிக்கு நன்றி

 பிரியமுடன்
  கருணாகரன் 





 

1 comment:

  1. நல்ல பதிவு புதியவர்களுக்கு உதவும்
    நன்றி

    ReplyDelete

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive