Health and computer

penguin animated gifs

Friday 8 October 2010

வேலையை எளிதாக்கும் டேப்+ஸ்பேஸ் கீ

வேலையை எளிதாக்கும் டேப்+ஸ்பேஸ் கீ








 நாம் பிரவுசிங் செய்கையில் பல இன்டர்நெட்
 தளங்களில் தகவல் பெற நம்மைப் பதிவு
செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படும். சரி
எனப் பதிவு செய்திட கிளிக் செய்தால் திரை
முழுவதும் கட்டங்களாகக் காட்டப்பட்டு
ஒவ்வொன்றாக பெயர், முகவரி, இமெயில்
முகவரி, நிறுவன அல்லது தனி நபர்
 தகவல்கள், அஞ்சல் முகவரி, எத்தனை
 பேர் உங்களிடம் பணியாற்றுகின்றனர்,
 உங்கள் முகவரியைப் பிறருக்குத் தரலாமா,
எங்கள் நிறுவன வார, மாத இதழ்களை
 இமெயில் முகவரிக்கு அனுப்பவா என்பன
போன்ற பல தகவல்களுக்கான
கட்டங்கள் இருக்கும்.


இதில் ஒவ்வொன்றாக மவுஸ்
கொண்டு சென்று பின் கீ போர்டில்
டேட்டாவை டைப் செய்திட வேண்டும்.
சில டேட்டாக்களைத் தர அங்கிருக்கும்
சிறிய கட்டத்தில் டிக் மார்க் அடையாளம்
 ஏற்படுத்த வேண்டும் இதற்காக கீ
போர்டுக்கும் மவுஸுக்குமாக கைகளைக்
 கொண்டு சென்று மவுஸைக் கைப்பற்றி
பணியாற்றுவது சற்று சலிப்பைத் தரும்.

இதனை எப்படி கீ போர்டிலேயே
 மேற்கொள்ளலாம் என்று பார்க்கையில்
இந்த டிப்ஸ் கிடைத்தது. இதற்கு சிறந்த வழி
 டேப் கீ மற்றும் ஸ்பேஸ் பார்
பயன்படுத்துவதுதான். பெயர், முகவரி,
 இமெயில் முகவரிகளைக் கேட்டுள்ள
 கட்டங்கள் அல்லது அடுத்தடுத்த
 வரிகளுக்கான கட்டங்களுக்குச் செல்ல டேப்
 கீயைத் தட்டலாம். கர்சர் தானாக அடுத்த
கட்டத்திற்குத் தாவிச் சென்று நிற்கும்.
எடுத்துக் காட்டாக உங்கள் பெயரை பூர்த்தி
செய்தபின் டேப் கீயைத் தட்டுங்கள். உடனே
 அடுத்த கட்டத்திற்கு கர்சர் தாவிவிடும்.
 இப்படியே அந்த படிவம் முழுவதும் செல்லலாம்.


அடுத்ததாக கட்டங்களில் அல்லது சிறிய
 வட்டங்களில் டிக் மார்க் அடையாளம்
அல்லது புள்ளி வைக்க வேண்டியுள்ளதா?
 நீங்கள் ஆணா? பெண்ணா? என புள்ளி
வைக்குமாறு கேட்கிறதா? எப்போதெல்லாம்
ஒரு டிக் மார்க் அடையாளம் அல்லது
பாக்ஸை செக் செய்திடும் வகையில்
ஏதேனும் குறியீடு கேட்கப்படுகிறதா?
அப்போது ஸ்பேஸ் பாரைத் தட்டுங்கள்.
அந்த வரியில் உள்ள கட்டத்தில் அல்லது
 வட்டத்தில் டிக் மார்க் அடையாளம்
அல்லது புள்ளி இடப்படும்.


எனது வலைபூவிற்கு வருகை தந்ததிக்கு நன்றி

 பிரியமுடன்
  கருணாகரன் 

No comments:

Post a Comment

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive