Health and computer

penguin animated gifs

Saturday 9 October 2010

கம்ப்யூட்டருக்கான பராமரிப்பு வேலைகள்

கம்ப்யூட்டருக்கான பராமரிப்பு வேலைகள்


















கம்ப்யூட்டரை வாங்குவதும் வாங்கிப்
பயன்படுத்துதும் பெரிய காரியமில்லை.
 அதனைத் தொடர்ந்து எந்த பிரச்னையும்
இன்றி பயன்படுத்த அடிக்கடி சில பராமரிப்பு
 வேலைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
 இல்லையேல் என்றாவது ஒரு நாள்
 திடீரென முடங்கிப் படுத்து சண்டித்தனம்
செய்திட ஆரம்பித்துவிடும் உங்கள் கம்ப்யூட்டர்.
 அந்த வேலைகள் எவை எவை என்று இங்கு
பார்க்கலாம்.


1. வைரஸ் ஸ்கேன்: வைரஸ்கள் நாள்
 தோறும் பல தோன்றி நம் நிம்மதியைக்
கெடுத்துக் கொண்டிருக்கின்றன.
 எப்படியாவது இணைய தளங்களைப்
பார்வையிடுகையில் நுழைகின்றன.
 இல்லையேல் பைல்களைத் தாங்கி
வரும் மீடியாக்கள் மூலம் பரவுகின்றன.
எனவே வைரஸ்களுக்கான ஸ்கேனிங்
வேலைகளை நாம் அவசியம் கம்ப்யூட்டரில்
 மேற்கொள்ள வேண்டும்.
குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒரு
முறையாவது வைரஸ் ஸ்கேன்
செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இந்த செயல்பாட்டைக் கூட கம்ப்யூட்டரில்
 செட் செய்து விட்டால் தானாகவே அது
ஸ்கேன் செய்திடத் தொடங்கும். அநேகமாக
அனைத்து வைரஸ் பாதுகாப்பு தொகுப்புகளிலும்
 ஸ்கேன் செய்வதற்கான தேதி, காலம் செட்
செய்வதற்கு வசதிகள் தந்திருப்பார்கள். அதே
போல உங்கள் கம்ப்யூட்டரை எப்போதும்
 வைரஸ் பாதுகாப்பு கவசத்தில் இருக்கும்படி
 அந்த தொகுப்பை இயக்கும் வழியும்
தரப்பட்டிருக்கும். இதனை AutoProtect எனக்
கூறுவார் கள். இதனை இயங்கும்படி
அமைத்திட வேண்டும். அதே போல
வைரஸ் பைல் ஒன்று தென்பட்டால்
என்ன செய்திட வேண்டும்.


அழிக்க வேண்டுமா? இயலாவிட்டால்
குவாரண்டைன் செய்திட வேண்டுமா?
என்ற படி பல ஆப்ஷன்ஸ் இருக்கும்.
இதனையும் நம் விருப்பத்திற்கேற்றபடி
 தேர்ந்தெடுத்து அமைத்திட வேண்டும்.
அதே போல வைரஸ் தொகுப்பு
ஒன்றினைப் பதிந்த பின்னர் அதனை
அவ்வப்போது மேம்படுத்த வேண்டும்.
இணைய தொடர்பு கொண்டு அதற்கான
 செயல்பாட்டை மேற்கொள்ள
 தொகுப்பிலேயே வசதி இருக்கும்.
இதனை Live Update எனக் கூறுவார்கள்.
இதனை தினந்தோறும் கூட செயல்படுத்தலாம்.
 அல்லது வாரம் அல்லது மாதம் ஒருமுறை
 மேற்கொள்ளலாம்.


கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய இன்னொன்று
 adware/spyware program் என்பதாகும். இது
வைரஸ் பாதுகாப்பு தொகுப்பு போல அவ்வளவு
சீரியஸான விஷயம் இல்லை என்றாலும்
இதுவும் இருப்பது தான் நல்லது. அப்போது
 தான் உங்கள் கம்ப்யூட்டரை வேவு பார்க்கப்
பிறர் அனுப்பும் புரோகிராம்களை இது
கண்டுபிடித்து உங்களுக்குச் சொல்லும்.
  எனவே அவசியம் இதனை இறக்கிப்
பதிந்து செயல்படுத்தவும். அடுத்ததாக
உங்கள் கம்ப்யூட்டரில் தேவையற்ற
வகையில் சில பைல்கள் டிஸ்க் இடத்தைப்
 பிடித்துக் கொண்டிருக்கும். இதனைக்
 கம்ப்யூட்டரே கண்டுபிடித்து காலி செய்து
 உங்கள் டிஸ்க்கில் இடத்தை வீணாக்காமல்
பார்த்துக் கொள்ளும். இதற்கு நீங்கள்
 disk cleanup என்ற செயல்பாட்டை
மேற்கொள்ள வேண்டும். சி டிரைவ்
சென்று அதில் வலது பக்கம் கிளிக்
செய்து பின் Properties என்னும்
 பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.


உடன் உங்களுக்குச் சிறிய அளவிலான
பை சார்ட் என்னும் வரை படம் வட்டமாகக்
 கிடைக்கும். இதில் டிஸ்க்கில் எவ்வளவு
இடம் இன்னும் காலி உள்ளது என்ற தகவல்
தெரியும். அந்த வரை படம் அருகேயே
 Disk Cleanup என்ற சொற்கள் தெரியும்
கட்டத்தில் கிளிக் செய்தால் உங்கள்
 டிஸ்க் கிளீன் செய்யும் பணி தொடங்கும்.
 முதலிலேயே உங்கள் டிஸ்க்கில் எவ்வளவு
 இடம் காலி செய்யப்படும் என்ற தகவலும்
கிடைக்கும். நீங்களே ஆச்சரியப்படும்
வகையில் தேவையற்ற பைல்கள், அல்லது
அவற்றின் நகல்கள் எவ்வளவு இருந்தன
என்பதனைக் கண்டு கொள்ளலாம். இந்த
செயல்பாட்டுடன் இன்னொன்றையும்
மேற்கொள்ள வேண்டும். நாம் அடிக்கடி
 பல சிறிய புரோகிராம்களை ஆர்வத்தில்
 கம்ப்யூட்டரில் பதிந்து வைப்போம்.


காலண்டர்கள், டைரிகள், விளையாட்டுக்கள்
 போன்றவை இதில் அடங்கும். ஆனால்
இவற்றை ஓரிரு முறை இயக்கிய பின்னர்
அப்படியே மறந்துவிடுவோம். இவற்றை
 அவ்வப்போது கம்ப்யூட்டர் டிஸ்க்கில்
இருந்து காலி செய்திட வேண்டும். அதற்கு
 Start, Control Panel சென்று அதில் உள்ள
 பிரிவுகளில் Add/Remove என்ற பிரிவைத்
 தேர்ந்தெடுத்து பட்டன் கிளிக் செய்தால்
 அங்கு உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள
புரோகிராம்கள் வரிசையாகப் பட்டியலிட்டுக்
காட்டப்படும். இவற்றை ஒவ்வொன்றாகக்
காலி செய்திடக் கட்டளை கொடுத்தால்
 அவை காலி செய்யப்பட்டு அந்த இடம்
 உங்களின் பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.


இந்த பட்டியலில் ஒரு புரோகிராமை
நீங்கள் இறுதியாக என்று பயன்படுத்தினீர்கள்
 என்ற விபரமும் கிடைக்கும். இதை வைத்தே
அந்த புரோகிராம் உங்களுக்கு எவ்வளவு
தேவையற்றது என்பதனை நீங்கள் உணரலாம்.
 அதே போல சில பைல்களை நீங்களே தணிக்கை
 செய்திடலாம். உங்களின் ஸ்கூல் ரிகார்டைக்
கூட நீங்கள் அழிக்காமல் வைத்திருக்கலாம்.
 யாருக்காகவோ எழுதிய கடிதங்கள் இருக்கலாம்.
 இவை எல்லாம் தேவை இல்லை என்று
எண்ணினால் உடனே அழித்து விடலாம்.
 டிஸ்க் இடம் கிடைக்கும். இந்த வேலை
யினை வாரம் ஒரு முறை செய்திட
 வேண்டியதில்லை. இரண்டு அல்லது
 மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
மேற்கொண்டால் போதும். இதே போல்
 என்றோ வந்த மின்னஞ்சல் கடிதங்களை
 இன் பாக்ஸிலும் ட்ராஷ் பாக்ஸிலும்
 வைத்திருக்க வேண்டிய தில்லை.
இவற்றையும் காலி செய்திடலாம்.
இதே முறையில் உங்களுடைய
பிரவுசரில் உள்ள ஹிஸ்டரி (History)
 பகுதிக்குச் சென்று பல மாதங்களுக்கு
முன் பார்த்த தளங்களின் பெயர்ப்
பட்டியலைக் (Clear History) காலி
செய்திடலாம். அத்துடன் இணைந்த
 குக்கிகளையும் பைல்களையும் அழித்திடலாம்.


பிரவுசரைத் திறந்து Tools, Internet Options
 சென்று அங்கே உள்ள Temporary Internet Files
 என்ற பிரிவில் Delete Cookies மற்றும்
Delete Files  என்ற பிரிவுகளைக் கிளிக்
 செய்திட வேண்டும். நம்மில் பலர் பல
புரோகிராம்களின் ஐகான்களை டெஸ்க்
 டாப்பில் வைத்திருப் போம். வெள்ளரிக்காய்
தரையில் படர்ந்து காய்த்திருப்பது போல
இவை நம் மானிட்டர் திரையில் பரவிக்
கிடக்கும். இவற்றை நீக்குவதால் அவை
இயக்கும் புரோகிராம்கள் அழிக்கப்பட
 மாட்டாது. ஆனால் ஐகான்களை
 நீக்கினால் நம் ஹார்ட் டிஸ்க்கில்
இடம் கிடைக்கும்.


அடுத்ததாக உங்கள் ரீசைக்கிள்
 பின் என்னும் குப்பைத் தொட்டியில்
 உள்ள அழித்த பைல்களை அவ்வப்போது
 காலி செய்வதும் நல்லது. ஒரு பைலை
 அழிப்பதாலேயே அது வைத்திருந்த டிஸ்க்
 இடம் நமக்குக் கிடைக்காது. அழித்த பின்
 அது செல்லும் ரீசைக்கிள் பின்னிலிருந்தும்
 அதனை நீக்க வேண்டும். இதற்கு ரீசைக்கிள்
பின் ஐகானின் மீது வலது புறமாகக் கிளிக்
 செய்து அதில் கிடைக்கும் மெனுவில்
Empty Recycle Bin என்பதைக் கிளிக் செய்திடவும்.

எனது வலைபூவிற்கு வருகை தந்ததிக்கு நன்றி

 பிரியமுடன்
  கருணாகரன் 


No comments:

Post a Comment

Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive