Health and computer

penguin animated gifs

Sunday, 21 November 2010

எப்படி உருவாகிறது?

எப்படி உருவாகிறது? 






























உலகில் ஒவ்வொரு நாளும்
வித்தியாசமான எத்தனை எத்தனை
 சாதனங்கள் பொருட்கள் என
தயாரிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.
இப் பொருட்கள் எவ்வாறு
தயாரிக்கப்படுகின்றன. என அறிய
யாருக்குதான் ஆர்வமிருக்காது,
சிறிய பொருட்களில் இருந்து
பெரிய பொருட்கள் வரை அவை
 எவ்வாறு உருவாக்கப்படுகின்றன
என்பதை விபரமாக வழங்கும் தளம்தான்
MADEHOW என்பதாகும். இங்கு குறித்த
பொருட்களின்  உருவாக்கம் பற்றிய
நிழற்படங்களுடன் கூடிய கட்டுரை
எழுதப்பட்டுள்ளது.http://www.madehow.com/
 நீங்களும் சென்றுதான் பாருங்களேன்
பிரியமுடன் கருணாகரன்.

Wednesday, 17 November 2010

ரொம்பச் சிறிய இணையதளம்.

ரொம்பச் சிறிய இணையதளம்.
















உலகிலே கின்னஸ் சாதனைகளை
நிலைநாட்டுவதற்கு சாதரண அளவில்
உள்ள பொருட்களை ஆகசிறிதாக
அல்லது மிகப்பெரியதாக உருவாக்கும்
வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது.
அந்த வகையில் மிகசிறிய கணணி
மிகசிறிய வாகனம் என்றெல்லாம்
கேள்விப்பட்டு இருப்பிர்கள். உலகிலேயே
மிகச்சிறிய இணையத்தளம்
இங்குhttp://www.guimp.com/ உள்ளது
இவ் இணையத்தளம் பல கணணி
விளையாட்டுகளை தன்னகத்தே
கொண்டுள்ளது. இவ் இணையத்தளத்தின்
அளவு வெறும் 18pixels-18pixels ஆகும்.
இங்கு சென்றுதான் பாருங்களேன்.
மீண்டும் சந்திப்போம் கருணாகரன்.

Saturday, 13 November 2010

உள்ளங்கையில் பயனுள்ள இணையதளம்

உள்ளங்கையில் பயனுள்ள இணையதளம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
இதில் முக்கிய தளங்களைத் தொடர்பு கொள்ள
 லிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
 இவற்றில் ஒருமுறை கிளிக் செய்தால்
 போதும். முகவரியில் எந்த எழுத்துக்களையும்
 டைப் செய்திடத் தேவையில்லை.

பல இணைய தளங்கள் நாம் அன்றாடம்
 செல்லும் இணைய தளங்களாக அமைகின்றன.
 இவற்றில் இமெயில், புதிய தகவல்கள்,
 உறவுகளுக்கு கடிதங்கள், கேள்விகளுக்குப்
 பதில்கள் எனப் பலவகையான செயல்களை
 மேற்கொள்கிறோம்.
இந்த தளங்கள் அன்றாடம் செல்ல வேண்டிய
 தளங்களாக இருந்தாலும் ஒவ்வொரு
 முறையும் இவற்றை அடைய இந்த
 தளங்களின் முகவரிகளை டைப் செய்திட
 வேண்டும். அல்லது அதன் தொடக்க
 எழுத்துக்களையாவது அமைக்க வேண்டும்.
 இதற்குப் பதிலாக இது போன்ற அடிக்கடி
 அனைவரும் பயன்படும் தளங்களுக்கு
 பைல்களின் ஐகான்களைக் கிளிக் செய்வது
 போல லிங்க்குகளை ஒரே தளத்தில்
 அமைத்துவிட்டால் எவ்வளவு நன்றாக
இருக்கும். இதனைத்தான்
 http://www.myeverydaypage.com/  என்ற தளம்
 செய்கிறது.
இதில் முக்கிய தளங்களைத் தொடர்பு கொள்ள
 லிங்க்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
 இவற்றில் ஒருமுறை கிளிக் செய்தால்
 போதும். முகவரியில் எந்த எழுத்துக்களையும்
 டைப் செய்திடத் தேவையில்லை. இந்த
 தளத்தை உங்கள் ஹோ ம் பேஜாக வைத்துக்
 கொண்டால் இணையத்தைத் திறந்தவுடன்
 உங்களுடைய அனைத்து தளங்களும் உங்கள்
 கண் முன்னால் டெஸ்க் டாப்பில் நீங்கள்
 கிளிக் செய்வதற்காகக் காத்திருக்கும்.
அனைவரும் எப்படியும் செல்ல வேண்டிய
 தளங்களுக்கென (Most Visited Websites) ஒரு
 தனிப் பிரிவு அமைத்து அதில் : yahoo, google,
 orkut, hotmail, rediff, facebook, youtube போன்ற
 தளங்களுக்கான லிங்க்குகள்
 அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும்
 உங்களை உற்சாகப் படுத்தி சிந்திக்க வைத்திட
 சான்றோரின் பொன்மொழிகள்
 தரப்படுகின்றன. . இந்த தளத்தில் உள்ள
 பிரிவுகளைப் படித்தால் உங்களுக்கு என்ன
 என்ன தளங்கள் இதில் அடுக்கப்பட்டுள்ளன
 என்று தெரியவரும்.

Top Emailing Websites / Search Engines /Photos &
 Wallpapers/Social Networking Websites /Google
 Tools /Finance /Downloads /Office Productivity
 /Health Conscious/Mind Power &
 Spirituality/Technical Paradise/Entertainment
 இவற்றில் ஒவ்வொரு பிரிவி லும் குறைந்தது
 7 தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நிச்சயம் நீங்கள் இதுவரை பார்க்காத தளங்களும் இந்த பட்டியலில் இருக்கும்.
நீங்கள் எந்த தளத்தை யேனும் அனைவருக்கும்
 பயனுள்ள தளம் என்று எண்ணினால் அது
 குறித்து இவர்களுக்கு எழுதலாம். இந்த முயற்சி
 எல்லாருக்கும் நல்ல விஷயங்கள் சென்றடைய
 வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்
 பட்டது என்றும் அதனால் இத்தகைய தளம்
 இருப்பதை அனைவருக்கும் சொல்லுங் கள்
 என்று வேண்டுகோளும் இந்த தளத்தில்
 விடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பார்த்தால்
 இதனை நீங்கள் விரும்பி பார்ப்பீர்கள் என்பது
 உறுதி. ஏனென்றால் நம்முடைய பொன்னான
 நேரத்தை இது அதிகம் மிச்சப்படுத்துகிறது.

இத்தளம் பற்றிய உங்களது கருத்துகளை
 எதிர்பாகிறேன் கருணாகரன்.

 

Thursday, 11 November 2010

சிக்கிய சீடியை வெளியே எடுப்பது எப்படி?

சிக்கிய சீடியை வெளியே எடுப்பது எப்படி?















நீங்கள் அடிக்கடி சிடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள்
 என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம், உங்கள் சிடி
 கம்ப்யூட்டரின் சிடி டிரைவில் இருந்து
 வெளியே வராமல் உங்களை மோசமான
 நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை சிடி
 டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும்
 அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும்.
இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி வெளியே எடுக்கும்படி
 கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம். முதலில் சிடி
 டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த
 பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை
 என்றால் கலவரப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை
 சமாளித்து சிடியை கீழ்க்காணும் வழிகளைக்
 கையாண்டு வெளியே எடுக்கலாம்.



வழி 1: My Computer  ஐகானில் கிளிக் செய்திடுங்கள்.
உங்கள் டெஸ்க்டாப்பில் இந்த ஐகான் இல்லை
 என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும்.
 இதனைத் திறந்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரின்
 டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும். இதில் Devices
 with remoable stroage என்ற பிரிவில் சிடியின்
 படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக்
 கொண்ட சிடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள
 பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன்
 அந்த டிரைவ் காட்டப்படும். இதன் மீது ரைட் கிளிக்
 செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject   என்ற
 பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சிடி
 டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய்
 நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு
 மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி
 செயல்படும். இதற்கும் சிடி டிரைவ் திறக்கவில்லை
 என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.


வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக்
 கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை
 அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து
 நீட்டுங்கள். சிடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே
 சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம்
 இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல்
 இருந்திருப்பீர்கள். இப்போது நிச்சயம் இதன் உதவி
 வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக
 பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே
 செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது
 ஒரு இடத்திற்கு மேல் செல்லாது. இந்த இடத்தில்
 சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம்
 கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும்
 இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம்
 கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும். உடனே
 சிடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின்
 கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப்
 பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சிடி
 வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச்
 செருகியபடியே வைத்துவிடுவார்கள். இதற்கும்
 திறக்கவில்லை என்றால் அடுத்த வழிக்குச்
 செல்வோம்.

வழி 3: உங்கள் கம்ப்யூட்டரை ஷட் டவுண்
 செய்திடுங்கள். மின்சாரம் வரும் வயர்களை
 கம்ப்யூட்டர் சிபியுவில் இருந்து நீக்கிவிடுங்கள்.
 இல்லை என்றால் இந்த வழியில் உங்கள்
 கம்ப்யூட்டர் சிபியு மற்றும் உங்களையே நீங்கள்
 காயப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
 ஷட் டவுண் செய்து மின் இணைப்பை
 எடுத்துவிட்டீர்களா! இனி தட்டையாக உள்ள ஒரு
 ஸ்குரூ டிரைவரை எடுங்கள். சிடி டிரைவின் கதவின்
 அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீள இடைவெளியில்
 மெதுவாக அதனை வைத்து கொஞ்சம் மிகக்
 கொஞ்சம் தள்ளவும். ஸ்குரூ டிரைவரின் தட்டை
 முனையின் பகுதி சிறிய அளவில் உள்ளே சென்று
 விட்டால் அப்படியே டிரைவின் கதவை இழுக்கவும்.
 டிரைவ் முழுவதும் பிளாஸ்டிக்கால் ஆன சிறிய
 சக்கரங்கள் மற்றும் கியர்கள் இயங்குவதால் நீங்கள்
 இழுப்பது தானாக வர வேண்டும். பலத்தை
 உபயோகிக்கக் கூடாது. மின்சக்தி மூலம்
 இயங்குவதை நீங்கள் இப்போது பலத்தை
 உபயோகித்து செயல்படுத்துகிறீர்கள் என்பதை
 மனதில் கொள்ள வேண்டும்.

 
இனி மெதுவாக இழுத்தால் டிரைவ் கதவு
 திறக்கப்படும்.சிடியை எடுத்துவிட்டு டிரைவை ஒரு
 சோதனைப் பார்வை பார்க்கவும். நிச்சயம் அதில்
 ஏகப்பட்ட தூசு, ஏன் சிறிய முடி கூட இருக்கலாம்.
 இதனை எல்லாம் ஒரு சிறிய மெல்லிதான பிரஷ்
 கொண்டு சுத்தப் படுத்துங்கள். போகாத பிடிவாத
 அழுக்கு என்றால் கொஞ்சம் ஈரம் கலந்த துணி
 கொண்டும் சுத்தப்படுத்தலாம். இனி மீண்டும்
 கம்ப்யூட்டருக்கு மின் சக்தி கொடுத்து இயக்குங்கள்.
 கம்ப்யூட்டர் பூட் ஆகி நிலைக்கு வந்தவுடன் சிடி
 டிரைவின் எஜக்ட் பட்டனை அழுத்தி கதவு திறந்து
 மூடுவதனை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். சரி, இந்த
 ஸ்குரூ டிரைவர் வைத்தியத்திற்கும் கதவு
 திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்ற
 கேள்வி உங்கள் மனதில் எழும். என்ன செய்யலாம்?
 மின் இணைப்பைத் துண்டித்து சிபியு உள்ளாக
 டிரைவை இணைத்திருக்கும் கேபிள்களை நீக்கி பின்
 டிரைவ் இணைக்கப் பட்டிருக்கும் ஸ்குரூகளை
 எடுத்துவிட்டு டிரைவைத் தனியாக எடுத்து டிரைவின்
 கதவைத் திறக்கலாம். அல்லது டிரைவை மட்டும்
 தனியே எடுத்து இவற்றை ரிப்பேர் செய்திடும்
 இடத்திற்குக் கொண்டு சென்றால் அவர்கள் சரியான
 முறையில் சிடியை எடுத்துத் தருவார்கள். அதன்பின்
 புதிய டிரைவ் ஒன்றை வாங்கி இணைப்பது இது
 போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும்.

எனது வலைபூவிற்கு வருகைதந்ததிக்கு நன்றி

பிரியமுடன்

 கருணாகரன் 

Wednesday, 10 November 2010

இணையத் தமிழ் திரையரங்கு

இணையத் தமிழ் திரையரங்கு


தமிழ் திரைப்படங்களை இலவசமாகவும்
முழுமையாகவும் இணையத்தில் பார்க்கவும்
Download செய்துகொள்ளவும் முடியுமா ? ஆம்
இதற்கு இந்த இணையதளம் உதவுகிறது.
திரைப்படங்கள் மட்டுமன்றி பிரபல்யமான
தொலைக்காட்சி நிகழ்சிகளையும் பார்க்கவும்
Download  செய்துகொள்ளவும் முடியும்.அத்துடன்
பழைய தமிழ் திரைப்படப்பாடல்கள் முதல்
அண்மையில் வெளியான எந்திரன் பாடல்கள்
வரை இங்கே இலவசமாக  Download  செய்துகொள்ள
முடியும்.முகவரிhttp://www.oruwebsite.com/
நிங்களும் சென்றுதான் பாருங்களேன்
பிரியமுடன்
 கருணாகரன்

Monday, 8 November 2010

கணணி பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

கணணி பயன்படுத்துவோரின் கவனத்திற்கு



















அனைத்து அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாகி  வருகின்றன. பேப்பர் இல்லாத அலுவலகம்
 உருவாகி வாடிக்கையாளர்களை சொக்க
 வைக்கின்றன. சரி, இந்த அலுவலகத்தில்
 பணியாற்றுபவர்கள் எப்படி உணர்கிறார்கள்.
 ஆரம்பத்தில் எல்லாமே சுகமாகத்தான் இருக்கிறது.
 டேபிள் நிறைய குப்பையாய் பைல்கள் இல்லை.
 ஒன்றைத் தேட வேண்டும் என்றால் தூசியைத்
 தட்டி எடுத்து பலமுறை தும்மல் போட்டு
 உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
 ஜம் என்ற ஏ.சி.; சுகமான குளிர், சுத்தமான டேபிள்,
 சேர் என எல்லாம் மயக்குகின்றன. ஆனால்
 நாளடைவில் ஒரு சோர்வு தொற்றிக் கொள்கிறது.


காலையில் ஏ.சி. அலுவலகத்தில் நுழைந்து கீ
 போர்டையும் மவுஸையும் மாற்றி மாற்றி
 இயக்கிவிட்டு மாலையில் வெளியே வருகையில்
 கை மணிக்கட்டில் சிறிது வலி, கண்களில்
 கொஞ்சூண்டு எரிச்சல், முதுகுப் பக்கம் ஏதோ
 இனம் தெரியாத சிறிய நம நமப்பு. இது எல்லாம்
 அல்லது ஒன்றிரண்டு உங்கள் உடம்பில்
 தெரிகிறதா? ஆம், இதுதான் நாம் கம்ப்யூட்டர்
 மயமாக்கலில் வேலை பார்ப்பதால் பெற்றுள்ள
 பக்க விளைவு என்று கூறலாம்.
இவற்றை எப்படி சமாளிக்கலாம்? இந்த  விளைவுகளை எப்படி விரட்டலாம் என்று
 பார்க்கலாம். திறமையுடனும் சிறப்பாகவும்
 பணியாற்றுவதற்கு மட்டுமின்றி பக்க விளைவுகள்
 இல்லாமல் இருக்கவும் நாம் பல விஷயங்களைக்
 கண்ட்ரோல் செய்திட வேண்டியுள்ளது. அவை
– கம்ப்யூட்டர் மற்றும் அதன் துணை சாதனங்கள்,
 நாம் அமரும் நாற்காலி, விளக்கு ஒளி, சத்தம்,
 சீதோஷ்ண நிலை மற்றும் நம்முடைய பழக்க
 வழக்கம்.

உங்கள் கம்ப்யூட்டர் : முதலில் நாம் கட்டாயம்  கவனம் செலுத்த வேண்டிய இடம் நம்
 கம்ப்யூட்டரின் மானிட்டர்  ( அது சி.ஆர்.டி. அல்லது
 எல்.சி.டி. என எது வேண்டுமானாலும்)  அது உங்கள்
 முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக
 இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக
 உங்கள் தலையை சிறிது தூக்க
 வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன்
 ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல்
 புறத்தில் வலி உண்டாகும்.
இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த
 வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே
 இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும்
 நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள்
 கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18
 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர்
 திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ
 இருக்கலாம்.

ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால்  அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில்
 இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள்
 பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே
 அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு
 உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக்
 கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில்
 எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று
 குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை,
 பயன்படுத்தாததை நீக்கலாம்;
அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம்.
 ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப் படும்
 ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல்
 உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில்
 நீங்கள் பயன்படுத் தும் கலர் ஸ்கீம் மிக
 முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
 பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப்
 பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை
 அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி
 எழுத்துவகையினையும் உறுத்தாத வகையில்
 அமைக்கவும். அடுத்ததாக உங்கள் மவுஸ். எளிதில்
 அதனை அடைந்து கைகளுக்கு வலி
 எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க
 வேண்டும்.உடம்பைச் சாய்க்காமல் அதனை
 சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக
 இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு
 வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில்
 வைப்பதனை அறவே தவிர்க்கவும். உங்கள் கீ
 போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்
 கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல்
 தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில்
 உங்களுடைய மணிக் கட்டு நேராக இருக்க
 வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில்
 வளைந்திருக்க வேண்டும். இது உங்கள்
 நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட
 வேண்டும். அடுத்ததாக அமரும் நாற்காலி:
 உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும்
 வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும்.
 இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி
 ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன்
 மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க
 வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க
 வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம்
 அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி
 நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து
 கால்களில் இருக்க வேண்டும்.

ஒளி அமைப்பு: இருக்கின்ற விளக்கு ஒளி போதும்
 என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக் கூடாது.
 முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும்.
 விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு
 மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள்
 பின்னாலிருந்து ஒளி வரக் கூடாது. உங்கள்
 மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி
 வரும்வகையில் அமைக்கக் கூடாது. பொதுவாக
 நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை
 மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை
 மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம்.
 அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி
 கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம்.
 ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர்
 ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும்
 அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக
 ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது
 இன்னும் நன்றாக இருக்கும்.

சத்தம்: பலருக்கு சத்தங்களுக்கிடையில்
 பணியாற்றுவது பெரிய பிரச்னையாகவும்
 இடையூறாகவும் இருக்கும். சரியான ஒலி
 உற்சாகத்தைக் கொடுக்கும். மிதமான மெல்லிய
 ஓசையுடன் கூடிய பாடல்; இசைக் கருவிகளிலிருந்து
 கிடைக்கும் இனிமையான ஒலி என்பவை
 இவற்றிற்கு எடுத்துக் காட்டுக்களாகும். ஆனால் இது
 பெரும்பாலும் தனி நபர் விருப்பமாகவே இருக்கும்.


சீதோஷ்ண நிலை: ஏர் கண்டிஷனிங் இருக்கிறதோ
 இல்லையோ கம்ப்யூட்டர் பயன் படுத்தத் தொடங்கிய
 சிறிது நேரத்தில் உங்களுக்கு வியர்க்கத்
 தொடங்கினால் அதைப் போன்ற ஒரு மோசமான
 சூழ்நிலை எதுவும் இல்லை. மோசம் என்பது
 உங்களுக்கு மட்டுமல்ல; கம்ப்யூட்டருக்கும் தான்.
 எனவே சீதோஷ்ண நிலை சற்று குளிர்ச்சியாக
 இருக்கலாம். ஆனால் குளிர் அதிகமான நிலை
 இருக்கக் கூடாது. நேரடியாக காற்று மேலே அடிப்பது
 போல இருக்கக் கூடாது. இது உடல்நலத்திற்குக் கேடு
 மட்டுமின்றி வேலை செய்வதற்கு இடையூறாகவும்
 இருக்கும்.


அடுத்து நீங்கள்: மொத்தத்தில் அதிக முக்கியத்துவம்
 தரப்பட வேண்டியது உங்களுக்குத் தான். நேராக
 நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து
 மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக
 அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது
 மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக
 அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள்.
 உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப்
 பண் பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே
 போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள்
 கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  இறுதியாக  நீங்கள் வேலை வேலை என்று
 அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா?
 அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில்
 தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து
 எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து
 நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால்
 உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும்.


உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது. மாறிவரும் வாழ்க்கைச்
 சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற
 முடியாது. ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத்
 தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ்
 நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம்
 செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும்
 கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண்
 தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக்
 கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க
 முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன்
 செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க
 முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை
 விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை
 தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில்
 பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து
 வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே
 காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!
இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை
 எதிர்பாகிறேன்.

கருணாகரன்.
 

Sunday, 7 November 2010

இணையத்தில் உங்கள் வீட்டை காண

இணையத்தில் உங்கள் வீட்டை காண  






















உங்கள் வீட்டினையும் அதனை சுற்றியுள்ள
பிரதேசங்களையும் நீங்கள் மட்டுமல்லாமல்
உலகின் எந்தபிரதேசத்தில் உள்ள ஒருவராலும்
பார்க்க முடியுமா? ஆம் முடியும். இதற்கு ஒரு
இணையத்தளம் உங்களுக்கு உதவுகிறது.
இந்த இணையத்தளமானது ஒரு சில
பிரதேசங்களை தவிர  உலகின் எந்த
பிரதேசங்களையும் மிக அண்மியகோணத்தில்
உங்கள் கண் முன் கொண்டுவருவதுடன்
உங்களது பிரதேசத்தினை நீங்களே இந்த
இணையத்தளத்தில் குறிக்கவும் உதவுகிறது.
search  வசதியின் மூலம் உங்களுக்கு
தேவையன பிரதேசங்களை மிக இலகுவில்
கண்டுபிடிக்கலாம். இத்தளத்தின் இணைய
முகவரி http://www.wikimapia.org/ ஆகும்.
பயன்படுத்தி பாருங்கள் , கருத்தினை கூறுங்கள்.

மீண்டும் சந்திப்போம்,

கருணாகரன்.

Saturday, 6 November 2010

யு.எஸ்.பி. எஜெக்டர்

யு.எஸ்.பி. எஜெக்டர் 
 







பிளாஷ் டிரைவ்களைப் பயன்படுத்தாத நாள்
 இல்லை. யு.எஸ்.பி. போர்ட்டில் பல்வேறு
 சாதனங்களைப் பயன்படுத்தாமல் நம்
 கம்ப்யூட்டர் பயன்பாடு
 நிறைவடைவதில்லை. ஆனால் ஒவ்வொரு
 முறையும் அதற்கான ஐகானை கிளிக்
 செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில்
 குறிப்பிட்ட சாதனத்தைத் தேர்ந்தெடுத்து
 பின் ஸ்டாப் அழுத்தி Safely Remove
 Hardware என்று செய்தி வந்தவுடன்
 போர்ட்டில் உள்ள சாதனத்தை வெளியே
 எடுக்கிறோம். அது பிளாஷ் டிரைவாகவோ,
 ஐபாட் சாதனமாகவோ, டிஜிட்டல்
 கேமராவாகவோ அல்லது மொபைல்
 போனாகவோ இருக்கலாம். இந்த சுற்று வழி
 செல்லும் சிரமத்தைப் போக்குவதற்காக
 யு.எஸ்.பி. எஜெக்டர் என்னும் புரோகிராம்
 இணைய தளத்தில் கிடைக்கிறது. இந்த
 புரோகிராம் என்ன செய்கிறது? போர்ட்டில்
 இணைத்துள்ள எந்த ஒரு சாதனைத்தையும்
 விரைவாக வெளியே எடுத்திட துணை
 புரிகிறது.

முதலில் இது பென் டிரைவ்களுக்கு
 மட்டுமே இயங்கியது. இப்போது யு.எஸ்.பி.
 டிரைவில் இணைக்கப்படும் அனைத்து
 சாதனங்களுக்கும் இயங்கி வருகிறது. இந்த
 புரோகிராமினை இன்ஸ்டால்
 செய்துவிட்டால் டிரைவில் இணைத்துள்ள
 எந்த சாதனத்தையும் டபுள் கிளிக் அல்லது
 என்டர் தட்டி உடனே எடுத்துவிடலாம். பலர்
 ஏற்கனவே எக்ஸ்பி தரும் வசதிக்கும்
 இதற்கும் என்ன வேறுபாடு? அது
 எளிதுதானே என எண்ணலாம். ஆனால்
 விரைவாகச் செயல்பட இதுவே சரியான
 புரோகிராம் ஆக உள்ளது. இந்த
 புரோகிராமினை
 http://quick.mixnmojo.com/usb-disk-ejector  என்ற
 முகவரியில் உள்ள தளத்திலிருந்து
 பெறலாம்.



பிரியமுடன்


 கருணாகரன்

 

Friday, 5 November 2010

இணைய தளத்தில்அனைத்து புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளையும் பெற

 இணைய தளத்தில்அனைத்து  புரோகிராம்களுக்கான ஷார்ட் கட்
 கீகளையும் பெற 


.



 

அனைத்து புரோகிராம்களுக்கான ஷார்ட்
 கட் கீகளையும் பெற ஒரு கலங்கரை
 விளக்கமாக ஒரு இணைய தளம் உள்ளது.
 அதன் முகவரி http://www.keyxl.com/.
 உங்களுக்கு எந்த புரோகிராமிற்கு ஷார்ட்
 கட் கீ தொகுப்புகளின் பட்டியல்
 வேண்டுமோ அந்த புரோகிராமின் பெயரை
 இதில் உள்ள கட்டத்தில் டைப் செய்தால்
 அந்த புரோகிராமிற்கான தளத்திற்கு
நீங்கள்அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
அனைத்துஷார்ட் கட் கீகளும் இங்கு
 வகைவாரியாகத் தரப்படுகின்றன. பல
 உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.
 நிறைய ஷார்ட் கட் கீகள் உங்களுக்கு
 ஆச்சரியத்தை வரவழைக்கும்.


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கருணாகரன்.


 

Wednesday, 3 November 2010

விசுவல் டிக்ஷ்னரி

 விசுவல் டிக்ஷ்னரி

 
 
 
 
15 தலைப்புகளில் ஏறத்தாழ 6000  படங்களுடன் இந்த டிக்ஷனரி உள்ளது.
 இதுவரை வேறு எந்த டிக்ஷனரியும்
 இவ்வாறு பொருள் கூறியதில்லை.

டிக்ஷனரிக்குப் பெயர் பெற்ற மெரியம்
 வெப்ஸ்டர் (MerriamWebster) அண்மையில்
 ஒருவிசுவல் டிக்ஷனரியை இணையத்தில்
 வெளியிட்டுள்ளது. அதனை
 http://visual.merriamwebster.com/  என்ற
 முகவரியில் காணலாம். அது என்ன விசுவல்
 டிக்ஷனரி என்கிறீர்களா? சொற்களுக்கு
 பொருள் தருவது மட்டுமின்றி அது குறித்த
 படங்கள் காட்டப்படும்.
இந்த படங்களை வைத்தும் பொருளைத்தேடிக்
 கண்டறியலாம். இந்த தளத்தின் மெயின்
 பக்கத்தில் படப் பட்டியல் ஒரு புத்தகத்தின்
 பொருளடக்கம் போலக் காட்டப்படும். இதில்
 உள்ள தலைப்பிலிருந்தும் இந்த டிக்ஷனரியைப்
 பயன்படுத்தலாம். அல்லது இந்த தளத்தின்
 ஒரு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மெனு
 வழியாகவும் டிக்ஷனரியைப் பயன்படுத்தலாம்.
 15 தலைப்புகளில் ஏறத்தாழ 6000 படங்களுடன்
 இந்த டிக்ஷனரி உள்ளது. இதுவரை வேறு எந்த
 டிக்ஷனரியும் இவ்வாறு பொருள்
 கூறியதில்லை. வானியியல், பூமி, செடிகளும்
 தோட்டமும், விலங்குகள் உலகம்,மனிதர்கள்,
 உணவும் சமையலறையும், வீடு, ஆடைகளும்
 பொருட்களும், கலையும் கட்டடக் கலையும்,
 தொலை தொடர்பு, வாகனங்களும்
 இயந்திரங்களும், மின் சக்தி, அறிவியியல்,
 சமுதாயம் மற்றும் விளையாட்டுக்கள் எனப்
 பல தலைப்புகள் உள்ளன.

மெயின் பக்கத்தில் எப்படி ஒரு சொல்லுக்கு அல்லது படத்திற்கு பொருள் கொள்வது
 என்று எடுத்துக் காட்டு தரப்பட்டுள்ளது.
 எடுத்துக் காட்டாக ஒரு ஸ்ட்ரா பெரி பழம்
 தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்தால்
 எத்தனை வகை ஸ்ட்ரா பெரி உள்ளது. அதன்
 பாகங்கள் என்ன என்ன? என்று
 காட்டப்படுகிறது. இதைத் தேர்ந்தெடுத்தபடியே
 சமையலறை சென்றால் சமையலில் எந்த
 உணவிற்கு இது இணையாக இருக்கும் என்று
 காட்டப்படுகிறது.

இப்படிக் காட்டப்படுகையில் ராஸ்ப் பெரி

 போன்ற மற்ற பழங்களின் படங்களும்
 காட்டப்படுகின்றன. அவற்றையும் கிளிக்
 செய்து தகவல்களைப் பெறலாம். இந்தப்
 பக்கத்தின் மேலாக இந்த வார விளையாட்டு
 (Game of the Week) என்று ஒரு பகுதி உள்ளது.
 எந்த அளவிற்கு உங்களுக்கு சில சொற்கள்
 குறித்துத் தெரியும் என்பதனை இந்த பகுதியில்
 அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக நான்
 ட்ரம்பட் என்பது குறித்து பார்த்தேன்.
அதன் பல்வேறு பகுதிகளின் பெயர்கள் என்ன
 என்பது குறித்து சொற்களைத் தெரியப்படுத்த
 வேண்டியதிருந்தது. தவறாக ஏதாவது
 சொல்லைத் தந்தால் டிங் என்று ஒரு ஓசை
 கேட்கிறது. உங்களுக்கு அதன் பகுதிகளுக்கான
 பெயர்கள் தெரிய வேண்டியதில்லை என்றால்
 டிக்ஷனரியே ஒரு பட்டியல் தரும். நீங்கள் சரி
 என்று நினைக்கும் சொல்லை எடுத்து
 இழுத்துப் போட வேண்டும். அது சரியான சொல்
 என்றால் ஏற்றுக் கொள்ளும். இல்லை என்றால்
 ஒலி எழுப்பும்.



அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கருணாகரன்.

Tuesday, 2 November 2010

சிறப்பாக செயற்படும் சர்ச் இஞ்சின்கள்


 சிறப்பாக  செயற்படும் சர்ச் இஞ்சின்கள்




 
 
நமக்கு வேண்டிய தகவல்களை இன்டர் நெட்டில் தேட பெரும்பாலானோர்
 பயன்படுத்துவது கூகுள் சர்ச் இஞ்சின்
 தான். இவ்வகையில் கூகுள் மட்டுமே
 இந்த கம்ப்யூட்டர் உலகின் ஒரே ஒரு சர்ச்
 இஞ்சின் போலத் தோற்றத்தை
 உருவாக்கி உள்ளது. தேடல் பிரிவில்
 ஏறத்தாழ 50% பேர் கூகுள் தளத்தையே
 பயன்படுத்துகின்றனர்.
இத்துடன் யாஹூ மற்றும் எம்.எஸ்.என்.
 ஆகியவற்றையும் சேர்த்தால் 90%
 வந்துவிடுகிறது. அப்படியானால் வேறு
 சர்ச் இஞ்சின்கள் உள்ளனவா? என்று
 உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள்
 தெரிகின்றன.
 ஆம், இன்னும் பல சர்ச் இஞ்சின்கள்
 சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு தான்
 இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு
 காணலாம். அவை எப்படி
 செயல்படுகின்றன என்பதற்காக
 ஓரிருமுறை இவற்றைப் பயன்படுத்திப்
 பாருங்களேன்.
1.http://www.chacha.com/ : சிறப்பாகச்
செயல் படும் சர்ச் இஞ்சின். இதில்
 டெக்ஸ்ட் டைப் செய்தால் கூகுள்
தளத்தில் கிடைப்பது போலவே
தகவல்கள் கிடைக்கின்றன.


2. http://www.stumple.upon.com/ : இந்த தளம் நாம் கொடுக்கும் தேடல் சொற்களை
 வைத்து நம்முடைய விருப்பங்களை
 அறிந்து அதற்கேற்ற வகையில்
 தளங்களைப் பிரித்து அடுக்கித் தருகிறது.
 தொடக்கத்திலிருந்து நம் தேடல்களைக்
 கவனித்து இந்த சேவையைத் தருகிறது.
 ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இது
 செயல்படுகிறது.

 
3. http://www.ask.com/ : இந்த தளத்தினை நம்
 நாட்டில் பலர் பயன்படுத்துகின்றனர்.
 இதன் சிறப்பு இது நம்மை வழி நடத்தும்
 விதம் தான். நம் தேடல் தன்மையைப்
 புரிந்து கொண்டு தேடல் வழிகளை
 இன்னும் சுருக்கி தேடும் தளங்களைப்
 பட்டியலிடும். எடுத்துக் காட்டாக computer
 tips எனத் தேடப் போகையில் computer
 tips and tricks எனத் தேடலாமே? என்று
 வழி காட்டும்.

computer tips and tricks எனத்
 தேடப்போனால் windows xp tricks அல்லது
 word tips எனத் தேடலாமா? என்று
 கேட்கும். மிக மிகப் பயனுள்ள தேடு தளம்.

4.http://www.kosmix.com/ : இந்த தளம்
 தொடக்கத்திலேயே தகவல் துறைகளைப்
 பிரித்து அதிலிருந்து தேடலை
 மேற்கொள்ள வழி காட்டுகிறது. மெடிகல்
 மற்றும் உடல் நலம் சார்ந்த
 தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம்
 அளிக்கிறது. மற்றவற்றையும் தேடித்
 தருகிறது.

5.http://www.technocrati.com/ இந்த தளம்

 செய்திகளுடன் கூடிய ஒரு தளம். யாஹூ
 போல செயல்படுகிறது. இதில் தேடல்
 முடிவுகள் சிறிய பாராக்களாக சில
 வேளைகளில் சிறிய படங்களுடன்
 தரப்படுகின்றன. நாம் தேடிய சொற்கள்
 அதில் எங்கெங்கு உள்ளன என்று ஹை
 லைட் செய்யப்படுகிறது.


6.http://www.draze.com/ : கூகுள் அளவிற்கு

 தகவல்களை இந்த தளம் அளிக்கிறது.
 மேலும் மற்ற தளங்களோடு எங்கள்
 தேடலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் என்று
 சவால் விட்டு மற்றதில் தேடுகையில்
 என்ன என்ன இல்லை என்று
 பட்டியலிடுகிறது. திறன் கொண்ட சற்று
 சவாலான தளம் இது.

7.
http://searchwithkevin.com/ : இந்த தளம்
 இன்னொரு வகையில் வித்தியாசமானது.
 எங்கள் தளத்தில் தேடுங்கள்; அவ்வப்போது
 பரிசுகள் உண்டு என்று அழைக்கிறது. தள
 முகப்பில் தீயுடன் தேடுங்கள் என்று
 விளம்பரப் படுத்தப்படுகிறது. தேடலுக்கான
 முடிவுகள் குகூள் தளத்தில் கிடைப்பது
 போலவே கிடைக்கிறது. மற்றபடி
 வேறுபாடு எதுவும் இல்லை.


.
8. http://www.rollyo.com/ : இந்த தளம்
 தகவல்களைக் காட்டும் விதம்
 வித்தியாசமாக உள்ளது. மேலும்
 ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற
 வகையில் தேடலை அமைக்கலாம். எந்த
 தகவல் பிரிவில் உங்கள் தேடல்
இருக் குமோ அதனை மட்டும் தேடும்
 வகையில் செயல் படலாம். எப்போதும்
 ஒரே மாதிரியாக கூகுள், யாஹூ மற்றும்
 மைக்ரோசாப்ட் தேடல் தளங்களையே
 பயன்படுத்திக் கொண் டிராமல்
 மற்றவற்றையும் பார்த்து
 பயனடையலாமே.



அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கருணாகரன்.

 

Monday, 1 November 2010

முக்கியமான பாதுகாப்பான இணைய தளங்கள்

   முக்கியமான பாதுகாப்பான இணைய தளங்கள்
























இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள்  
மற்றும் ஆய்வுகள் குறித்த  அண்மைக்
காலத்திய செய்திகள் ஏராளம்.இவற்றில்
முக்கியமான பாதுகாப்பான இணைய தளங்கள்
பற்றி இன்று பார்ப்போம்.
 


  1. http://www.downloadsquad.com/ : இந்த தளம்
சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில்
அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து
இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட் 
செய்யப்படும். மிகவும் பயனுள்ள 
தகவல்களைத் தருகிறது.

2. http://www.gmailtips.com/ : கூகுள்

மெயில்பயன்படுத்துபவர்களுக்கான
தகவல் களஞ்சியம். அதிகமான 
எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ்
மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.
 

3. http://www.thegreenbutton.com/ :
விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன்
குறித்த அனைத்து தகவல்களுக்கும்
இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும்.
லேட்டஸ் அப்டேட் பைல்களைத்
தருவதோடு டவுண்லோட் செய்திட
சில புரோகிராம்களையும் தருகிறது.

4. http://www.stopbadware.org/ : இது
பக்கத்துவீட்டு காவல்காரன் போல
செயல்படுகிறது. ஏதேனும் மோசமான
விளைவுகளைத் தருவதற்கென்றே
உருவாக்கப்படும் தளங்கள் குறித்த
தகவல்களைத் தருகிறது. இது போன்ற
தளங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 
வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின்
அடிப்படையில் மோசமான தளங்கள்
மற்றும் புரோகிராம்களின் பட்டியலை 
அளிக்கிறது.
 

5. http://www.techcrunch.com/ : இன்டர்நெட்
வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் 
ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது.
  6. http://www.techdirt.com/ தொழில் நுட்ப
உலகின் தில்லுமுல்லுகள் மற்றும்
முக்கிய செய்திகள், ஆய்வு முடிவுகள்
ஆகியவை குறித்து சுருக்கமான
தகவல்களைத் தருகிறது.

7. http://www.tweakguides.com/ உங்கள்

சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை 
அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான்
நீங்கள் செல்ல வேண்டிய தளம்.
விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள்
என அனைத்தையும் இந்த தளம் மூலம்
மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை
புதுப்பிக்கலாம்.



9.http://www.goaskalice.com/ அமெரிக்க
கொலம்பியா பல்கலைக் கழகம்
நடத்தும் மெடிக்கல் இணைய தளம்.
சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத்
தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல்
இங்கு கேள்விகளை இடலாம். சரியான
முறையான பதில் கிடைக்கும்.

 10. http://www.thefreedictionary.com/ ஆன்
லைனில் உள்ள அருமையான டிக்ஷனரி.
ஒரு சொல்லுக்குப் பொதுவான பொருள்
மட்டுமின்றி, மருத்துவம், சட்டம்,
கம்ப்யூட்டர், நிதிச் சந்தை தொடர்பான
பொருளும் தரப்படும். இவற்றுடன் ஒத்த
பொருள் தரும் சொற்கள். எதிர்ப்பதங்கள்,
பழமொழிகள், வழக்குச் சொற்களும்
இந்த தளத்தில் கிடைக்கின்றன.

 11. http://www.webmath.com/ ஒரு
பெயிண்டர் ஒரு அறையை எட்டு மணி
நேரத்திலும் இன்னொருவர் 10 மணி
நேரத்திலும் வெள்ளை அடித்தால் இருவரும்
சேர்ந்து எவ்வளவு நேரத்தில் வெள்ளை
அடிப்பார்கள்? என்ன இதெல்லாம் ஸ்கூலில்
முடித்து வந்தாச்சே ! இப்போ எதுக்கு
என்கிறீர்களா? இதைப் போன்ற கணக்குகள்
மற்றும் அல்ஜிப்ரா, கால்குலஸ் எனப்
பல பாடப்பிரிவுகளுக்குத் தீர்வுகளை
இந்த தளம் தருகிறது.

 12.http://www.worldwidewords.org/ ஆங்கிலச்
சொற்கள் குறித்து தெரிந்து கொள்ள
அருமையான ஓர் தளம். ஒரு சொல்லை
எடுத்துக் கொண்டு அதன் பல பரிமாணங்களை
இந்த தளம் எடுத்துச் சொல்கிறது.









அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
கருணாகரன்.


Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive