Health and computer

penguin animated gifs

Friday, 27 August 2010

மானிட்டர் நீங்கள் வைத்துள்ள இடம் சரிதானh?

மானிட்டர் நீங்கள் வைத்துள்ள இடம் சரிதானh?
கம்ப்யூட்டர் பயன்பாட்டில்
மானிட்டர் முக்கிய இடம்  
 வகிக்கிறது. பயன்பாட்டில்
மட்டுமின்றி
பயன்படுத்துபவரின் உடல் 
நலத்திலும் இது முக்கிய
பங்காற்றுகிறது. சரியான
நிலையில் இது அமைக்கப்பட
 வேண்டும். இல்லையேல்
நம் பார்வை கழுத்து மற்றும்
 தோள் பகுதிகளில் பிரச்னைகள்
உருவாகும். சுழற்றி
ஒரு சில கோணத்தில் வைக்கும் 
படியாகத்தான்
 மானிட்டர் தரப்படுகிறது. ஆனால்
இந்த சுழற்சி
 முறை சரியாக அமைக்கப்படாமல்
திருப்பப்பட்டு
ஓரக் கோணத்தில் பல மானிட்டர்கள்
அமைக்கப்பட்டு
இயக்கப்படுகின்றன. இது தவறு.
மேலும் பல
 மானிட்டர்கள் மிக அருகேயோ
அல்லது சற்று
தள்ளியோ இருக்கும் நிலையிலும்
உள்ளன.

 இதுவும் தவறு. சரியான வழிகளை இங்கு காணலாம்.

1. மானிட்டர், இயக்குபவரின் ஒரு கை தூரத்தி


1. மானிட்டர், இயக்குபவரின் ஒரு கை தூரத்தில்
இருக்க வேண்டும். அதாவது கையை முழுமையாக
எதிரே நீட்டினால் தொடும் தொலைவில் இருக்க
வேண்டும். இது ஒரு பரிந்துரை தான். கொஞ்சம்
முன்னே பின்னே இருக்கலாம். ஆனால் வெகு
 அருகிலோ அல்லது தொலைவிலோ இருப்பது
கண்களுக்கு நல்லதல்ல.

2. அடுத்ததாக மானிட்டரின் உயரத்தையும் கணக்கிட

 வேண்டும். உங்களுடைய தலை தோள்களில்
 சரியாக, சிரமம் அற்ற நிலையில் இருக்கும்படியான
 உயரத்தில் மானிட்டர் இருக்க வேண்டும்.
உங்களுடைய கழுத்தினை பின்னாலோ முன்னாலோ
 நீட்டி இழுக்கும்படி இருக்கக் கூடாது.

3. மானிட்டரை அதன் சுழலும் ஸ்டாண்டில்

 இருக்கையில் சற்று சுழற்றியோ நிமிர்த்தியோ
 உங்கள் கண்களை நேராக அது காணும்படி
அமைக்க வேண்டும். மானிட்டர் திரையும் உங்கள்
 முகமும் நேர் கோட்டில் இருக்கும் படி அமைத்திட
 வேண்டும். இதனை முகம் பார்க்கும் கண்ணாடி
 ஒன்றை மானிட்டர் திரையின் நடுப்பகுதியில்
தூக்கிப் பிடித்துப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.

4. வெளி வெளிச்சம் மூலம் மானிட்டரிலிருந்து

ஒளி பிரதிபலிப்பு இருப்பதாக உணர்ந்தால்
வெளிச்சம் வரும் ஜன்னல் அல்லது மற்ற
இடத்தில் திரை அமைத்து வரும் ஒளியைக்
 கட்டுப்படுத்தவும்.


kPz;Lk; re;jpg;Nghk;
 
gphpaKld; fUzhfud;.
 
 

Thursday, 19 August 2010

சுருக்கவா விரிக்கவா மூடவா

சுருக்கவா விரிக்கவா மூடவா

ஒவ்வொரு புரோகிராம் விண்டோவின் வலது
மேல் மூலையில் நமக்கு மூன்று பட்டன்கள்
 தரப்பட்டுள்ளன. முதல் பட்டனைக் கிளிக்
செய்தால் அது புரோகிராம் விண்டோவைச்
சுருக்கி டாஸ்க் பாரில் வைத்திடும். அடுத்ததாக
 இரண்டு கட்டங்கள் ஒன்றின் மீது ஒன்றாக
 இருப்பது போன்ற கட்டங்கள் உள்ள பட்டனைக்
 கிளிக் செய்தால் அது பெரியதாக இருக்கும்
 புரோகிராம் விண்டோவைச் சுருக்கும். இதனை
மீண்டும் கிளிக் செய்தால் விரிக்கும்.

மூன்றாவதாக பெருக்கல் அடையாளம் அல்லது
 எக்ஸ் அடையாளம் இருப்பதைக் கிளிக் செய்தால்
புரோகிராம் விண்டோ மூடப்படும். சரி. ஆனால் பல
முறை நாம் இந்த பட்டன்களை மாறி கிளிக்
செய்துவிடுகிறோம். சுருக்குவதற்குப் பதில்
விரித்தால் மீண்டும் சரியான பட்டனை அழுத்தலாம்.
 ஆனால் பெருக்கல் அடையாள பட்டனை
அழுத்திவிட்டால் புரோகிராம் மூடப்படும் வரை
 காத்திருக்க வேண்டும். பணியாற்றிக் கொண்டிருக்கிற
 நமக்கும் எரிச்சலாக இருக்கும். இந்த டிஜிட்டல்
விபத்துக்களை எப்படி தடுப்பது? இந்த பட்டன் கட்டங்கள்
 சிறிது பெரியதாக இருக்கக் கூடாதா? என்ற ஆதங்கத்தை
எப்படி ஆற்றிக் கொள்வது? இந்த பட்டன்களைப் பெரிதாக
 வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? கீழ்க்காணும்
வழிமுறைகளைக் கையாளுங்கள்.

1. டெஸ்க் டாப் திரையில் ரைட் கிளிக் செய்து அதில்
Properties என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

2. பின்னர் கிடைக்கும் டேப்களில் Appearance   டேபைத்
 தேர்ந்தெடுக்கவும். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி
பயன்படுத்துபவராக இருந்தால் என்ற Advanced
 பட்டனை எடுத்துக் கொள்ளுங்கள்.

3. “Item”என்ற கீழ் விரியும் பாக்ஸில் Active Title B1ar
  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இந்த கீழ் விரியும் பாக்ஸுக்கு அடுத்ததாக அளவை
 செட்டிங் செய்திடும் இடம் இருக்கும். அதில் மேல்
 நோக்கி உள்ள அம்புக்குறியை அழுத்த அழுத்த பட்டன்
சைஸ் அளவு பெரிதாகும். நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள் –– எந்த அளவிற்கு பட்டன்களைப்
பெரிதாக்குகிறீர்களோ அந்த அளவிற்கு டைட்டில்
பாரும் பெரிதாகும். அனைத்தையும் முடித்து ஓகே
அழுத்தி வெளியேறவும். இனி உங்கள் புரோகிராம்
விண்டோக்கள் அனைத்திலும் வலது மேல்
முனைப் பட்டன்கள் பெரிதாக இருக்கும்.
 
தூங்கும் வயர்லெஸ் மவுஸ்


நீங்கள் வயர்லெஸ் மவுஸ் பயன்படுத்துகிறீர்களா? அவ்வப்போது இந்த மவுஸை எழுப்ப வேண்டிய
சூழ்நிலை உங்களுக்கு வருமே? ஆம், வயர்லெஸ்
 மவுஸில் இந்த தூங்கச் செய்திடும் செயல்பாடு
 அமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வயர்லெஸ் மவுஸ் மூலம் எந்த பணியையும்

எட்டு நிமிடம் மேற்கொள்ளாமல் இருந்தால் அது தூங்க
 ஆரம்பித்துவிடும். இது எதற்காக? அதன் உள்ளே இருக்கும்
 பேட்டரியின் சக்தியை மிச்சப்படுத்துவதற்காகத்தான்.
பேட்டரியின் திறனை வீணாக்காமல் இருக்க இது
ஒன்று போதுமா? என்ற கேள்வி வரலாம். வேறு வழிகளும்
உள்ளன.
அது மவுஸைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான். எந்த பணிகளுக்கெல்லாம் மவுஸைப்
பயன்படுத்தாமல் கீ போர்டைப் பயன்படுத்த முடியுமோ
அதற்கெல்லாம் கீ போர்ட் ஷார்ட் கட் கீகளைப்
பயன்படுத்துங்கள்.

நிச்சயமாய் மவுஸ் பேட்டரி லைப் நீண்ட நாள்
இருக்கும். இது தொடர்ந்து முடியாது என்றாலும்
அவ்வப் போது இது போன்ற பிரேக் கொடுக்கலாம்.

உறைந்து போகும் டெஸ்க்டாப்

டெஸ்க் டாப் –– கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம்
அடிக்கடி வந்து போகும் இடம். இங்கு தான் நாம்
பயன்படுத்த விரும்பும் புராகிராம்களின் ஐகான்கள்
 இருக்கின்றன. அதுமட்டுமின்றி நாம் அடிக்கடி
மாற்ற விரும்பும் தீம், ஸ்கிரீன் சேவர், வால்
 பேப்பர் ஆகியவையும் இங்கு தான் உள்ளன.
ஆனால் நாம் சரியாக உணர்ந்து கொள்ளாத
ஒரு சமாச்சாரமும் இங்கு தான் ஏற்படுகிறது.

எப்போதாவது மவுஸ் ரைட் கிளிக் செய்து
கிடைக்கும் Menu  நீங்கள் உங்கள் செயல்பாட்டினை
 முடித்தபிறகும் அப்படியே சிறிது நேரம் உறைந்து
நிற்பதைப் பார்த்து இதில் ஏதோ பிரச்னை உள்ளது
என உணர்ந்திருக்கிறீர்களா? இல்லை, ஏனென்றால்
 ஏதோ உடனே போகவில்லை; அவ்வளவுதான் என்று
 எண்ணி அப்படியே விட்டுவிடுகிறீர்கள்.

சில வேளைகளில் இதில் உள்ள ஐகான்களைக் கிளிக்
 செய்து புரோகிராம்களை இயக்க எண்ணும்போதும்
இதே போல் உறைந்து நிற்கும் காட்சியினைப்
பார்த்திருக்கலாம். இது போல காட்சிகள் உங்களுக்குக்
 கிடைக்கையில் வெற்று இடத்தில் ரைட் கிளிக்
செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ரெப்ரெஷ்
 என்பதனைத் தேர்ந்தெடுங்கள். உடனே திரையில்
இருக்கும் அனைத்தும் கண் சிமிட்டும் நேரத்தில்
 மறைந்து புதியதாகக் காட்சி அளிக்கும். இவ்வாறு
 செய்வது திரைத்தோற்றத்தினை புத்துணர்வு
பெறச் செய்திடும். மானிட்டரின் செயல்பாட்டிலும்
 மாற்றம் ஏற்படும்.
 
kPz;Lk; re;jpg;Nghk;
gphpaKld; fUzhfud;.
 

Sunday, 15 August 2010

டிவைஸ் மேனேஜர் என்ன செய்கிறது?

டிவைஸ் மேனேஜர் என்ன செய்கிறது?
 

 
கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர்
 சாதனங்கள் குறித்தும் தகவல்களைக்
 கொண்டுள்ள இடம் தான் டிவைஸ்
மேனேஜர். மவுஸ், கீ போர்டு, மோடம்,
மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து
 ஹார்ட்வேர்களும் எப்படி ஒவ்வொன்றுடனும்
 இணைக்கப்படுகின்றன என்று இதில்
தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு
ஹார்ட்வேர் சாதனமும் எப்படி
இயங்க வேண்டும் என்பதனையும் இதன்
 மூலம் சென்று கான்பிகர் செய்திடலாம்.
இதன் மூலம் டிரைவர்களை அப்டேட்
 செய்திடலாம்; ஹார்ட்வேர் செட்டிங்குகளை
 மாற்றிடலாம்; பிரச்னைகளை எளிதாக தீர்த்துவிடலாம்.
ஏதாவது ஒரு ஹார்ட்வேர் சாதனத்தில் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால்
டிவைஸ் மேனேஜர் சென்று அந்த
குறிப்பிட்ட சாதனம் எப்படி கான்பிகர்
செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்து
 பிரச்னைகளைத் தீர்க்கலாம். தற்காலிகமாக
அவற்றை நீக்கி மீண்டும் இன்ஸ்டால்
 செய்திடலாம். ஆனால் இவை எல்லாம்
நன்றாகத் தெரிந்த பின்னரே இவற்றில்
கை வைக்க வேண்டும். என்ன என்று
 தெரிந்து கொள்வதில் தவறில்லை.
டிவைஸ் மேனேஜரைக் காண My Computer
 ஐகானை ரைட் கிளிக் செய்து Properties
 தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள டேப்களில்
 Hardware  என்ற டேபைக் கிளிக் செய்தால்
கிடைக்கும் விண்டோவில் Device Managerஎன்ற
பட்டனைக் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜரைப்
பெறலாம். இங்கு கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து
ஹார்ட்வேர் சாதனங்களும் இடம் பெற்றிருக்கும்.
ஏதாவது ஒரு சாதனத்தின் இயக்கநிலையை அறிய
வேண்டும் என்றால் பட்டியலில் அதனைப் பார்த்து
அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும்.
அந்த சாதனத்துடன் தொடர்புடையவை தெரியவரும்.
 அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து
கிடைக்கும் மெனுவில் Properties  தேர்ந்தெடுக்கவும்.
இப்போது கிடைக்கும் டேப்களில் General என்ற
 டேபைக் கிளிக் செய்தால் Device status பாக்ஸ்
 கிடைக்கும். இங்கு அந்த சாதனம் சரியாகச்
செயலாற்றுகிறதா என்ற தகவல் கிடைக்கும்.
உங்களைப் பொறுத்தவரை அதில் பிரச்னை
 இருப்பதாகத் தெரிந்தால் Troubleshoot பட்டனை
அழுத்தி பிரச்னையைச் சரி செய்வதில் முனையலாம்.
kPz;Lk; re;jpg;Nghk;  
gphpaKld; fUzhfud;.
www.virakesari.lk

Saturday, 14 August 2010

temple-3

WORDல் வாட்டர் மார்க் அமைப்போமா


WORDல் வாட்டர் மார்க் அமைப்போமா


உங்கள் சிறிய நிறுவனத்திற்கென பல கடிதங்கள் தயாரிக்கிறீர்கள். அந்தக் கடிதங்களின் பின்னணியில் நிறுவனத்தின் பெயர்
அல்லது இலச்சினை இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.

வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள்.

அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும்.
 என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு
போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில்
 எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட
் அருகே உள்ள Numbering  என்ற ஐகானை அழுத்தவும்.

வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட்
அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.  
டாகுமெண்ட்டில் வாட்டர் மார்க் அமைப்போமா! வாட்டர்
மார்க்கா? டாகுமெண்ட்டில் அமைந்தால் சிறப்பாகத்தான் இருக்கும்
 இல்லையா? நீங்கள் வேர்டில் பெர்சனல் கடிதம் உங்கள் மனம்
 விரும்பிய காதலிக்கு எழுதுகிறீர்கள். அதன் பின்னணியில் அவர்
 உங்களுக்கு அளித்த படம் டெக்ஸ்ட்டைக் கெடுக்காத வகையில்
வாட்டர் மார்க்காக இருந்தால் நன்றாகத்தானே இருக்கும். அல்லது
 உங்கள் சிறிய நிறுவனத்திற்கென பல கடிதங்கள் தயாரிக்கிறீர்கள்.
அந்தக் கடிதங்களின் பின்னணியில் நிறுவனத்தின் பெயர் அல்லது இலச்சினை இருந்தால் எவ்வளவு
சிறப்பாக இருக்கும். வேர்ட் தொகுப்பில் இந்த வாட்டர்
மார்க்கினை அமைத்திட வழி உள்ளது.
முதலில் எந்த டாகுமெண்ட்டிற்கு வாட்டர் மார்க்
 அமைத்திட வேண்டுமோ அதனைத் திறந்திடுங்கள்.
 பின் டூல் பாரில் Formatகிளிக் செய்து வரும் மெனுவில்
 Background  என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
 அதில் கிடைக்கும் சிறிய விண்டோவில் Printed Watermark 
என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் காட்டப்படும்
விண்டோவில் Nணி ஙிச்tஞுணூட்ச்ணூடு, கடிஞிtதணூஞு
ஙிச்tஞுணூட்ச்ணூடு மற்றும் கூஞுதுt ஙிச்tஞுணூட்ச்ணூடு
என மூன்று பிரிவுகள் இருக்கும். இதில் நீங்கள் அமைக்க
 விரும்பும் பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதில் கேட்கும்
பைல் அல்லது டெக்ஸ்ட்டினைத் தரவும். பின் அனைத்து
 விண்டோக்களுக்கும் ஓகே கொடுத்து வெளியே வந்தால்
உங்கள் டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்து வைத்த படம்
அல்லது டெக்ஸ்ட் மெல்லிய கிரே கலரில் டெக்ஸ்ட்டுக்குப்
 பின்புறம் இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் மனதிற்கும்
 சந்தோஷமாக இருப்பதனை உணர்வீர்கள்.

டேபிள் எழுத்துக்களின் அகலத்தைக் குறைக்க:

வேர்டில் டேபிள் அமைக்கிறீர்கள். செல் ஒன்றில் டெக்ஸ்ட
அடிக்கும் போது அகலத்திற்குச் சற்று அதிகமானால் அது என்ன
 செய்கிறது. சொல்லை அப்படியே சுழற்றி அடுத்த வரிக்குக்
கொண்டு செல்கிறது.

இதனால் நீங்கள் எதிர்பார்த்து அமைத்த நீளத்திற்கும் சற்று
 அதிகமான உயரத்தினை செல் அமைத்துக் கொள்கிறது.
 மற்ற செல்களோடு ஒப்பிடுகையில் இது சற்று
வித்தியாசமாகத் தெரிவதால் உங்களுக்கு மனது ஒப்பவில்லை.
உடனே எழுத்துக்களைச் சற்று சிறியதாக்கி அடுத்த வரி
சொல்லை மேலே இருக்கும் வரிக்கே கொண்டு செல்கிறீர்கள்.
 ஆனாலும் மற்ற செல்களில் உள்ளதைக் காட்டிலும் எழுத்துக்கள்
சிறியதாக இருப்பது உங்களை அதிருப்தியாக்குகிறது.

எழுத்தும் சிறியதாகக் கூடாது; ஆனால் வரிகளும் அதிகமாகக்
 கூடாது என்று விரும்புபவர்களுக்கு என்றே வேர்ட் ஒரு வழி
தருகிறது. எழுத்தின் அளவை மாற்றாமல் அதன் உயரத்தை
 மாற்றாமல் அகலத்தை மட்டும் குறைக்கிறது. இதனால் எந்த
 வித்தியாசமும் தெரியாது. அதே நேரத்தில் வரிகளின்
எண்ணிக்கையும் கூடுதலாவதில்லை. இதற்கு கூணிணிடூண்
 பாரில்  Table கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்
Table Properties   தேர்ந்தெடுங்கள். இதில் Cell என்னும் டேபில்
 கிளிக் செய்தால் Cell Options என்ற பிரிவு கிடைக்கும்.

இந்த விண்டோவில் கீழாக  Options  என்பதன் கீழ் Wrap text
மற்றும் Fit text என்ற இரு பிரிவுகள் இருக்கும். இதில்
 Fit text என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே
கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி நீங்கள் டேபிள்
செல்களில் டெக்ஸ்ட் அமைக்கையில் கூடுமானவரை
எழுத்துக்களின் அகலத்தைக் குறைத்து டெக்ஸ்ட்டை
 அமைக்க வேர்ட் டேபிள் முயற்சி செய்திடும்.

தேவையற்ற கோடு வராமல் தடுக்கலாம்: வேர்ட்
தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான
 பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி
சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது
ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு
கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே
வேர்ட் அதனை அந்த அளவிற் கான படுக்கைக் கோடாக
மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை
 நீக்குவது எளிதல்ல. ஏனென்றால் இது வேர்ட் ஏற்படுத்திய
 பார்டர் லைனாகும்.

தற்போது பயன்படுத்தப்படும் வேர்ட் தொகுப்புகளில்
இதற்கு ஒரு வழி தரப்பட்டுள்ளது. கர்சரை எந்த கோட்டினை
 அழிக்க வேண்டுமோ அந்த கோட்டின் தொடக்கத்திற்குக்
கொண்டு செல்லவும். பின் Format மெனு சென்று
 Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில்
உள்ள  None  பிரிவைக் கிளிக் செய்திடவும். இந்த
பிரச்னை தொடர்ந்து வராமல் இருக்க வேண்டும்
 என்றால் Tools   மெனுவிற்குச் செல்லுங்கள். அதில்
Auto Correct Optionsஎன்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.
 பின் அதில் AutoFormat As You Type  என்ற டேபிற்குச்
 செல்லுங்கள். Apply as you type  என்ற இடத்தைத்
தேடிக் கண்டு பிடியுங்கள். அதில் Border Lines  என்ற
இடத்திற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை
எடுத்து விட்டு அனைத்திற்கும் ஓகே டிக் செய்து மூடுங்கள்.

gphpaKld; fUzhfud;.

Thursday, 12 August 2010

mouse

. மவுஸ் மற்றும் மவுஸ் பேட் கொஞ்சம் கவனியுங்கள்
நாம் கம்ப்யூட்டர், கீ போர்ட் மற்றும் மவுஸ் கிளீன் செய்கிறோம்.
ஆனால் முக்கியமான மவுஸ் அமரும் மவுஸ் பேடினைச்
சுத்தப்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மிகப் பழைய மவுஸ்
பேடினையே பலரும் பயன்படுத்துகின்றனர். பழசாகிப் போனால்
புதியது வாங்குவது இல்லை. கம்ப்யூட்டர், சிபியு, கீ போர்டு மற்றும்
மவுஸ் ஆகியவற்றிற்கு கவர் போடுகிறோம். ஆனால் மவுஸ் பேடிற்கு
போடுவதில்லை. அதனால் அதிக தூசி, ஆயில் சேர்ந்து மவுஸைக்
கெடுக்கும் பேடாக மவுஸ் பேட் மாறுகிறது.
 
1. உங்கள் மவுஸ் பேட் எதனால் ஆனது என்று பார்க்கவும். துணி
உள்ளாக இருந்து மேலாக பிளாஸ்டிக் அல்லது வேறு ஒரு துணியினால் மூடப்பட்டிருந்தால் சிறிய அளவில் ஷாம்பு மற்றும் ஈரத்துணி
கொண்டு சுத்தப் படுத்தலாம்.

2. மவுஸ் பேடில் பிளாஸ்டிக் டாப் போடப்பட்டிருந்தால் ஏதேனும்
கிளீனிங் லிக்விட் போட்டு சுத்தப்படுத்தலாம். டிஷ் சோப் மற்றும்
ஷாம்பு இதற்கும் பயன்படுத்தலாம்.
 
3. எந்த வழியைப் பயன்படுத்தினாலும் சேர்ந்த அழுக்கு போகும்
வரை சுத்தப்படுத்தவும். பயன்படுத்திய சோப், ஷாம்பு மற்றும்
கிளீனிங் லிக்விட் மொத்தமாகப் போய்விட்டதை உறுதி செய்து
கொள்ளவும். பின் உலர்ந்த டவல் ஒன்று எடுத்து அழுத்தி
துடைக்கவும். இதில் ஏதேனும் நீர் உள்ளே சேர்ந்திருந்தால்
வெளியேறி வர வேண்டும். அனைத்து நீரும் வெளியேறியதை
உறுதி செய்தபின் மவுஸ் பேட் முற்றிலுமாக உலர்ந்த நிலையில்
மீண்டும் பயன்படுத்தலாம். உங்கள் மேஜை மர மேஜையாக
இருந்தால் ஒரு சொட்டு நீர் கூட இல்லாத வகையில் பார்த்துக்
கொள்ள வேண்டும்.

4. எதுவுமே செய்ய முடியாத நிலையில் அழுக்கேறிப் போய்
வளைந்த நிலையில் அல்லது ஓரங்களில் மேல் கவர் பிரிந்து
உள்ளே இருக்கும் துணி அல்லது பிளாஸ்டிக் உரிந்து போகும்
நிலையில் இருந்தால் தயவு செய்து புதிய மவுஸ் பேட் ஒன்று
வாங்கிப் பயன்படுத்தவும்.

5. மேலே கூறிய சுத்தப்படுத்தும் வழிகளை மேற்கொள்ளும்
முன் உங்கள் மவுஸ் பேடின் கலர் நீர் பட்டு சாயம் போகிறதா
என்று பார்த்துக் கொள்ளவும். அப்படிப் போகும் பட்சத்தில்
தண்ணீர் விட்டுச் சுத்தப்படுத்தாமல் வேறு வழிகளைக்
கையாள வேண்டும்.

சரி இந்த மவுஸ் பேட் உலரும் நேரத்தில் மவுஸ்
பயன்படுத்தாமல் இருக்கிறோமே? என்ன செய்யலாம்?
என்று யோசிக்கிறீர்களா? மவுஸைச் சுத்தப்படுத்துங்கள்.
உங்களுடைய மவுஸ் கீழாக பழைய பந்துருண்டை
கொண்ட மவுஸ் என்றால் அதனைச் சுற்றி இருக்கும்
வளையத்தை நேர் மாறாகச் சுழற்றினால் வளையம்
விலக பந்து கைக்கு வரும். நிச்சயமாய் அந்த பந்துருண்டையில்
கருப்பு தூசு அழுக்கு சேர்ந்திருக்கும். இதனை சிறிது தண்ணீர்
அல்லது பிளாஸ்டிக் கெடுக்காத கிளீனர் கொண்டு நன்றாகச்
சுத்தப்படுத்தவும். சுத்தப்படுத்திய பின்னர் அதனை உருளாத
இடத்தில் வைத்து உலர வைக்கவும். அந்த நேரத்தில்
உருண்டை இருந்த இடத்தை நோக்கினால் இரு சிறிய கம்பி
ஒன்றுக்கொன்று மாறான திசையில் வைக்கப்பட்டிருக்கும்.
இதிலும் தூசு, தலைமுடி, நார் போன்றவை ஒட்டியிருக்கலாம்.
அதனை மெதுவாக முழுவதுமாக எடுத்துவிட்டு அந்த கம்பியைச்
சாதாரண துணி கொண்டு சுத்தப்படுத்தவும். பின் உலர்ந்த
பந்துருண்டையைப் போட்டு வளையத்தை மேலாக வைத்து
மூடி மவுஸைப் பயன்படுத்த தொடங்கலாம். ஆனால்
இப்போது மற்ற இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டதால் கிளிக்
செய்திடும் இடம் உங்களுக்கு அசிங்கமாக அழுக்காக
தோற்றமளிக்கும். இதனையும் சற்று ஈரத்துணி கொண்டு
ஈரம் உள்ளே போகாமல் சுத்தப்படுத்தலாம். நன்றாக
அனைத்தும் உணர்ந்த பின்னர் பயன்படுத்தலாம். இவை
அனைத்தையும் செய்த பின்னர் நீங்கள் பயன்படுத்தும்
மவுஸ் பேட் அல்லது மேஜை மேல்புறம் சுத்தமாக
இருப்பதையும் உறுதி செய்து கொண்டு பயன்படுத்துங்கள்.
இல்லையேல் மவுஸை மட்டும் சுத்தம் செய்து
புண்ணியம் இல்லீங்க.
நீங்கள் ஆப்டிகல் மவுஸ் பயன்படுத்துபவரா?
அப்படியானால் உங்கள் மவுஸைத் முதலில்
தலைகீழாகப் புரட்டிப் போடவும். இதன் கால்கள்
போன்று நான்கு சிறிய பேட் நான்கு முனைகளிலும்
இருக்கும். இதில் ஏதேனும் சிறிய துகள் ஒட்டியிருந்தால்
எடுத்துவிடவும். மேலே கூறியது போல இந்த
முனைகளையும் நன்கு சுத்தம் செய்து உலர விட்டுப்
பின் பயன்படுத்தவும்.
மவுஸ் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மிக
முக்கியமானது. மவுஸ் இயக்கம் சரியாக
இயங்கவில்லை என்றால் கம்ப்யூட்டரை
வேகமாக இயக்க முடியாது. எனவே
அதனையும் அவ்வப்போது கண்டு கொள்வது நல்லது.


  gphpaKld; fUzhfud;.

Tuesday, 10 August 2010

computer vires

தானாக வரும் வைரஸை எப்படி தடுப்பது




நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. வேலியில் ஓடும் ஓணானை எடுத்து காதிலே விட்டுக் கொண்டு பின் குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்? என்று பலரால் சொல்லப்படும். பாட்டு, படம் ஏன் முக்கிய பைல் உள்ளது என்று அதனை மாற்ற வேண்டி ஏதாவது ஒரு சிடியை அதன் டிரைவில் போட்டு விடுவோம்.

பொதுவாக ஒரு சிடியை டிரைவில் போட்டவுடன் அது தானாக இயங்கி பைல்களின் போல்டர்களைக் காட்டி திறக்கவா எனக் கேட்கும். பாடல்களுக்கான பைல்கள் இருந்தால் அதனை இயக்கும். அல்லது அதிலேயே உடன் இயக்கும் வகையில் Auto Play / Auto Run என்ற வசதி தரப்பட்டிருந்தால் இயங்க தொடங்கும். இந்த வசதி எதனையும் உடனே இன்ஸ்டால் செய்திடத் தொடங்கும். இங்குதான் வினையே உள்ளது. இவ்வாறு நல்ல பைல்களின் இயக்கம் தொடங்குகையில் உடனே வைரஸ் உள்ள சிறிய பைல்களும் கம்ப்யூட்டருக்கு மாறி அதன் நாச வேலையைத் தொடங்கிவிடும். ஏன், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமினை இயக்கி சிடியில் வைரஸ் உள்ளதா என்று சோதனை செய்திருக்கலாமே என்று எண்ணுகிறீர்களா. இங்கு தான் நம்மை செயல்படவிடாமல் Auto Play  வைரஸை அனுப்புவது தெரியாமல், அதற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இதற்கு என்ன செய்திடலாம்? செயல்பாட்டினை நிறுத்திவிட வேண்டியதுதான். எப்படி? நிறுத்த முடியுமா? என்று தானே கேட்கிறீர்கள். கீழ்க்கண்டவாறு செட் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் உங்கள் சிடி டிரைவிற்கான ஐகானில் ரைட் கிளிக் செய்திடுங்கள். அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதில் Auto Play  என்ற டேபினைத் தேர்ந்தெடுங்கள். இங்கே நீங்கள் பயன்படுத்தக் கூடிய பல்வேறு மீடியாக்களுக்கான செட்டிங்ஸ் அமைக்கலாம். இதில் இயக்கத்தை நிறுத்திவிட்டால் நீங்கள் பயன்படுத்தும் மீடியா தானாக இயங்காது. ஆனால் இது 100 சதவிகிதம் பாதுகாப்பானதா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் வைரஸ் அனுப்பும் ஹேக்கர்கள் இதனையும் மாற்றிவிடும் அல்லது ஏமாற்றிவிடும் வல்லமை படைத்தவர்களாக இருக்கின்றனர். மேலும் ஆட்டோ பிளே இயக்க முடியாமல் செய்திருந்தாலும், பொதுவாக அந்த டிரைவில் டபுள் கிளிக் செய்தால் ஆட்டோ ரன் பைலில் இயக்குவதற்கான கட்டளை இருந்தால் அது தானாக இயக்கப்படும். எனவே எந்த சிடி அல்லது பிளாஷ் டிரைவ் போட்டாலும் அதனை உடனே இயக்காமல் வைரஸ் செக் செய்த பின்னரே இயக்க வேண்டும்.
 gphpaKld; fUzhfud;.

Monday, 9 August 2010

google


 
$Fs;epWtdKk; mjd; tsh;rpAk;.

.   கூகுள்நிறுவனம்  கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம்.
 
1995 – லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin)   ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.
1996 – பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் சர்ச் இஞ்சினை வடிவமைக்கின் றனர். இணைய தள லிங்க்குகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது.

1997 – கூகுள். காம் பதிவு செய்யப்படுகிறது. சன் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஆண்டி (Andy Bechtolsheim)  கூகுள் நிறுவனத்தில் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்கிறார். கூகுள் கார் ஷெட் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர் 7ல், அதன் முதல் பிறந்த நாளில், கூகுள் அறிந்தேற்பு பெறுகிறது.

1999 – கூகுள் நிறுவனம் தொழிலில் வர்த்தக ரீதியாக புது முயற்சி செய்பவர்களுக்கான முதலீடு 2 கோடியே 50 லட்சம் டாலர் பெறுகிறது. 8 ஊழியர்களுடன் முழுமையான ஓர் அலுவலகத்தினை மவுண்ட்டன் வியூ என்ற இடத்தில் அமைக்கிறது.

2000 – குகூள் முதன் முதலாக அட் வேர்ட்ஸ் என்னும் விளம்பரப் பிரிவினை அமைக்கிறது. யாஹூ கூகுள் சர்ச் இஞ்சினைத் தன் தேடல் சாதனமாக அமைத்துக் கொள்கிறது. பத்து மொழிகளில் கூகுள் வெளிவருகிறது. உலகின் மிகப் பெரிய வேகமான தேடல் சாதனமாக கூகுள் இடம் பிடிக்கிறது.

2001 – கூகுள் நிறுவனத்தின் தலைவராக எரிக் ஸ்மித் ஆகிறார். பேஜ் மற்றும் பிரின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இருபிரிவுகளுக்கு ஒவ்வொருவரும் தலைவராகின்றனர். கூகுள் தேஜா. காம் நிறுவனத்திலிருந்து 1995 ஆண்டிலிருந்து வெளியான 50 கோடி தகவல்களைப் பெறுகிறது.

2002 – கூகுள் லேப்ஸ், கூகுள் நியூஸ் (4000 செய்தி தொடர்புகளுடன்) மற்றும் ப்ரூகுள் (Froogle)  தொடங்கப்பட்டன. அமெரிக்க இணைய தள நிறுவனமான ஏ.ஓ.எல்.  (AOL)  குகூள் தேடு தளத்தைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறது.

2003 – அமெரிக்காவில் இயங்கும் டயலக்ட் சொசைட்டி (வட்டார மொழி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம்) 2002 - ஆம் ஆண்டில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல் கூகுள்” எனக் கண்டு அறிவிக்கிறது. பிளாக்குகளின் காரணகர்த்தா வான பைரா லேப்ஸ் நிறுவனத்தை கூகுள் பெறுகிறது.

2004 – மூலதன நிதி திரட்ட பங்கு ஒன்று 85 டாலர் என்ற விலையில் பங்குகளை கூகுள் வெளியிட்டது. இமெயில் சேவை ஜிமெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இத்துடன் டெஸ்க் டாப் சர்ச் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பைகாஸா நிறுவனம் வாங்கப் பட்டது. அதன் தேடல் தொகுப்பு அட்டவணையில் உள்ள 600 கோடி ஐட்டங்கள் கூகுள் சர்ச் இஞ்சினுக்கு இணைந்தன.

2005 – கூகுள் எர்த், கூகுள் டாக், கூகுள் பேஸ் மற்றும் கூகுள் பிளாக் சர்ச் ஆகியவை தொடங்கப்பட்டன. கூகுள் ரீடர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஃபீட் ரீடர் அறிமுகமானது. கூகுள் அனலிட்டிக்ஸ் என்ற இணைய தள ஆய்வு சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

2006 – யு–ட்யூப் நிறுவனம் கையகப்படுத்தப் பட்டது. காலண்டர், ஜிமெயில் மொபைல் மற்றும் கூகுள் பைனான்ஸ் ஆகியவை உருவாகி வெளியாயின. கூகுள் செக்அவுட் வர்த்தக நோக்கில் தரப்பட்டது. ஒரு சில பயனாளி களுக்கென கூகுள் பேஜ் கிரியேட்டர் வடிவமைக் கப்பட்டு தரப்பட்டது. ஒரு சில பிரச்சினை களுக்குப் பின் சீனாவில் கூகுள் நுழைந்தது.

2007 – டபுள் கிளிக் என்னும் விளம்பர நிறுவனத்தை கூகுள் வாங்கியது. ஜைக்கு என்னும் சோசியல் மொபைல் நிறுவனத்தினயும் பெற்றது.

2008 – கூகுள் பிரவுசர் குரோம் வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகின் மொத்த பிரவுசர் பயன்பாட்டில் 1 % மக்களிடம் சென்றது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விக்கிபீடியாவிற்கு இணையாக கூகுள் நால் (Google Knol)  வெளியானது.

மைக்ரோசாப்ட் / கூகுள் யார் பெரியவர்? :
தகவல் தொழில் நுட்ப உலகில் எதாவது நடந்தால் உடனே அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மோதலாகத்தான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தொடங்கி 10 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.
 

மனிதனின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த நிறுவனம் மைக்ரோசாப்ட். எம்.எஸ்.டாஸ், எம்.எஸ். ஆபீஸ், விண்டோஸ், ஹாட்மெயில், விசுவல் ஸ்டுடியோ, மைக்ரோ சாப்ட் டெவலப்பர் நெட்வொர்க், டாட் நெட் பிரேம் ஒர்க், விண்டோஸ் மொபைல், பலராலும் இன்று விளையாடப்படும் கேம்ஸ், (Age of Empires, Halo, Microsoft Flight Simulator)   எம்.எஸ்.என். லைவ் மெசஞ்சர், விஸ்டா தொழில் நுட்பம் என கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் உலகை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த நிலைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட் தான். இருப்பினும் சர்ச் இஞ்சின் என்பதனைத் தன் கையில் எடுத்து அதில் எவரெஸ்ட்டைத் தொட் டது குகூள்தான். அதனையே கம்ப்யூட்டரின் அடிப்படையாக அமைக்கத் தொடர்ந்து பாடு படும் குகூளின் திட்டம் ஒரு நாள் வெல்லலாம். அன்று மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டரின் நிலையையே மாற்றலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அடேயப்பா! கூகுள் :
அடேயப்பா! கூகுள் அப்படி என்ன கூகுள் செய்திருக்கிறது, அடேயப்பா! என்று தலைப்பு கொடுக்கிறீர்கள்? என்ற கேள்வியுடன் நிச்சயம் இதனைப் படிக்க உட்காருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கூகுள் ஒரு ஆன்லைன் லைப்ரேரி வைத்திருப்பதை அறிவீர்கள்.
 
இதனை விரிவாக்கம் செய்கிறது கூகுள். பல நூறு கோடிக்கணக்கில் வெளியான செய்தி கட்டுரைகள் அனைத்தையும் இணைய ஏற்றம் செய்திட இருக்கிறது. 244 ஆண்டுகளாக எழுதப்பட்ட கட்டுரைகள் ஏற்றப்பட இருக்கின்றன என்பது நமக்கு ஆச்சரியம் தானே. இதனை நாம் வழக்கம்போல் தகவல் தேடல் மூலம் படிக்கலாம். பத்திரிக்கைகளில் எப்படி கட்டுரைகள் அச்சிடப்பட்டு இருந்தனவோ அதே போல இந்த கட்டுரைகள் வெளியிடப்படும். இந்த வெப் தளங்களுக்கு நிச்சயம் ஹிட் ரேட் மிக அதிகமாக இருக்கும். அதனால் இதில் காணப்படும் விளம்பரங்கள் வழியே கூகுள் நிறுவனத்திற்கு வருமானம் பெருகும். எந்த பத்திரிக்கை வேண்டும் என்றாலும் தங்கள் கட்டுரைகளை இலவசமாக வெளியிட கூகுள் நிறுவனத்திற்கு வழங்கலாம். அந்த கட்டுரைகளை இந்த ஆன்லைன் ஆவணக் காப்பகத்தில் ஏற்றிட ஆகும் செலவினை கூகுள் ஏற்கும். இந்தக் கட்டுரைகளின் அருகே காட்டப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி இந்தக் கட்டுரைகளைக் கொடுத்த பத்திரிக்கைக்கு வழங்கப்படும். சரித்திர நிகழ்வுகளை அறிய விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பத்திரிக்கைகள் தங்கள் பழைய கட்டுரைகளை வெளியிடவும் வருமானம் பெறவும் ஒரு வழியாக இது அமைகிறது.

கூகுள் குரோம் டிப்ஸ்

குரோம் இயங்கத் தொடங்கி சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் அதன் ரசிகர்கள் பலர் தங்கள் பிளாக்குகளில் குரோம் பிரவுசருக்கான டிப்ஸ் அன்ட் டிரிக்ஸ் தந்துள்ளனர். அவற்றில் சில இங்கு பட்டியலிடப்பட் டுள்ளன.

1. பார்வேர்ட் அல்லது பேக்வேர்ட் தளங்களுக்குச் செல் லும் பட்டன்களில் ரைட் கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே சென்றுள்ள தளங்களின் பட்டியலைக் காணலாம்.

2. குரோம் தனக்குள்ளேயே ஒரு கன்வெர்டர் சாதனத்தைக் கொண்டுள்ளது. அதன் அட்ரஸ் பாரில் “7 feet in cms”  என டைப் செய்து என்ன நடக்கிறது என்று பாருங்கள். நீங்கள் கொடுத்த எண்ணின் மதிப்பு கேட்கும் மதிப்பில் கிடைக்கும்.

3. இறுதியாக குளோஸ் செய்த டேப்பிற்கான தளம் வேண்டுமா?  Ctrl+Shift+T  கீகளை அழுத்தவும். (இது பயர்பாக்ஸிலும் பயன்படும்)

4. ஒரு டெக்ஸ்ட் பாக்ஸின் இடத்தை இன்னும் விரிவுபடுத்த அதன் கீழ்ப்பாகத்தில் வலது மூலையை இழுக்கவும்.

5. பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தின் என்ன என்ன இணையதளத் தொழில் நுட்ப கூறுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிய வேண்டுமா? தளத்தில் ரைட் கிளிக் செய்து Inspect Element   என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதில் இமேஜஸ் மற்றும் பல ஸ்கிரிப்டுகள் குறித்த தகவல்களும் கிடைக்கும்.

6. ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற் குள்ளாக எதனையாவது தேடிப் பெற வேண்டுமென்றால், அந்த தளம் ஓப்பன் சர்ச் சப்போர்ட் செய்திடும் எனில், அந்த தளத்திற்கு முதலில் செல்லுங்கள். பின் மீண்டும் அந்த தளத்தின் பெயரை டைப் செய்திடுங்கள். இப்போது தளத்தின் பெயர் தேடப்படும் ஒரு சொல்லாக மாறிவிட்டது. இனி டேப் அழுத்த ஒரு ஆப்ஷன் தரப்படும். டேப் அழுத்தி உங்கள் தேடல் கேள்வியை என்டர் செய்திடவும். இனி உங்கள் தேடல் செயல்படுத்தப்படும்.

8. அட்ரஸ் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் உஞீடிt ண்ஞுச்ணூஞிட ஞுணஞ்டிணஞுண் என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் குரோம் தரும் கூகுள் சர்ச் இஞ்சினுக்குப் பதிலாக வேறு ஒரு சர்ச் இஞ்சினை அமைக்கலாம். உங்களுடைய கம்ப்யூட்டர் இயங்கும் இடத்திற் கேற்றபடி மேலும் பல (கூல், குருஜி போன்றவை) சர்ச் இஞ்சினை குரோம் உங்களுக்கு எடுத்துக் கொடுக்கும்.

9.பைலை டவுண் லோட் செய்கிறீர் களா? மானிட்டரின் இடது கீழாக அந்த பைல் காட்டப்படும். இந்த பைலை அப்படியே மவுஸ் கர்சரால் இழுத்து வந்து நீங்கள் விரும்பும் டைரக்டரியில் விட்டுவிடலாம்.

10. அருமையான ஒரு விஷயத்தை குரோம் தருகிறது. ஒரு வெப் பக்கத்தை தனி ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் போல இயக்குவதற்கான வழி தருகிறது. எடுத்துக் காட்டாக நீங்கள் குகூள் தளத்தை தனி ஒரு அப்ளிகேஷன் போல பிரவுசரிலிருந்து தனியே இயக்க விரும்புவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுவே! ஜிமெயிலை குரோம் பிரவுசரில் திறக்கவும்.   New   என்பதில் கிளிக் செய்திடவும். பின்  Create application shortcuts  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஜிமெயில் இணைய தளத்தினை நேரடியாகத் திறந்திட ஒரு ஷார்ட் கட் உருவாக்க ஆப்ஷன் தரப்படும். இந்த ஷார்ட் கட்டினை டெஸ்க் டாப்பில் பதிந்து வைக்கவும். பின் இந்த ஜிமெயில் ஐகானைக் கிளிக் செய்து நேரடியாக தளத்திற்குச் செல்லலாம். இது எந்த வெப் பேஜுக்கும் பொருந்தும்.

gphpaKld; fUzhfud;.

Thursday, 5 August 2010

dysentary

tapw;Nwhl;lk;

tapw;Nwhl;lk; vd;gJ
xUtH xU ehisf;F 3 jlitfSf;F Nkyhf my;yJ $Ljyhd jilt ePH jd;ikahf kyk; fopj;jy; tapw;Nwhl;lk; vdg;gLk;.


,J 3 tifg;gLk;> mitahtd
  1. ePH jd;ikahdJ.
  2. ,uj;j jd;ikahdJ.
  3. njhlHr;rpahd tapw;Nwhl;lk;.


tapw;Nwhl;lk; Vw;gLtjw;fhd fhuzk;
·        kykhdJ czT> ePUld; fyg;gjpdhy;.
·        gOjile;j czT tiffs; my;yJ gOjile;j ePiu mUe;Jtjhy; Vw;gLfpd;wJ.

ePH jd;ikahd tapw;Nwhl;lk;:
     ,J NkYk; ,U tifg;gLk; mitahtd
·        ,J kyj;Jld; ePH jd;ik Nghd;W fhzg;gLk;.
·        ,J kyj;Jld; muprp fOtpa jz;zPH Nghd;W fhzg;gLk;.

,uj;j jd;ikahd tapw;Nwhl;lk;:
     ,J kyj;Jld; ,uj;jKk; fye;j fhzg;gLk;.

njhlHr;rpahd tapw;Nwhl;lk;.
,J ,uz;L thuj;jpw;F Nkyhf kyj;Jld; ePH my;yJ ,uj;jKk; NrHe;J njhlHr;rpahf ntspNaWjy; ,JthFk;.



,t; 3 tifahd tapw;Nwhl;lj;jpw;fhd rpfpr;ir Kiwfs;

ePH jd;ikahd tapw;Nwhl;lk;:
,uj;j jd;ikahd tapw;Nwhl;lk;:
njhlHr;rpahd tapw;Nwhl;lk;.

  • [PtdP
  • czT
  • Xa;T
  • Foe;ijfshapd; njhlh;e;J jha;ghYhl;ly;.



  • kUe;J
   (fpUkpnfhy;ypfs;)
  • [PtdP
  • czT
  • Xa;T


  • kUe;J
   (fpUkpnfhy;ypfs;)
  • [PtdP
  • czT
  • itj;jparhiyapyNrh;j;jy;



[PtdP(ORS) vd;gJ
ePhpog;gpid nra;Ak; epthudpahFk;. ,J tapw;Nwhl;lj;jpdhy; Vw;gLk; cly; tul;rpf;F tha;%yk; Nkw;nfhs;sg;gLk; xU rpfpr;ir KiwahFk;. ,jpy; fdpAg;gf;fs; mlq;fpapUg;gjdhy; clypypUe;J ,of;fg;gLk; fdpAg;Gf;fis <Lnra;Ak; xU epthuzpahFk;.


[PtdP(ORS) I jahupf;Fk; gbKiwfs;.

1.   Rj;jkhd xU ghj;jpuj;jpDs; xU yPw;wH nfhjpj;jhwpa ePhpid vLj;jy;.(200ml msT nfhz;l NjdPH mUe;Jk; fg;gpdhy; 5 fg; nfhjpj;jhwpa ePH)
2.  [PtdP(ORS) gf;nfl;bypUf;Fk; J}s; KOtjpidAk; ghj;jpuj;jpypUf;Fk; ePhpDs; ,lTk;.
3.  gpd; J}s; ed;F fiuAk; tiu ed;whf fyf;fTk;.
4.  gpd;G Nehahspf;F jhfk; jzpAk; tiu ,e;j fyitapid nfhLf;fTk;.
5.  Foe;ijfSf;F NjdPH fuz;bapdhy; ,t; [PtdP(ORS) fyitapid toq;f Ntz;Lk;.
6.  ,f; fyitapid 24 kzp Neuj;jpw;F Nky; itj;jpUf;ff;$lhJ.


Fwpg;G:
,t; [PtdP(ORS) fyitapid toq;Fk; NghJ Nehahspapd; fz; GUtq;fs; tPq;FtJ njupe;jhy; [PtdP(ORS) nfhLg;gjpid epWj;jp tplTk;.


[PtdP(ORS) rhjhuzkhf gUFtjw;Ff; nfhLf;fNtz;ba msTfs;

taJ
24 kzpNeuj;jpw;Fs; nfhLf;fNtz;ba msT
6 khjq;fSf;F fPo;
¼ yPl;lH ½ yPl;lH tiu(1¼  fg; lk;sH)
6 khjq;fs; njhlf;fk; 2 taJ tiu
½ yPl;lH 1 yPl;lH tiu(5 fg; lk;sH)
2 taJ Kjy; 5 taJ tiu
¾ yPl;lH 1½ yPl;lH tiu(7½ fg; lk;sH)
5 tajpw;F Nky;
Njitahd msT.


[PtdP(ORS) gf;nfl; ,y;yhj re;jHgj;jpy; tPl;by; [PtdP(ORS) jahupf;Fk; Kiw ([PtdP(ORS) gjpyPL)

Njiyahd nghUl;fs;:
  1. 1 yPl;lH nfhjpj;jhwpa ePH.
  2. 8 Njf;fuz;b rPdp.
  3. 1 Njf;fuz;b cg;G.

nra;Kiw:
 1 yPl;lH nfhjpj;jhwpa ePhpid Rj;jkhd ghj;jpuj;jpDs; ,l;L mjDs; 8 Njf;fuz;b rPdpiaAk; 1 Njf;fuz;b cg;gpidAk; ,l;L ed;whf ,f; fiury; fiuAk; tiu ed;whf fyf;fTk;. gpd; ,jid Nehahspf;F Njitf;F Vw;w thU toq;fshk;. ,f; fyitAld; thiog;goj;jpidAk; cz;z nfhLf;fyhk;.



tapw;Nwhl;lj;jpdhy; gPbf;fg;gl;l Nehahspapid guhkupj;jy;

  1. Nehahspapid jdpikg;gLj;j Ntz;Lk;.
  2. Nehahspf;F NghjpasT ePHuhfhuq;fis toq;Fjy; Ntz;Lk;.
  3. Nehahspapd; kyk; jFe;j Kiwapy; mfw;Wjy; Ntz;Lk;.
  4. jha; ghy; Fbf;Fk; Foe;ijfshapd; njhlHe;J jha;g;ghy;Y}l;Ljy; Ntz;Lk;. Fwpg;ghf 6 khjq;fSf;F cl;gl;l gps;isfshapd; jha;ghypidf; fl;lhak; nfhLf;f Ntz;Lk;. 6 khjq;fSf;F Nkw;gl;l Foe;ijfshapd; jha;ghY}ld; ,yFtpy; rkpghlilaf;$ba cztpidAk; toq;Fjy; Ntz;Lk;.
  5. Nehahspf;F NghjpasT Xa;T toq;Fjy; Ntz;Lk;.
  6. Nehahspapd; jdpegH Rfhjhuj;jpid ftdj;jpy; nfhs;s Ntz;Lk;.

Fwpg;G:
tapw;Nwhl;lj;jpdhy; gPbf;fg;gl;ltH xU jha;g;ghY}l;Lk; jhahf ,Ug;gpd; mtH jd; Foe;ijf;F toik Nghy; jha;g;ghY}l;lyhk;.

tapw;Nwhl;lj;jpid jLf;Fk; topfs;

·        kyk; fopg;gjw;F kyry$lj;jpidg; gad;gLj;Jjy; Ntz;Lk;.
·        Rfhjhukhz Kiwapy; iffis rtw;fhuk; ,l;L fOTjy; Ntz;Lk;.
·        gOjile;j czT tiffis cztpy; NrHj;Jf;nfhs;tjid jtpHj;jy;.
·        nfhjpj;jhwpa ePhpid mUe;Jjy; Ntz;Ljy;.(ghJfhg;ghd ePH)
·        jdpegH Rfhjhu Kiwfisf; filgpbf;f Ntz;Lk;.
·        Rw;WGw #oiy Rj;jkhf itj;jpUj;jy; Ntz;Lk;.

kPz;Lk; re;jpg;Nghk;

gphpaKld; fUzhfud;.



Followers

பார்வையாளர்கள்.

twitter

karunaharann.blog

Popular Posts

பொழுதுபோக்கு – Google செய்திகள்

Blog Archive